பேன் தொல்லையா? பழக்கடைக்குப் போங்க!

Wednesday, August 10, 2016

விடுமுறை முடிஞ்சு ஸ்கூல் ஆரம்பிச்சாலே, எல்லா தாய்மார்களுக்கும் கண்ணு கட்டுது. காலையில வாண்டுகளை தூக்கத்துலருந்து எழுப்பி, குளிக்க வச்சு, தலை சீவி, சுத்தமாக ஸ்கூலுக்கு அனுப்புறது ஒருபக்கம் இருந்தாலும், வீட்டுக்கு திரும்பி வர்றப்போ தலை முழுக்க பேன் இருந்துச்சுன்னா கூடுதல் டென்ஷன்தானே! 

உண்மையைச் சொல்லணும்னா, இதுல கலவரமாகுறதுக்கு ஒண்ணுமே இல்லைங்க. விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்களை  பேன்களை ஒழிக்குறதுக்குன்னு விற்பனைக்கு இறக்கியிருக்காங்க. அத்தனையும் ரசாயனம் கலந்ததுங்க. உங்க சிரமம் குறையணும்னு, குழந்தைகளோட கூந்தலில் இருக்குற போஷாக்கை இழந்துடாதீங்க. பேன் தொல்லைக்கான தீர்வு, உங்க வீட்டுலேயே இருக்கு. கொஞ்சம் மெனக்கெட்டீங்கன்னா போதும். கஷ்டப்படாமல், எளிதாகக் கிடைக்கிற எதுவும் நமக்கு நிரந்தரத் தீர்வையோ, பலன்களையோ தராது.

 

இப்போதான் சீதாப்பழ சீசன் வந்துடுச்சே. பழத்தைச் சாப்பிட்டு, அதன் கொட்டைகளை தூக்கிப் போட்டுடாதீங்க. சீதாப்பழ விதைகளை நன்றாக அரைத்து, பூசிக் குளித்தால், பேன் தொல்லை இனிமே இல்லைன்னு ஆகிடும். ஒண்ணு மட்டும் கவனத்துல வச்சிக்கோங்க. குழந்தைகளுக்கு தேய்க்கறப்போ, அவங்க கண்ணுல படாம தேய்க்கணும். கண்கள்ல கொஞ்சம் இறங்கினாலும், ரொம்பவே உறுத்தும், அப்புறம், பிள்ளைங்க உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. இனிமே பேன் வந்தால், நோ டென்ஷன் தானே!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles