அழகு தமிழ் பழகு

அழகு தமிழ் பழகு

பெயர்ச்சொற்களின் ஆறு வகைகள் 

சொல் வகைமைகளில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கினை அறிந்து கொண்டோம். இவை தொல்காப்பிய வரையறையின்படி பகுக்கப்பட்ட நால்வகைச் சொற்களாகும். இவற்றுள் பெயர்ச்சொல்லே, மொழியில் முதன்முதலாய்த் தோன்றியிருக்க வேண்டும் என்பதும் கண்கூடு. செடி என்ற சொல்லே, முதலில் தோன்றியிருக்க வேண்டும். செடி என்பது பெயர்ச்சொல். அச்சொல் தோன்றிய பிறகுதான், முளைத்தது என்னும் வினைச்சொல் தோன்றியிருக்க வேண்டும்.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

நிலையாமை குறித்து தமிழர் வாழ்வியலில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ‘நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு’ என்று கூறுகிறார் வள்ளுவர்.  நெருநல் என்றால் நேற்று. ‘நேற்று இருந்தவன் இன்றைக்கு இல்லை என்கிற பெருமையுடையதையா இந்த உலகம்’ என்கிறார் முப்பால் முனிவர். 
 

சொற்களின் நான்கு வகைகள்

சொற்களின் நான்கு வகைகள்

சொல் என்பது என்ன ? சொல்லப்படுவது. மொழியப்படுவது. ஒன்றைப் பற்றி இன்னொருவர்க்குத் தெரியப்படுத்த ஒலியாய் ஒலிக்கப்படுவது. எழுத்தாய் எழுதி வைக்கப்படுவது. ஆக, ஒன்றை உணர்த்த ஒலிப்பதும் எழுதி வைக்கப்படுவதும் சொல் என்பது தெரிகிறது. ஒன்றை உணர்த்துவதைத்தான் ‘பொருள் குறிப்பது’ என்கிறது இலக்கணம். சொல்லப்படும் சொல் ஏதெனும் ஒரு பொருளை, அர்த்தத்தை, வெளிப்பாட்டைக் குறிக்க வேண்டும். பொருளோடு சொல்லப்படுவது சொல் ஆகும்.
 

அடுத்தது