மிகினும் குறையினும் - உங்களை ஒருவழியாக்கும் கழிச்சல் குணமாகணுமா?!

இயல்புக்கு மாறாய், ஒன்றிக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து மலம் கழிவதையே கழிச்சல் என்கிறோம்.

காரணங்கள்

  • எளிதில் செரிக்காத உணவுகளை உண்ணுதல் (மாமிச உணவு, மாவுப் பண்டங்கள், எண்ணெய் மிகுந்த உணவுகள்)
  • கெட்டுப்போன உணவுகளை உண்ணுதல்.
  • மிகுதியான காரம், புளிப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல் போன்றவை பெரும்பாலும் கழிச்சல் ஏற்படக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

ஆயுர்வேதம் - 15 

நின்னுகிட்டே பார்க்குற வேலையா?
உஷாரா இருங்க..! 

’வெரிகோஸ் வெய்ன்’ (varicose vein) என்று சொல்லப்படும் நரம்புகளில் ஏற்படும் முடிச்சு நோய், இன்று நூற்றில் 99 பேரைப் பாதித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் கால் எப்படியிருக்கிறது என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் பதற்றத்தையும் உண்டாக்குகிறது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே, இதற்கு முக்கியக் காரணம். 

மிகினும் குறையினும் - ஆஸ்துமாவைப் போக்கும் சித்த மருத்துவம்!

Asthma

“குளிர்காலம் வந்தா அவ்வளவுதான், Wheezing அதிகமாயிடும். வழக்கமா ஒரு தடவ inhaler use பண்ணுவேன், இப்பலாம் ஆறு தடவை அடிச்சாலும் குறைய மாட்டேங்குது. விலாப்பக்கமெல்லாம் வலிக்குது. சித்தாவில ஆஸ்த்துமாக்கு மருந்து இருக்கா டாக்டர்” என படபடத்த காயத்ரி.

ஆயுர்வேதம் - 14

Ayurvedam

புழுவெட்டு ஏற்பட அசைவ உணவுகள் காரணமா? 

ஆண்களுக்கு தலை, தாடி மற்றும் மீசை இருக்கும் பகுதிகளில் முடி இல்லாமல் இருக்கும்; அந்த இடமே ஷேவ் செய்தது போன்றிருக்கும்; வட்ட வடிவமாகவோ அல்லது வடிவமே இல்லாமலோ இருக்கும். இதற்கு புழுவெட்டு என்று பெயர். ஆண், பெண் இருபாலரையும் இந்தக்குறைபாடு பாதிக்கிறது. ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும் புழுவெட்டு பாதித்த பகுதி, பார்ப்பவருக்கு அருவருப்பை ஏற்படுத்தும். 

மிகினும் குறையினும் - மூல நோயை இல்லாமல் போக்கும்  சித்த மருத்துவம்!

Siddha

“டாக்டர் ஒரு வாரமா மோஷன் போறப்ப ரத்தம் வருது, வலி எல்லாம் ஒண்ணுமில்லை. ஆனாலும் பயமா இருக்கு, இதுதான் மூலமா டாக்டர்?” என்றபடி எதிரே அமர்ந்தார் கமலா. 

 

ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை 13

Ayurvedam

இருமலைத் தவிர்க்க, என்ன செய்யலாம்?!
மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்சனைகளுள் ஒன்று இருமல். இதனால் நமது அன்றாடப் பிரச்சனைகள் அனைத்தும் பாதிக்கிறது. இதனை உடனடியாகக் குணப்படுத்த, ஆல்கஹால் கலந்த இனிப்பூட்டப்பட்ட மருந்துகளைத் தேடுகிறோம்.

மிகினும் குறையினும்! - மூட்டுவலியைப் போக்கும் சித்தமருத்துவம்!    

மூட்டு என்ற சொல்லுக்கு சந்தி என்ற பெயர் உண்டு. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் ’மூட்டு’ என்றழைக்கப்படும். மூட்டு வலி என்பது உடலிலுள்ள அனைத்து சந்திகளையும் குறிக்கும். எனினும், பொதுவாக மூட்டு வலி என்பது முழங்கால் மூட்டு வலியைக் குறிப்பிடுவதால், இனி அதனைப் பற்றியே பேசலாம். மூட்டு வலி இல்லாத வீடில்லை எனும்படியாக, வீட்டிற்கு ஒருவர் மூட்டு வலியினால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலைக் காணமுடிகிறது.

ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை 12

அறுவைசிகிச்சை இல்லாமல் ஹெர்னியாவைச் சரிசெய்யலாம்!

இன்று பலரையும் பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது ‘குடல் இறக்கம்’. இது ஆங்கிலத்தில் ‘ஹெர்னியா’ (hernia)என்று சொல்லப்படுகிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஏற்கனவே வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களை இது அதிகம் பாதிக்கிறது. 

மிகினும் குறையினும் - சோரியாஸிஸைக் குணமாக்கும் சித்த மருத்துவம்!

சோரியாஸிஸ் என்று பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த தோல்நோய், சித்த மருத்துவத்தில் செதில் உதிர் படை (அ) செதில் உதிர் நோய் (அ) காளாஞ்சகப் படை என்று குறிப்பிடப்படும். நாட்பட்டு குணமாகும் நோய்களுள் ஒன்று செதில் உதிர் படை எனலாம். குணமான பின்னும் 5 வருடங்களுக்கு ஒருமுறையோ, கால மாறுபாட்டினாலோ, இது திரும்ப வருவதுண்டு.

ஆயுர்வேதம் 11

குதிகால் வலியைப் போக்கும் அக்னிகர்மா!

கட்டிலில் இருந்து இறங்கமுடியாமல் தவிக்கும் பிரச்சனையை, இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கிறார்கள். இதற்குக் காரணமாக இருப்பது குதிகால் வலி. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும், முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது.

அடுத்தது