பழமொழி இன்பம் - வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் ? 

ஊரிலேயே அக்கா மகள் இருப்பாள். ஏதேனும் சிறுபகையைக் கருத்தில் வைத்துக்கொண்டு பெண் தேடி அலைவார்கள். மணப்பெண் எளிதில் கிடைத்துவிடுவதில்லையே. ஒருவழியாய் ஆய்ந்து ஓய்ந்து, ‘வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்” என்று அக்கா மகளையே மணமுடிப்பார்கள். 

அழகுதமிழ்பழகு - 16

நிறுத்தற்குறிகள்

நிறுத்தற்குறிகளைப் பற்றி இப்பகுதியில் அறிந்துகொள்ளப் போகிறோம். அச்சுத் தொழில்நுட்பம் தோன்றும்வரையில், நிறுத்தற்குறிகள் எனப்படுபவை தமிழ்ச் செய்யுள்களிலோ உரைநடை எழுத்துகளிலோ பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆங்கில உரைநடைத் தாக்கத்தால் தமிழுக்கும் வந்துசேர்ந்தவைதாம் நிறுத்தற் குறிகள். 

பழமொழி இன்பம் - அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது!

எதற்கும் அடிப்படை வேண்டும் என்பது ஒருபுறம் என்றால், எதற்கும் பற்றுதல் வேண்டும் என்பது மற்றொன்று. அந்தப் பற்றுதலும் சார்பும் சிறிதாகவும் இருக்கலாம், பெரிதாகவும் இருக்கலாம். முற்காலத்தில் எடைமிகுந்த ஒன்றை நகர்த்துவது என்பது எளிதில் இயலாத செயல். கோபுரங்களுக்குப் பெரும்பாளக் கற்களை எவ்வாறு ஏற்றி அமைத்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? தொலைவிலிருந்து சரிவுச் சாரம் அமைத்து அடித்தளமாய்ப் பெருமரத்து உருளைகளை இட்டு, அதன்மீது வடித்தெடுத்த பாறைப் பாளங்களை வைத்து மேல்நகர்த்தினார்கள். 

கவிதைகள் சொல்லவா! - கவிஞர் உமா ஷக்தி

தமிழ் கவிதைகளில் பெண்களின் உலகத்தைப் படைப்பவர்கள் வெகு சிலர்தான். அவர்களில் முக்கியமானவர் கவிஞர் உமா ஷக்தி. வேட்கையின் நிறம், பனிப்பாலைப் பெண், திரைவழிப் பயணம், ஆட்டுக்குட்டி நனைத்த மழை, பூர்ணா உள்ளிட்ட படைப்புகளின் மூலம் நவீன இலக்கிய உலகில் அடையாளம் காணப்படுபவர் கவிஞர் உமா ஷக்தி. பத்திரிகைத்துறையில் தனிக்கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். பெயரிடப்படாத படம் ஒன்றின் மூலம், விரைவில் பாடலாசிரியராகவும் அறிமுகமாக உள்ளார். 

அழகுதமிழ்பழகு - 15

முக்காலமும் அறிவோம் 

இலக்கணப் பாடத்தில் அடுத்து நாம் கற்கப் போவது காலங்களைப் பற்றி. காலம் என்பது அறிவியலில் மாபெரும் பொருள். காலம் என்பது கற்பிதம், அது சுருங்கி விரியும் தன்மையுடைத்து, காலத்தை வெல்லல் எதிர்காலத்தில் நிகழும், ஒரு பொருளின் திசைவேகத்திற்கேற்ப காலத்தின் விரைவு இருக்கும், எதிர்காலத்தில் பயணம் செய்யலாம்… போன்றவை காலம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருகின்ற அறிவியல் கூறுகள். 

பழமொழி இன்பம் - ஊருடன் கூடிவாழ்

எல்லா விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவான ஒரு தன்மையைச் சுட்டிக்காட்டலாம். அவை தமக்குள் கூடி வாழ்கின்றன. ஆடு மாடுகள் உள்ளிட்ட புல்வெளி மேய்ச்சல் விலங்குகள் தனித்தலையாமல் மந்தை மந்தையாய்க் கூடிவாழ்வதைக் காண்கிறோம். தனித்தலையும் புலிகள்கூட ஆங்காங்கே சிறுநீர் கழித்து அடையாளமேற்படுத்தி, தன் இனத்தோடு ஏதேனுமொரு தொடர்பில் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

அழகு தமிழ் பழகு -14

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

ஒரு சொல் தனித்தமைவது ஒருவகை. அது வெறும் சொல். பெயரையோ வினையையோ இவ்விரண்டையும் விளக்கியோ இவ்விரண்டையும் இணைக்கும் இடைநிலையாகவோ அது செயல்படும் என்பதை அறிவோம். வெறும் சொல் மட்டுமே மொழியாகிவிடுமா ? ஆகாது.

கவிதைகள் சொல்லவா - கவிஞர் குகை மா. புகழேந்தி

‘காற்றுக்குப் பதிலாய்’, ‘வானம் என் அலமாரி’, ‘கவிதை நடையில் நடக்கிறாய்’, ‘பிரியங்களின் குப்பைத்தொட்டி’, ‘மயிலிறகு பூத்த கனவுகள்’, ‘நிறங்கள் பெயர் மாறிவிட்டன’, ‘உனக்கும் எனக்கும் ஒரே மரணம்’, ‘பூக்களாய் உதிரும் எறும்புகள்’, ‘கடைசியாய் பூமிக்கு வந்தேன்’, ‘அகம் புறம் மரம்’, ‘நட்சத்திரங்கள் உதிரும் பின்னிரவு’, ‘பைத்தியக்காரனின் சொற்கள்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளின் மூலம் நவீன இலக்கியத்தில் பங்காற்றி வருபவர் கவிஞர் குகை மா. புகழேந்தி. 

விருது என்பது எழுத்தாளனுக்கு தற்காலிக வெளிச்சம்தான்! எழுத்தாளர் ஆர். அபிலாஷ்

“தமிழில் நாவல் எழுதுவது என்பது மிக சிக்கலான ஒரு விஷயம். இன்றைய நவீன உலகம், நாவலைத்தான் சிறந்த இலக்கிய வடிவமாகப் பார்க்கிறது. இங்கே, எல்லோருக்கும் ஒரு நாவல் எழுத வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. ஆனால், அதை எப்படி எழுதுவது என்கிற பயமும் அவர்களிடம் இருக்கிறது. அப்படிதான் நானும் இருந்தேன்” என்கிறார் எழுத்தாளர் ஆர்.அபிலாஷ். இவர், ‘கால்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றவர்.

அடுத்தது