கவிதைகள் சொல்லவா! கவிஞர் நரன்

Poet Naran

பெண் உடல்

விருதுநகரில் பிறந்தவர் கவிஞர் நரன். 361 டிகிரி என்ற சிற்றிதழைத் துவங்கி, அதன் ஆசிரியராகs செயல்பட்டவர். 'உப்பு நீர் முதலை' (2010), 'ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்' (2014), 'லாகிரி'(2016) என்று இவரது கவிதைத் தொகுதிகள் அனைத்தும் இலக்கிய வட்டாரத்தில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளன. 'சால்ட்' பதிப்பகம் மற்றும் 'சால்ட்' இதழை நடத்தி வருவதோடு, ஊடகத்துறையிலும் பணியாற்றி வருகிறார் நரன்.

அழகுதமிழ் பழகு - 21

குறுக்கங்களும் அளபெடைகளும்

எழுத்துகளைப் பற்றிய தொடக்கக் கட்டுரைகளில் சார்பெழுத்துகள் குறித்துப் படித்தோம். முதலெழுத்துகள் என்பவை உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் என மொத்தம் முப்பது எழுத்துகள். தமிழில் உள்ள இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளில் முதலெழுத்துகள் முப்பது போக மீதமுள்ளவை இருநூற்றுப் பதினேழு எழுத்துகள்.

எழுத்தும் நானும் வேறல்ல! எழுத்தாளர் தமயந்தி

Writer Dhamayanthi

நவீன இலக்கிய உலகில் எல்லோருக்கும் அறிமுகமான பெயர் தமயந்தி. பெண்களின் வலியை தன்னுடைய எழுத்தில் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்து வரும் தமிழச்சி. தற்போது திரைப்படத்துறையிலும் நுழைந்து, 'விழித்திரு' படம் மூலமாகப் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாகவும் அடையாளம் பெற்றிருப்பவர். தனது எழுத்து, வாழ்க்கை, சமூகம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் தமயந்தி. 

பழமொழி இன்பம் 18

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 

தமிழ்ச்சொற்களில் ஆழ்ந்த பொருளுடைய அருஞ்சொற்களில் ஊர் என்ற சொல்லும் ஒன்று. முற்காலங்களில் இன்னாரை இன்ன ஊரன் என்றே அழைப்பது வழக்கம். திருவாதவூரார், கோவூர்க்கிழார், சிதம்பரனார், பட்டினத்தார், காரைக்கால் அம்மையார் என நம்மவரின் பெயர்களே ஊர்ப்பெயரைத் தாங்கி நிற்கும்.

கவிதைகள் சொல்லவா! கவிஞர் கதிர்பாரதி

Poet Kadhir Bharathi

நன்னிலத்தில் தளிர்த்தது!

ஆ.செங்கதிர்ச் செல்வம் எனும் பெயர்கொண்ட கதிர்பாரதி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இடதுசாரி கொள்கைப்பற்றையும் விவசாய வாழ்வையும் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். பிரபல தமிழ் வார இதழொன்றில் தலைமை உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ''மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்''.

அழகு தமிழ் பழகு - 22

உம்மைத்தொகையும் சொத்துபத்தும்

இதுகாறும் தமிழ் இலக்கணத்தின் பல்வேறு தொடக்க நிலை விளக்கங்கள், விவரிப்புகளைப் படித்தோம். இந்த ஒரு பகுதியில் பேச்சு வழக்கில் நம் பெற்றோர்களும் பெரியவர்களும் பயன்படுத்திய இனிய சொற்றொடர்கள் சிலவற்றின் அடிப்படையாக விளங்கும் இலக்கணக்கூறு ஒன்றையும் அவற்றின் பொருள்கள் என்னென்ன என்றும் பார்க்கப்போகிறோம். 

அழகுதமிழ் பழகு - 21

உரிச்சொற்கள்

சொல்வகைமைகள் பெயர், வினை, இடை, உரி என நான்கு. இவற்றுள் கடைசி வகையான உரிச்சொற்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். பெயர்ச்சொல் பெயரைக் குறிப்பது. வினைச்சொல் தொழிலைக் குறிப்பது. இடைச்சொல் பெயர் வினைக்கிடையேயும் அவற்றோடும் தோன்றுவது. 

பழமொழி இன்பம்  - மதில்மேல் பூனைபோல..

பூனை வளர்க்கிறீர்களா? நான் வளர்க்கிறேன். ஒன்றில்லை, நான்கு பூனைகள். அவற்றுள் சில இருக்கும் இடம் துறந்து சென்றுவிடும். மீண்டும் புதிய குட்டிகள் வரவாகும். என்வீட்டு மதில்கள் இருபுறம் எண்பதடி நீளமுடையது. பூனைகள் இவ்வுலகைப் பார்க்க வேண்டுமென்றால் அம்மதில் மீது ஏறி அமர்ந்துகொள்ளும். உப்பரிகையிலிருந்து உலகைக் காணும் அரசனைப்போல் மதில் மேல் குத்தாக அமர்ந்துகொண்டு வீதியில் செல்வோரை எல்லாம் சொக்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும். 

'சிதம்பர நினைவுகள்' என்பதே என் அடையாளம்! எழுத்தாளர் ஷைலஜா 

Writer Shailaja

''இந்த பதிமூன்று வருடத்தில் ஒவ்வொரு நாளும் யாரோ முகம் அறியாத ஒருவரிடம் இருந்து அலைபேசி அழைப்போ, குறுஞ்செய்தியோ, இமெயிலோ வந்துகொண்டே தான் இருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது. அதுதான் சிதம்பர நினைவுகள் படைப்பின் ரகசியம்!"  என்றவாறே பேசத் தொடங்குகிறார் ஷைலஜா. 'சூர்ப்பனகை', 'சர்மிஷ்டா', 'மூன்றாம் பிறை', 'சுமித்ரா', 'முத்தியம்மா' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்தவர்.

அடுத்தது