நுட்பவெப்பம் 13

நீங்களே ஒரு cloud உருவாக்கலாம்!

இப்போதெல்லாம் மேகத்துக்கு ஒரே கிராக்கி. விசும்பின் துளி, அதாவது மேகத்திலிருந்து மழைத்துளிகள் விழாவிட்டால் நமக்கு வாழ்க்கையில்லை என்கிறார் வள்ளுவர். அதுபோல, இன்றைய தொழில்நுட்ப உலகமும் மேகத்தை மையமாகக் கொண்டே இயங்குகிறது. கொஞ்சம்கொஞ்சமாக நம் வாழ்க்கையையே தீர்மானிக்கிற ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.

தமிழ்த்தளம் அறிமுகம்: Free Tamil Ebooks

தமிழ்த்தளம் அறிமுகம்: Free Tamil Ebooks

ஆங்கிலத்தில் ஒவ்வொருநாளும் ஏராளமான மின்னூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அச்சுநூல்களோடு ஒப்பிடும்போது, இவை மிகவும் மலிவு. ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்குக்கூட நல்ல மின்னூல்களை வாங்கலாம். பல மின்னூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

நுட்பவெப்பம் -12

நுட்பவெப்பம் -12

குடித்துவிட்டு வண்டியோட்டுவதைத் தடுக்கும் Tru Touch அவர்பெயர் Tommy Duquette, குத்துச்சண்டைவீரர், 2012 ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர். கொஞ்சம்பொறுங்கள். 2016 ஒலிம்பிக்ஸே முடிந்துவிட்டது. இனிமேல் 2012ஐப் பற்றி என்ன பேச்சு? அதுவும் ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளாத ஒரு பேர்வழியைப் பற்றி, இப்போது ஏன் பேச வேண்டும்?

போட்டோகிராபி என்பது கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேலஞ்ச்! - பேஷன் போட்டோகிராபர்  வி.எஸ்.அனந்த கிருஷ்ணா

போட்டோகிராபி என்பது கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேலஞ்ச்! - பேஷன் போட்டோகிராபர்  வி.எஸ்.அனந்த கிருஷ்ணா

விளம்பரம், மாடலிங், திரைப்பட உலகில் அதிகமாகக் கவனிக்கப்படுபவர்களில் வி.எஸ்.அனந்த கிருஷ்ணாவும் ஒருவர். ஜி.வெங்கட்ராம் பாதிப்பிலிருந்து உருவாகியிருந்தாலும், குறுகிய நாட்களிலேயே தனக்கான பாதையை உருவாக்கிக் கொண்டவர். அவரை மனம் இதழுக்காகச் சந்தித்தோம்!

தமிழ் அப்ளிகேஷன் விமர்சனம்- இ-நூல்

தமிழ் அப்ளிகேஷன் விமர்சனம்- இ-நூல்

தமிழில் கதைகள் படிக்க, ஒரு ஆப்ஸ்!

மொபைலில் கதை படிக்கும் அப்ளிகேஷன்கள், தமிழில் நிறையக் கிடைக்கின்றன. ராமாயணம், மகாபாரதத்தில் தொடங்கி பொன்னியின் செல்வன், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், நாடுகளின் சரித்திரங்கள் என்று பலவற்றையும் செல்போனிலேயே வாசிக்கலாம்.

நுட்பவெப்பம் - 11

நுட்பவெப்பம் - 11

பார்வையில்லாதவர்கள் புத்தகம் வாசிக்க முடியுமா?

அதற்குதான் ப்ரெய்லி இருக்கிறதே. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட புத்தகங்களைப் பார்வையில்லாதோர் தொட்டுத்தொட்டு வாசிக்கலாம். ஆனால், எல்லாப் புத்தகங்களும் ப்ரெய்லி முறையில் வெளியாவதில்லை. அதற்கான செலவு அதிகம் என்பதால், சில நூல்கள் மட்டுமே இவ்வகையில் கிடைக்கின்றன. இதனால், பார்வையில்லாதோர் நினைத்ததையெல்லாம் வாசிக்க இயலாது, கிடைப்பதை மட்டுமே வாசிக்கலாம்.

தமிழ் அப்ளிகேஷன் அறிமுகம்

 தமிழ் அப்ளிகேஷன் அறிமுகம்

முன்பெல்லாம் போட்டித்தேர்வு எழுதுகிறவர்களிடம், 'தினமும் செய்தித்தாள்களைப் படி' என்று அறிவுரை சொல்வார்கள். ஆனால் இப்போது, 'மொபைல்போனைப் பாரு!' என்கிறார்கள்.

நுட்பவெப்பம் - 10

நுட்பவெப்பம் - 10

செல்போனில் மூழ்குவதைத் தடுக்கும் Yondr

"கபாலி" வெளியாவதற்கு முன்பே, அதில் இடம்பெற்ற ரஜினிகாந்தின் அறிமுகக்காட்சி வெளியாகிவிட்டது. அன்று முழுக்க, லட்சக்கணக்கானோர் அதை வாட்ஸாப்பில் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு, அது சட்டவிரோதமான செயல் என்பது தெரியாது. ஒருவேளை தெரிந்தாலும், 'எல்லாரும்தானே செய்யறாங்க' என்கிற அலட்சியம்.

நுட்பவெப்பம் - 8

நுட்பவெப்பம் - 8

இந்த மாதம் உங்கள் மொபைல் போன் பில் எவ்வளவு? இப்படிக் கேட்டால் பலரும் "அதை ஏன்யா கேட்கறே 'என்றுதான் சலித்துக் கொள்வார்கள். '3ஜிக்கும் 4ஜிக்கும் பணம் 100ஜி வேகத்துல செலவாகுது!' 
மொபைல் போன் வழியே பயன்படுத்தும் 3ஜி, 4ஜி தரவு (Data) இணைப்புகளோடு ஒப்பிடும்போது, WiFi இணைப்புகளின் வேகம் அதிகம், செலவு குறைவு. ஆனால், செல்லும் இடத்திலெல்லாம் WiFi இருக்காதே, என்ன செய்ய?
 
 

தமிழ் அப்ளிகேஷன் விமர்சனம்

தமிழ் அப்ளிகேஷன் விமர்சனம்

மொபைல் அப்ளிகேஷன்கள் பொதுமக்களுக்கான நிலையிலிருந்து துறைசார்ந்த நிலைக்கு நகரத் தொடங்கியிருக்கும் நேரம் இது. ஆசிரியர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வங்கிப்பணியிலுள்ளோர், விற்பனைப் பிரதிநிதிகள் என்று பலதரப்பட்டோருக்கான அப்ளிகேஷன்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.
 

அடுத்தது