சென்னை 28 படம் வந்தபிறகு, தமிழ்நாட்டிலுள்ள எல்லா மைதானங்களும் கிரிக்கெட்டால் நிரம்பியது. டிவி சேனல்களில், கிரிக்கெட் வர்ணனை தமிழில் இடம்பெற ஆரம்பித்தது. சிறிய அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் கூட, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதற்குக் காரணம், லோக்கல் கிரிக்கெட்டை லைவ்வாகக் காட்டிய சென்னை 28 திரைப்படம் மற்றும் இந்தப்படத்தில் வர்ணனையாளராக நடித்த படவா கோபி.
விஞ்ஞான உலகில் தொலைதொடர்பு சாதனங்களின் பங்கு மகத்தானது. தொலைவில் இருப்பவர்களுடன் செய்திகளைப் (படங்கள், எழுத்து, பேச்சு) பகிர்ந்து கொள்ள உதவும் சாதனம் என்பதாலே, அதற்குத் தொலைதொடர்பு சாதனம் என்று பெயர். தொலைதொடர்பு சாதனங்களாக நாம் மிகவும் உபயோகிப்பது தொலைபேசி, கைபேசி, இணையம் போன்றவையே!
October 19, 2016
மனிதனுக்கு இயற்கை தந்த வரங்களில் ஆகச் சிறந்தது தூக்கம் தான். உறக்கமற்ற மனிதனாக ஒருவன் உலவினால், இந்தப் பூமியில் சபிக்கப்பட்டவன் என்றே அவனை அழைக்கலாம். இப்போதெல்லாம், தூக்கமின்மைக்கு மருத்துவர்களை நாடிச்செல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உறங்குவதற்கான மனநிலையையும் தெளிவையும் நாம் பெற வேண்டும். இல்லையெனில், எளிமையான வழி ஒன்று உள்ளது.
October 18, 2016
அழகு என்பது ஒருவனின் தோற்றம், வடிவத்தைச் சார்ந்தது. ஆனால், ஆரோக்கியம் என்பது உள் உறுப்புகளைச் சார்ந்தது. ஆரோக்கியமாக இருப்பவர்கள் அழகாகவும் இருக்கலாம். இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் ஆரோக்கியத்தை விட அழகுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். இன்று, மிகப்பெரிய வர்த்தகம் அழகு சார்ந்த விஷயங்களைச் சுற்றியே நடக்கிறது.
எண்பதுகளில் ஸ்டில்ஸ் ரவி எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு தமிழ்சினிமாவில் இன்றுவரை பிரபலமாக இருப்பவர் ஸ்டில்ஸ் தேனி செல்வம். தன்னுடைய குருவின் பெயரைக் காப்பாற்றி வரும் சிஷ்யர். அவரைச் சந்தித்துப் பேசியபோது...!
மூத்தவர்கள் இளையவர்களின் வாழ்க்கைப்பயணத்திற்கு வழிகாட்டுவார்கள். சில நேரங்களில், இது எதிர்த்திசையிலும் நிகழும். அது உண்மையென நிரூபிக்கும் விதமாக, எழுபது வயதிலும் தன் சொந்தக்காலில் நிற்கிறார் ருக்மணி அனந்தாழ்வான். இப்படியொரு பெருமை கிடைக்கக் காரணம் இவரது பேரன் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
October 7, 2016
ஜோக்கர் என்ற வார்த்தைக்கு, கோமாளி என்று அர்த்தம் கொள்வது நம்மவர்களின் வழக்கம். இவர்கள் மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள். இவர்கள் சர்க்கஸ், கூத்து போன்ற கலைகளோடு தங்களைப் பிணைத்திருப்பார்கள். பொதுவாக, மற்றவர்களால் செய்யமுடிந்த ஒரு செயலை இவர்களால் செய்ய முடியாது. இல்லையென்றால், அதனை மாற்றிச் செய்வார்கள். அதன்மூலம் நகைச்சுவையை ஏற்படுத்துவார்கள். அதுதான் அவர்களது இயல்பு என்று, நாம் எடுத்துக்கொள்கிறோம்.
