கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம்! - 19

சொல்லி வைத்தாற் போல், புஷ்கருக்குச் சென்றால் அங்கிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில் இருக்கும் மவுன்ட் அபுவுக்குச் செல்லாமல் ஊர் திரும்பக்கூடாது என்று சுற்றுலா அமைப்பாளர்கள் அத்தனை பேரும் வற்புறுத்துகிறார்கள். 

கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் -18

Pushkar

புஷ்கரப் பொய்கையிலிருந்து ஐம்பதடி தூரத்தில் பிரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ரத்தினச் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும் செந்தூர கோபுரம் ஆலயத்தைத் தனித்துக் காட்டுகிறது. நுழைவாயிலில் நான்முகனின் வாகனமான அன்னபட்சி! 

கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 17

Lake

சூஃபி துறவி க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி அவர்களின் தர்காவை நோக்கிச் சென்ற சாலை மிகுந்த பரபரப்பாக இருந்தது. வழியெங்கும் வரிசையாக பிரியாணி  மற்றும் பூரி, சப்பாத்தி, பராத்தா கடைகள். காற்றை மசாலா மணம் நிறைத்திருந்தது. கடை வாசலில் வியாபாரிகள் நின்று கூவிக் கூவி அழைத்தார்கள். 

கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! - 16

கன்க்ரோலி துவாரகதீஷ் தரிசனம் முடிந்து ஆலயம் விட்டு வெளிப்பட்டோம். புகழ்பெற்ற பஞ்சதுவாரகை புனிதத்தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் மாலனை, மணிவண்ணன் கண்ணனை,  அகிலத்து அண்ணலை தரிசித்து விட்டோம் என்ற பெருமிதம் நம்மை அறியாமல் நெஞ்சில் குடியேறுகிறது. 

கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் - 15

கொண்டாட வைக்கும் கோபாலன் நாத் துவாரா - ஸ்ரீநாத் மேவார் சாம்ராஜ்யத்தில் சின்ஹாட் என்னுமொரு சிறு கிராமம். கவனிப்பாரற்ற அந்த கிராமத்தில் கிருஷ்ண ஆலயம் ஒன்று எழும் என்றோ, அதில் கிருஷ்ணன் எழுந்தருளுவான் என்றோ, நாத் துவாரா என்ற பெயரில் சின்ஹாட் அகிலப் புகழ் அடையும் என்றோ ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் யாருமே அறிந்திருக்கவில்லை. 

கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் - 14

உதய்பூர் மிக அழகானதொரு நகரம். ரசனைமிக்க ராஜ புதன வம்சத்து அரசர்கள் நகரமெங்கும் கோட்டைகளையும்,  இயற்கை கொஞ்சும் நந்தவனங்களையும், வாவிகளையும் உருவாக்கி மொத்த ஊரையும் கனவு தேசமாக மாற்றியிருக்கிறார்கள். 

கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம்! - 13

ஷாம்லாஜி தரிசனத்துக்குப் பிறகு மீண்டும் பயணம். மதிய உணவுநேரத்தின்போது ராஜஸ்தான் மாநிலத்தின் செழிப்பான, உற்சாகமான உதய்பூரை வந்தடைந்தோம். நகரம் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. முக்காடு அணிந்த புன்னகைப் பெண்கள் சேட்டக் ஸ்கூட்டர்களின் பின்னால் பயணித்தார்கள். சாலைகளில் அனைத்து வாகனங்களும் பாய்ந்து சென்ற போக்குவரத்து வெள்ளம். நடைபாதைகளில் குளிர்நீர், வெள்ளரிக்காய், பான் பீடா, சமூசா, தேனீர், உள்ளாடைகள் என்று என்னென்னவோ விற்பனையாகிக் கொண்டிருந்தன. அத்தனை கடைகளிலும் மக்கள், மக்கள், மக்கள்!

கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 12

கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 12

போதனாவின் பரிதவிப்பையும் திகிலையும் கண்ட கிருஷ்ணர், அவரிடம்  அச்சப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளித்தார். தன்னை கோமதி குளத்தில் ஒளித்து வைக்குமாறு கூறினார்.போதனா கிருஷ்ண விக்கிரகத்தைக் குளத்தில் ஒளித்து வைத்தார். பின், தயிர் ததும்பும் ஒரு பானையைக் கையில் ஏந்திச்சென்று அர்ச்சகர்களைச் எதிர்கொண்டார். உபச்சார வார்த்தைகளுடன் ஒவ்வொருவரையும் வரவேற்றார். 

கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் - 11

கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம் - 11

அருள்மிகு நாகேஸ்வரர் ஆலயம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. வாகனங்கள் வந்து நிற்க, பிரம்மாண்டமான வெட்ட வெளி. விசாலமான வெளிப்பிராகாரத்தில் விஸ்வரூப கோலத்தில் சுதையாலான சிவபெருமான் காட்சி தருகிறார். 

கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 10

கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம் - 10

இல்லம் ஏகுவோருக்கு எல்லாம் வழங்கும் பேட் துவாரகை துவாரகாதீஷ் துவாரகை ஆலயத்தில் கிருஷ்ணனை தரிசித்து விட்டு வெளியே வந்தபோதே, ஆலய வாசலில் ஒரு பண்டா எங்களை வழிமறித்தார். 

 

அடுத்தது