பழமொழி இன்பம்- 9

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்

நாளிதழைப் புரட்டினால், எண்ணற்ற திரைப்பட விளம்பரங்கள் அன்றாடம் வருகின்றன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நம் இரசிகர் படத்திற்குச் செல்கிறார். 

 

அழகுதமிழ் பழகு - 13

மூவிடப் பெயர்கள்

இடம் என்பதைக் குறித்த இலக்கண அறிவை இப்பகுதியில் பார்க்கப் போகிறோம். அதென்ன இடம்? இடம் என்றால் நிலப்பகுதியைக் குறிக்கிறதா என்ற ஐயம் ஏற்படும். அவ்வாறில்லை. இலக்கணத்தில் இடம் என்பது ஒரு சொல்லைத் தோற்றுவிக்கின்ற நிலைமையை மையப்படுத்தி வகுக்கப்படுவது. ஒரு சொல் எங்கே தோன்றும்?

பழமொழி இன்பம் 8

 பழமொழி இன்பம் 8

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

வாய்ப்புகள் எப்போது கதவைத் தட்டும் என்று தெரியாது. கண்ணுள்ளவர் காணக்கடவர் என்பதைப்போல, விழிப்புணர்வோடு இருப்பவர்கள் தமக்குரிய வாய்ப்பைக் கண்டுபிடிக்கின்றனர். வாய்ப்புக்கும் வாய்ப்பின்மைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக்கூட, சிலர் அறியமாட்டார்கள். 

அழகுதமிழ் பழகு 12

அழகுதமிழ் பழகு 12

பால் பிரிவுகள்

திணை என்பது இனம் என்றால், இனத்துக்குப் பிரிவினைகள் உண்டல்லவா ? அந்தப் பிரிவினைகளே பால் எனப்படும். பால் என்றால் பிரிவு. பால் என்றால் பகுப்பு. ஒவ்வொரு பொருளும் பால்வகைப்பாடு பெறும். ஒவ்வொரு வினைமுற்றும் பால்பட உணர்த்தி நிற்கும். எடுத்துக்காட்டுகளுக்குச் செல்வோம்.
 

வடசென்னையின் வரம் கானா! - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்

 வடசென்னையின் வரம் கானா! - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்

“வடசென்னையில் இருப்பவர்கள் எப்போதும் கத்தியோடு திரிபவர்கள் என்ற பிம்பம் பொதுப்புத்தியில் இருக்கு. உண்மையில், அவர்கள் எல்லா மனிதர்களையும் போன்றவர்கள்தான். அந்த மக்களை யாரும் கைதூக்கி விடுவதில்லை. வடசென்னையை சேர்ந்தவன் என்றாலே முதலில் வருகிற கேள்வி, ’நீங்கள் தலித்தா? இல்லையெனில் மீனவரா?’ என்பதுதான். சாதி என்பது ஒரு அடையாளமா?

சென்னைக்கு மிக அருகில் என்பது வெறும் கற்பிதம்! - எழுத்தாளர் விநாயக முருகன்

சென்னைக்கு மிக அருகில் என்பது வெறும் கற்பிதம்! - எழுத்தாளர் விநாயக முருகன்

தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை இப்போது இளைஞர்களின் ஆதிக்கம்தான். சரவணன் சந்திரன், ஆர்.அபிலாஷ், லஷ்மி சரவணக்குமார் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்தப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் எழுத்தாளர் விநாயக முருகன். அடிப்படையில் மென்பொருள் வல்லுநரான இவர் எழுதிய ராஜீவ்காந்தி சாலை நாவல், தமிழ் எழுத்துலகில் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் ஒருங்கே பெற்றது. தொடர்ந்து சென்னைக்கு மிக அருகில், வலம் உள்ளிட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். நவீன இலக்கிய உலகினுள் நுழைந்தது பற்றி, அவரே இங்கே பேசுகிறார்!

பழமொழி இன்பம்

பழமொழி இன்பம்

இக்கரைக்கு அக்கரை பச்சை

அமெரிக்காவில் சென்று குடியுரிமை பெற்றுத் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நண்பர் ஒருவரை, அண்மையில் சந்தித்தேன். தம் வாழ்க்கையில் செல்வத்தால் இயல்கின்ற அனைத்தையும் பெற்றுவிட்டார் நண்பர். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுவிட்டார். அங்கொரு பெருவீடு. இங்கும் எண்ண முடியாத தூண்விதானங்கள் அமைத்து மாளிகை கட்டிவிட்டார். அங்கே அவர் மட்டும் குடும்பத்தோடு. இங்குள்ள வீட்டில் தாய், தந்தையர். 

அழகு தமிழ் பழகு -11

அழகு தமிழ் பழகு -11

திணையும் எண்ணும்

பெயர்ச்சொற்களின் வகைமைகளைப் பற்றிக் கடந்த பாடத்தில் படித்தோம். அடுத்து வினைச்சொல் பிரிவுகளைப் பற்றிப் பார்க்க வேண்டும். அதற்கிடையில், இவற்றுக்கெல்லாம் மிகவும் இன்றியமையாத பாகுபாடுகள் சிலவும் இருக்கின்றன. அவற்றை அறிந்துகொண்டு, வினைச்சொல் வகையினத்திற்குச் செல்வோம்.

நவீன ஓவியத்தின் அடையாளம் மருது!

நவீன ஓவியத்தின் அடையாளம் மருது!

நவீன தமிழ் இலக்கியம், பத்திரிகை, சினிமா என சுற்றிச்சுழன்று, பெரும் பங்காற்றி வருபவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட துறையில்தான் ஒருவர் ஆளுமையாகப் பரிமளிக்க முடியும் என்ற இலக்கணத்தை உடைத்ததனால், மருது நம் காலத்தின் முன்னோடி என மார்தட்டிக் கொள்ளலாம்!

பழமொழி இன்பம் 

பழமொழி இன்பம் 

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் 

நால்வழிச் சாலைகள் உருவானதும், ஓர் ஊரின் பொருளாதார நிலைமைகள் தலைகீழாக மாறின. நால்வழிச் சாலைகளின் நோக்கமே ஊர்களுக்குள் புகுந்து செல்லும் நெடுஞ்சாலைகளைத் திருப்பி, போக்குவரத்து நெரிசலற்ற புறவழிகளை உருவாக்கி, எந்த இடையூறுமின்றி வண்டிகள் செல்ல வேண்டும் என்பதுதான். இந்த சாலைகள் தோன்றுவதற்குக் காரணம், ஊர்களை இணைக்கவேண்டும் என்ற நோக்கம்தான். 

அடுத்தது