October 4, 2016
நாம் எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அவ்வாறு முன்னேற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பது நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. நம்மில் பலர், மற்றவர்களின் அறிவுரைகளின் வழி நடக்கிறோம். அதில் ஒன்றும் தவறில்லை. எனினும், அடிப்படையான சில விஷயங்களைத் தவறவிடுகிறோம்.
"இப்போ உலகமே டிஜிட்டல் மயமாகிடுச்சு. ஓவியங்களைத் தத்ரூபமா கணினியிலேயே வரைஞ்சிடுறாங்க. இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாத்தான் பார்க்குறேன். என்னை மாதிரி ஆளுக்கு, அதைப் பயன்படுத்த ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு. அதனாலதான், பேப்பர்ல வரையறதை விடாப்பிடியா பிடிச்சுட்டு இருக்கோம்” என்கிறார் ஓவியர் மார்த்தாண்டம். சின்னத்தம்பி படத்தில் ’எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்..’ என்கிற ஒரு வசனத்தையே பேசி, இன்றுவரை எல்லோராலும் ’சின்னத்தம்பி' மார்த்தாண்டம் என்று அழைக்கப்படுபவர். ஒரு மாலைப்பொழுதில், அவருடன் உரையாடினோம்.
இது ஓர் உலகப் பொதுமொழி. இது நம்முடைய உண்மையான செல்வம். செலவு செய்ய செய்ய குறையாதது இது. நம்முடைய முகவரியாக இருக்கும் புன்னகையே, இத்தனை சிறப்புகளையும் தாங்கி நிற்கிறது.
அம்மாவின் அன்பிற்கு இணை அம்மா மட்டும்தான். ஒரு தாய் கருவுற்றதிலிருந்து அவள் இறக்கும் வரை பிள்ளைகளை பற்றியே கவலைபட்டுக்கொண்டிருப்பாள். விவரம் அறியா வயதில் அவளுக்கு நம்மை அறியாது தொல்லை கொடுப்போம். விவரமறிந்து சம்பாதிக்கும் பொழுது நமக்கு அவளை பற்றி யோசிக்கக் கூட நேரமில்லாமல் இருப்போம்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பது, அவனது சுக துக்கத்தின் ஆதாரமாக இருப்பது உணர்வுகள். இது இல்லை என்றால், ஒருவன் ஜடம் ஆகிறான். உணர்வுகள் இருபாலருக்கும் சமமாகவே இருக்கிறது. கவிஞர்கள் மிகைப்படுத்துவது போல, பெண்களுக்கு மட்டுமே உணர்வுகள் அதிகம் என்பது உண்மையல்ல.
இந்தியாவிலுள்ள மாநிலத் தலைநகரங்கள் எல்லாம் கொலைநகரங்களாக மாறிக் கொண்டிருப்பது சமீபத்திய அவலம். ஒருதலைக்காதலால் தமிழகத்தில் அடுத்தடுத்துக் கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்க, அதேபோன்றதொரு கொடூரம் இந்தியத் தலைநகரம் புதுடில்லியில் நிகழ்ந்தேறியிருக்கிறது. இதுபற்றிய வீடியோ, தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.
நம்முடைய எண்ணங்களும் வாழ்க்கையும், பல நேரங்களில் மற்றவர்களோடு ஒப்பிடும்போது முரண்பாடகத்தான் இருக்கும்.
எந்த ஒரு உயிருக்கும், யாராலும் விலை நிர்ணயிக்க முடியாது. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழக நலனுக்காக நிகழும் மரணங்களை நோக்கும்போது, உயிருக்கு எந்த மதிப்பும் இல்லையோ என்று தோன்றுகிறது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நடந்த ’காவிரி உரிமை மீட்பு பேரணி’ என்ற ஊர்வலத்தின்போது, தீக்குளித்து தன்னை மாய்த்திருக்கிறார் விக்னேஷ் என்ற வாலிபர்.
Copyright © 2016 Manam | Tamil Magazine Online | Latest Tamil News. All Rights Reserved.