×

Error message

  • Notice: Undefined variable: node in eval() (line 13 of /var/www/html/modules/php/php.module(80) : eval()'d code).
  • Notice: Trying to get property of non-object in eval() (line 13 of /var/www/html/modules/php/php.module(80) : eval()'d code).

கவிதைகள் சொல்லவா! - கவிஞர் யோகி

நான் என்ற யோகி 

நான் என்ற என்னை 
பல வாறாகக் கிழித்துப் போடுகிறேன் 
சில்லு சில்லாகக் கிழித்து நொறுக்குகிறேன் 

கவிதைகள் சொல்லவா! - குட்டி ரேவதி

Poet Kutti Revathi

கடவுளை இல்லாமல் ஆக்கினேன்!

நவீன தமிழ் இலக்கியத்தில் எப்போதும் ஆகச் சிறந்ததாக கொண்டாடப்படுவது கவிதைகளைத் தான். அத்தகைய சிறப்புமிக்க கவிதைத்தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் குட்டி ரேவதி. கடைக்கோடி தமிழனும் அறிந்து வைத்திருக்கும் பெயரும் கூட.

கவிதைகள் சொல்லவா! - கவிஞர் வே.பத்மாவதி

Poet Padmavthy

சமாதியில் நீதி

'கைத்தலம் பற்றி' என்கிற கவிதைத் தொகுப்பு மூலம், பரவலான கவனம் பெற்றவர் கவிஞர் வே.பத்மாவதி. 'புரட்சியின் உச்சகட்டமா', 'ஜானகி', 'நான் பார்த்த நாட்டுப்புறம்', 'அம்ருதவர்ஷினி', 'இடம் பெயர்ந்தவள்', 'சாலைகளில்' உள்ளிட்ட நாவல்கள் எழுதியுள்ளார். 'நெருங்கி வா முத்தமிடாதே', 'பண்டுவம்', 'அம்மிணி' உள்ளிட்ட படங்களுக்கும் 'கைராசி குடும்பம்', 'பாச மலர்கள்' ஆகிய தொடர்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். பிரபல வார இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

கவிதைகள் சொல்லவா - கவிஞர் பிருந்தாசாரதி

ஞாயிற்றுக்கிழமை  பள்ளிக்கூடம் 

'பறவையின் நிழல்', 'ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம்' ஆகிய இரு கவிதைத் தொகுதிகளின் வழியே கவிதை உலகில் பரவலாக அறியப்படுபவர் பிருந்தா சாரதி. தமிழ்சினிமா ரசிகர்களுக்கு, இவரது பெயர் நன்கு தெரிந்த ஒன்று. 'தித்திக்குதே' படத்தின் இயக்குநர். பிரபல இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம், பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. இயக்குனர், வசனகர்த்தா என்று திரைமுகம் கொண்ட பிருந்தாசாரதியின் வேறொரு முகத்தைக் காட்டுகிறது அவரது கவிதைகள்..

கவிதைகள் சொல்லவா! கவிஞர் மகுடேசுவரன்

Poet magudeswaran

தந்தையைப்போல்வர்

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் மகுடேசுவரனும் ஒருவர். தமிழின் பெருமை பேசும் இவரிடம் இருந்து 11 கவிதைத் தொகுதிகள், 5 கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. திருப்பூரில் வசிக்கும் இவர், ஆடை ஏற்றுமதி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

கவிதைகள் சொல்லவா! - கவிஞர் உமா ஷக்தி

தமிழ் கவிதைகளில் பெண்களின் உலகத்தைப் படைப்பவர்கள் வெகு சிலர்தான். அவர்களில் முக்கியமானவர் கவிஞர் உமா ஷக்தி. வேட்கையின் நிறம், பனிப்பாலைப் பெண், திரைவழிப் பயணம், ஆட்டுக்குட்டி நனைத்த மழை, பூர்ணா உள்ளிட்ட படைப்புகளின் மூலம் நவீன இலக்கிய உலகில் அடையாளம் காணப்படுபவர் கவிஞர் உமா ஷக்தி. பத்திரிகைத்துறையில் தனிக்கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். பெயரிடப்படாத படம் ஒன்றின் மூலம், விரைவில் பாடலாசிரியராகவும் அறிமுகமாக உள்ளார். 

கவிதைகள் சொல்லவா - கவிஞர் குகை மா. புகழேந்தி

‘காற்றுக்குப் பதிலாய்’, ‘வானம் என் அலமாரி’, ‘கவிதை நடையில் நடக்கிறாய்’, ‘பிரியங்களின் குப்பைத்தொட்டி’, ‘மயிலிறகு பூத்த கனவுகள்’, ‘நிறங்கள் பெயர் மாறிவிட்டன’, ‘உனக்கும் எனக்கும் ஒரே மரணம்’, ‘பூக்களாய் உதிரும் எறும்புகள்’, ‘கடைசியாய் பூமிக்கு வந்தேன்’, ‘அகம் புறம் மரம்’, ‘நட்சத்திரங்கள் உதிரும் பின்னிரவு’, ‘பைத்தியக்காரனின் சொற்கள்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளின் மூலம் நவீன இலக்கியத்தில் பங்காற்றி வருபவர் கவிஞர் குகை மா. புகழேந்தி. 

கவிதைகள் சொல்லவா - நெல்லை ஜெயந்தா

திருநெல்வேலி மாவட்டத்தின் இடைப்பகுதியான, குறிஞ்சியும் மருதமும் கூட்டணி அமைத்த அழகிய கிராமமான தேவநல்லூர் என்னும் ஊரில் பிறந்தவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா. அவரைப் போலவே, அவரது கவிதைகளும் மென்மை ரகம். ‘பிரிவோம் சிந்திப்போம்’ படத்தில் ‘இரு விழியோ’ என்ற பாடலை எழுதி, சினிமாத்துறையில் கால்பதித்தவர் இவர்.

கவிதைகள் சொல்லவா - பாடலாசிரியர் அண்ணாமலை 

கவிதைகள் சொல்லவா - பாடலாசிரியர் அண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினிமா பாடலாசிரியர் அண்ணாமலை.  அடிப்படையில், இவர் ஒரு பத்திரிகையாளர். விகடன் குழுமத்தில் நீண்ட ஆண்டுகள் பணியாற்றியவர். பச்சியப்பன் கல்லூரி மாணவரான அண்ணாமலைக்கு, இயல்பிலேயே கவிதைகள் மீது தீராக் காதல் உண்டு.  ஏராளமான கவிதைகள் பிரபல இதழ்களில் பிரசுரம் ஆனபோதும், இதுவரை இவர் எதையும் நூலாக தொகுத்து வெளியிடவில்லை. ஆனால், ஏராளமான பாடல்களைத் தமிழ் சினிமாவுக்கு வழங்கியிருக்கிறார். “குத்துப் பாடலா.. கூப்பிடு அண்ணாமலையை..” என்கிற அளவுக்கு, இவரது பாடல் புனையும் திறமை கோலிவுட்டில் பிரபலம்.

Follow Us on Facebook

அடுத்தது