×

Error message

  • Notice: Undefined variable: node in eval() (line 13 of /var/www/html/modules/php/php.module(80) : eval()'d code).
  • Notice: Trying to get property of non-object in eval() (line 13 of /var/www/html/modules/php/php.module(80) : eval()'d code).

பழமொழி இன்பம் - 30

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
இது செல்வந்தர்களின் உலகம். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் இருந்தால்தான் இன்று இவ்வுலகில் வாழவே முடியும். எண்பதுகளைப் பற்றிய என் கவிதையொன்றில் ஒரு வரியை இப்படி எழுதி இருந்தேன் “வேலைக்குப் போகாதவன் தன் வீட்டுக்குப் பாரமாய் இருந்ததில்லை” என்று.

பழமொழி இன்பம் 23

பாத்திரம் அறிந்து பிச்சையிடு 

திரையுலகில் பாக்கியராஜ் கொடிகட்டிப் பறந்த எண்பதுகளுக்குச் செல்கிறோம். அப்போது அவரைச் சுற்றிலும் அவருடைய நண்பர்களும் ஊர்க்காரர்களும் உதவியாளர்களும் கூட்டமாய்ச் சூழ்ந்திருப்பார்களாம். 

பழமொழி இன்பம் - 22

ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...
தான் பாடுபட்டுச் சேர்த்ததை அளந்து பயன்படுத்தும் ஒருவர் பிறத்தியாரின் பொருள் என்றால் அள்ளித் தெளிப்பதைப் பார்க்கலாம். விடுதியில் அறை எடுப்பார்கள். அங்கே மின்சாரத்தை எவ்வளவு வீணடிக்க முடியுமோ அவ்வளவு வீணடிப்பார்கள். கழிப்பறையில் இருக்கையிலும் மின்விசிறி ஓடும்.

பழமொழி இன்பம் 20

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்..

மழை பெய்கையில் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மழைக்கு வாய்ப்பிருக்கையில், அது அவ்வாறே அளவாய்ப் பொழிந்துவிட்டுச் செல்லாது, அளவோடு பெய்யாமல் அடித்து நிமிர்த்துவிட்டுத்தான் போகும். இன்றோடு மழை தீர்ந்தது என்று இருக்கமுடியாது. மறுநாள் மாலையில் இன்னொரு பொழிவு இருக்கும். 

பழமொழி இன்பம் 19

கூத்தாடி கிழக்கே பார்ப்பான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்..

தெற்றென விளங்கும் சொல்லழகுடையவை பழமொழிகள் என்றாலும், விளங்கிக்கொள்ளவே முடியாத மறைபொருள்களோடும் அவை இருக்கின்றன. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் என்னும் பழமொழியை எடுத்த எடுப்பில் விளங்கிக் கொள்ள முடியாது. 

பழமொழி இன்பம் 18

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 

தமிழ்ச்சொற்களில் ஆழ்ந்த பொருளுடைய அருஞ்சொற்களில் ஊர் என்ற சொல்லும் ஒன்று. முற்காலங்களில் இன்னாரை இன்ன ஊரன் என்றே அழைப்பது வழக்கம். திருவாதவூரார், கோவூர்க்கிழார், சிதம்பரனார், பட்டினத்தார், காரைக்கால் அம்மையார் என நம்மவரின் பெயர்களே ஊர்ப்பெயரைத் தாங்கி நிற்கும்.

பழமொழி இன்பம்  - மதில்மேல் பூனைபோல..

பூனை வளர்க்கிறீர்களா? நான் வளர்க்கிறேன். ஒன்றில்லை, நான்கு பூனைகள். அவற்றுள் சில இருக்கும் இடம் துறந்து சென்றுவிடும். மீண்டும் புதிய குட்டிகள் வரவாகும். என்வீட்டு மதில்கள் இருபுறம் எண்பதடி நீளமுடையது. பூனைகள் இவ்வுலகைப் பார்க்க வேண்டுமென்றால் அம்மதில் மீது ஏறி அமர்ந்துகொள்ளும். உப்பரிகையிலிருந்து உலகைக் காணும் அரசனைப்போல் மதில் மேல் குத்தாக அமர்ந்துகொண்டு வீதியில் செல்வோரை எல்லாம் சொக்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும். 

பழமொழி இன்பம் - உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா ?

ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறான் என்பார்கள். ஏனென்றால் ஆட்டுக்கும் நாய்க்கு வைத்ததைப்போல நீண்டதாய் வைத்திருந்தால் என்னாகும்? எந்நேரமும் சிறகடிப்பதைப்போல் வாலை ஆட்டிக்கொண்டேயிருக்கும். அதனால் ஆட்டின் உயிராற்றல் அனைத்தும் வாலாட்டுவதிலேயே வீணாய்ப்போய் ஆடு இறந்துவிடும். அதற்குப் பதிலாக சிறுநுனியளவு வாலை வைத்துவிட்டான். அது எத்தனைமுறை ஆட்டினாலும் எத்துணை விரைவாக ஆட்டினாலும் கேடில்லை. அது உயிர்பிழைத்துக் கிடக்கும். 

பழமொழி இன்பம் - கருவாடு மீனாகாது கறந்தபால் மடி புகாது

வாழ்க்கையின் தொடரோட்டத்தில் என்னென்ன நிகழ்கின்றன, என்னென்ன நிகழ்ந்து கடக்கின்றன, எதை நோக்கி நாம் நகர்ந்து செல்கிறோம் என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே நேரமிருப்பதில்லை. ஆளாளுக்கு எதையோ துரத்திக்கொண்டு ஓடும் வேட்டைநாயைப்போல் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் இன்றுள்ள அருமைகளும் அழகுகளும் உன்னதப் பொழுதுகளும் உணரப்படாமலே கரைந்துவிடுகின்றன. பிறகு ஒருநாள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் நாம் இழந்தவை எத்துணைப் பெரிய நன்மைகள் நலன்கள் என்று வியர்க்க வைக்கின்றன. 

பழமொழி இன்பம் - துறவிக்கு வேந்தன் துரும்பு 

வேந்தன் என்பவன் எல்லாரையும் மிரட்டுவான். அடக்குவான். தனக்கு அடங்கிய குடிகளே தன் மக்கள் என்று நினைப்பான். தான் ஆளப் பிறந்தவன் என்றும் தன்னிடம் அடங்கி வாழவேண்டியவர்கள் பிறர் என்றும் அவன் மனத்தில் நிரந்தர எண்ணம் வீற்றிருக்கும். அதற்கேற்றாற் போலவே, அவனை அண்டியிருக்கும் அனைவரும் நைச்சியமாகவும் நற்சொல் தவறாதவராகவும் இருப்பர். ஏனென்றால் பிற குடிகள் வேந்தனை அண்டி வாழ்கின்றார்கள். தங்களைக் கொள்ளையிட காலம் பார்த்திருக்கும் எதிரிகளிடமிருந்து வேந்தனே காக்கிறான். 

Follow Us on Facebook

அடுத்தது