ஒற்றைக்கொம்பன்கள் - 2

வாடகை கொடுக்க முடியாதவர்கள் கோடீஸ்வரர்கள் ஆன கதை!

வாடகைதரக் காசில்லை. என்ன செய்யலாம்? நண்பர்களிடம் கடன் வாங்கலாம், ஏதாவது விலைமதிப்புள்ள பொருளை விற்கலாம், அடகு வைக்கலாம், வீட்டுச்சொந்தக்காரரிடம் இன்னும் பத்து நாள் நேரம் கேட்கலாம், எதுவும் சரிப்படாவிட்டால், வீட்டைக் காலி செய்துவிட்டு இன்னொரு வீடு பார்க்கலாம்.

 

ஒற்றைக்கொம்பன்கள் - 1

Unicorn

ஒரு நிறுவனத்தின் மதிப்பை எது தீர்மானிக்கிறது?
அவர்கள் தயாரிக்கின்ற பொருள்கள் அல்லது சேவைகள் எந்த அளவு பிரபலமாக இருக்கின்றன என்பதை வைத்து ஒரு நிறுவனத்தைப் பெரியது அல்லது சிறியது என்று வரையறுக்கலாமா? அந்தப் பொருள்கள் எந்த அளவு விற்பனையாகின்றன என்பதைக் கவனிக்கலாமா? மொத்த வருவாயை விடுத்து லாபத்தை மட்டும் கணக்கில்கொள்ளலாமா?

தமிழோடு விளையாடு - தமிழ்த்தளம் அறிமுகம்: தமிழ்ப்பெயர்கள்

குழந்தைக்குத் தமிழில் பெயர் சூட்டவேண்டுமா!

'ஐயா, எனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று இனிப்போடு வருகிற எல்லாரிடமும் நாம் கேட்கிற முதல் கேள்வி, 'பையனுக்கு என்ன பேர் வெச்சிருக்கீங்க?'

நுட்பவெப்பம் 16

எலக்ட்ரானிக் முறையில் வாக்களிக்கத் தயங்கும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவில் தேர்தல் வரப்போகிறது. அதையொட்டி உலகமெங்கும் பரபரப்பு. அடுத்த அதிபர் யார் என்றுதான் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். காரணம், அனைத்து நாடுகளும் ஏதோ ஒருவிதத்தில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கின்றன. அங்கே வரப்போகும் புதிய அதிபரின் கொள்கைகள் இவர்களை நேர்விதமாகவோ, எதிர்விதமாகவோ பாதிக்கலாம்.

தமிழோடு விளையாடு - தமிழ்த்தளம் அறிமுகம்

தமிழ்த்தளம் அறிமுகம்: http://www.thamizham.net/kal/tamil.htm தமிழர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் குறைந்து கொண்டேயிருக்கிறது.

நுட்பவெப்பம் - 15

Virtual Classroom தொழில்நுட்பத்தில் எல்லாமே சாத்தியம்!  முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு திண்ணை இருக்கும். வழிப்போக்கர்கள் அவற்றில் அமர்ந்து ஓய்வெடுத்துச்செல்வார்கள். சில திண்ணைகள் ஓய்வெடுக்க மட்டுமல்ல, கல்வி கற்கவும் உதவும். நம்முடைய தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் பலரும் இந்தத் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் படித்துதான் அறிவை வளர்த்துக்கொண்டார்கள்.

நுட்பவெப்பம் -14

நாளும் பெரிதாகும் கூகுள் மேப்ஸ்..! கூகுள் மேப்ஸ் பயன்படுத்துகிறீர்களா?

எல்லாரும்தான் பயன்படுத்துகிறோம்! எங்கேயாவது வெளியூருக்குச் செல்வதென்றாலும் சரி, உள்ளூரில் ஒரு புதிய உணவகத்தைக் கண்டறிந்து சாப்பிடுவதென்றாலும் சரி, கூகுள் மேப்ஸை ’க்ளிக்’ செய்து ஒருவார்த்தை சொல்லிவிட்டால் போதும். எந்தப்பக்கம் திரும்ப வேண்டும், எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்கிற சகல விவரங்களையும் அதுவே படித்துக்காட்டிவிடுகிறது.

ஆடு புலி ஆட்டம் விளையாட்டு செயலிக்கு  ஜப்பான் தமிழ்ச் சங்கம் வாழ்த்து!

தமிழர்களின் விளையாட்டுகளில் ஆடு புலி ஆட்டம் இன்றளவும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் எளிமையும், விளையாடக் கூடிய விதிகளும்தான். பொதுவாக இதனை தமிழர்களின் திண்ணை வியூக விளையாட்டு மற்றும் மதிநுட்ப உத்தி விளையாட்டு என்று குறிப்பிடுவர். வெட்டுப் புலி ஆட்டம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

தமிழ்த்தளம் அறிமுகம்: https://ta.wiktionary.org/

அம்பு என்றால் என்ன பொருள்?

வில்லில் அம்பை வைத்துச் செலுத்துவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், 'அம்பு'க்கு நீர் என்று ஒரு பொருள் இருப்பது தெரியுமா? மூங்கில், திப்பிலி என்ற பொருள்களும் உண்டு, தெரியுமா? சங்க இலக்கியம், கம்ப ராமாயணத்தில் தொடங்கி புதுக்கவிதை, சிறுகதைகள் வரை அது எப்படிப் பயன்பட்டிருக்கிறது என்று அறிவீர்களா?

அடுத்தது