நான் ஒரு மேடைக்கலைஞனாகவே அறியப்பட வேண்டும்!  நாடகக் கலைஞர் மாதவ. பூவராக மூர்த்தி

Theatre Artist Madhava.Bhoovaraga Moorthy

“அது அலைபேசி இல்லாத காலம். ஒரு திருமணத்திற்கு அழைப்பு விடுத்த பூர்ணம் விசுவநாதன், “உனக்காக நான் அங்கே காத்திருக்கிறேன், இரவு ஏழு மணிக்கு வந்துடு மூர்த்தி”ன்னு சொன்னாரு. ஆனால், என்னால சொன்ன நேரத்துக்கு போக முடியல. என் குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாம டாக்டர்கிட்ட காண்பிச்சுட்டு, அந்த இடத்துக்குப் போக ஒரு மணிநேரம் கால தாமதமாகிடுச்சு.

கவிதைகள் சொல்லவா! - கவிஞர் வெய்யில் 

Poet Veyyil

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் குக்கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் வெய்யில்.  இடையறாத பயணங்களால் சொந்த ஊர் என எதையும் சொல்லிக்கொள்ள இயலாத வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். இவர் கொம்பு என்ற சிற்றிதழ் மற்றும் பதிப்பகத்தை நடத்தி வந்தார். இதுவரை புவன இசை, குற்றத்தின் நறுமணம், கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் ஆகிய மூன்று கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

பழமொழி இன்பம் - உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா ?

ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறான் என்பார்கள். ஏனென்றால் ஆட்டுக்கும் நாய்க்கு வைத்ததைப்போல நீண்டதாய் வைத்திருந்தால் என்னாகும்? எந்நேரமும் சிறகடிப்பதைப்போல் வாலை ஆட்டிக்கொண்டேயிருக்கும். அதனால் ஆட்டின் உயிராற்றல் அனைத்தும் வாலாட்டுவதிலேயே வீணாய்ப்போய் ஆடு இறந்துவிடும். அதற்குப் பதிலாக சிறுநுனியளவு வாலை வைத்துவிட்டான். அது எத்தனைமுறை ஆட்டினாலும் எத்துணை விரைவாக ஆட்டினாலும் கேடில்லை. அது உயிர்பிழைத்துக் கிடக்கும். 

பழமொழி இன்பம் - கருவாடு மீனாகாது கறந்தபால் மடி புகாது

வாழ்க்கையின் தொடரோட்டத்தில் என்னென்ன நிகழ்கின்றன, என்னென்ன நிகழ்ந்து கடக்கின்றன, எதை நோக்கி நாம் நகர்ந்து செல்கிறோம் என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கவே நேரமிருப்பதில்லை. ஆளாளுக்கு எதையோ துரத்திக்கொண்டு ஓடும் வேட்டைநாயைப்போல் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் இன்றுள்ள அருமைகளும் அழகுகளும் உன்னதப் பொழுதுகளும் உணரப்படாமலே கரைந்துவிடுகின்றன. பிறகு ஒருநாள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் நாம் இழந்தவை எத்துணைப் பெரிய நன்மைகள் நலன்கள் என்று வியர்க்க வைக்கின்றன. 

அழகு தமிழ் பழகு - 19

வினைச்சொற்கள் 

இதுவரை தமிழின் பல்வேறு இலக்கணச் செய்திகளை ஒவ்வொன்றாக அறிந்துகொண்டோம். இனிமேல்தான் நம் மொழியின் வெவ்வேறு நுண்மையான இலக்கணக் கூறுகளுக்குள் குதிக்கப் போகிறோம். நாம் வரிசைப்படி ஒவ்வொன்றையும் கற்றுச் செல்வதால் அடுத்தடுத்து வருகின்ற எந்தப் பாடமும் விளங்கிக்கொள்வதற்குக் கடினமாக இராது என்று நம்புகிறேன்.

பழமொழி இன்பம் - துறவிக்கு வேந்தன் துரும்பு 

வேந்தன் என்பவன் எல்லாரையும் மிரட்டுவான். அடக்குவான். தனக்கு அடங்கிய குடிகளே தன் மக்கள் என்று நினைப்பான். தான் ஆளப் பிறந்தவன் என்றும் தன்னிடம் அடங்கி வாழவேண்டியவர்கள் பிறர் என்றும் அவன் மனத்தில் நிரந்தர எண்ணம் வீற்றிருக்கும். அதற்கேற்றாற் போலவே, அவனை அண்டியிருக்கும் அனைவரும் நைச்சியமாகவும் நற்சொல் தவறாதவராகவும் இருப்பர். ஏனென்றால் பிற குடிகள் வேந்தனை அண்டி வாழ்கின்றார்கள். தங்களைக் கொள்ளையிட காலம் பார்த்திருக்கும் எதிரிகளிடமிருந்து வேந்தனே காக்கிறான். 

அழகு தமிழ் பழகு - 18

 ஆகுபெயர்கள் 

இலக்கணத்தில் ஆகுபெயர் என்று ஒன்றிருக்கிறது. ஆகும் பெயர் என்பது அந்த வினைத்தொகையின் விளக்கம். தொன்றுதொட்டு ஒன்றுக்குப் பெயராக ஆகிவந்தது எதுவோ, அந்தப் பெயர்ச்சொல் அதனோடு தொடர்புடைய பிறவொன்றுக்கும் பெயராகி நிற்றலைத்தான் ஆகுபெயர் என்கிறோம். விளங்கவில்லைதானே? நேராக எடுத்துக்காட்டுக்குப் போவோம். 
 

அழகு தமிழ் பழகு 17

Tamil proverb

இடுகுறியும் காரணமும் 

சொற்களின் நான்கு வகைமைகளை நாம் பார்த்துவிட்டோம். அவை பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள் என்னும் வகைகள். அதில் பெயர்ச்சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றின் அறுவகைமைகளையும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்று பார்த்தோம்.

அடுத்தது