ஆயுர்வேதம் 19 

இதய வடிவிலிருக்கும் இதயத்தைக் காக்கும் மாதுளை!

நாம் விரும்பிச் சாப்பிடும் மாதுளம் பழம், நம் உடலுக்கு ஏராளமான பலன்களைத் தருகிறது. இதய நோய் வராமல் நம்மைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பித்தத்தைக் குறைக்கும் இயல்புடைய இது, துவர்ப்புச்சுவை கொண்டது. 

மிகினும் குறையினும் - சித்த மருத்துவத்தினால்  காணாமல் போகும் காமாலை!

மஞ்சல் காமாலை என்றவுடன் அனைவருக்கும் நாட்டு மருத்துவம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சித்த மருத்துவத்தின் பெருமையைத் தாங்கிப் பிடித்திருக்கும் நோய்களில் ஒன்று மஞ்சள் காமாலை. 

ஆயுர்வேதம் -18

Ayurvedam

நம்மைத் தகிக்கவிடும் உடல்சூடு!

பொதுவாக, ஆயுர்வேதத்திற்கும் நவீன மருத்துவத்திற்கும் நடுவே ஒரு இடைவெளி உண்டு. ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை சோதித்துப் பார்த்துவிட்டு தான் நோய் பற்றி விளக்கமளிப்பார்கள் அலோபதி மருத்துவர்கள். ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் உடலில் இருக்கும் விஷயங்களைப் (functional elements) பார்த்து சிகிச்சையளிப்பார்கள். இதனால் தான் இம்மருத்துவ முறைகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. அப்படி நம் உடலைப் பாதிக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் சூடு. 

மிகினும் குறையினும் சித்த மருத்துவத்தினால் சரியாகும் அதிக இரத்த அழுத்தம்!

"மூணு வருசமா பிரசர் இருக்கு டாக்டர், தலை சுத்திக்கிட்டே இருக்கும். என்னன்னு பார்க்கப் போனப்பதான் பி.பி. அதிகமாயிருக்குதுன்னு தெரிஞ்சது. மாத்திரை சாப்டுக்கிட்டே இருக்கேன். இப்ப என்னன்னா, காலத்துக்கும் மாத்திரையை நிப்பாட்ட முடியாதாமே. தொடர்ச்சியா சாப்ட்டு வேற ஏதாவது வந்துருச்சுனா என்ன பண்றது. அதான் சித்தால ஏதாவது வழி இருக்குமான்னு பார்க்க உங்ககிட்ட வந்தேன்" என யோசனையோடு வந்தமர்ந்தார் சுப்பையா.

ஆயுர்வேதம் 17

Ayurvedam

உப்பு கூடினால் உயரும் ரத்த அழுத்தம்..!

இன்று மனித வர்க்கத்தையே அச்சுறுத்தும் பெரும்பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உயர் ரத்த அழுத்தம் (high blood pressure). மனிதனைப் பலவீனமாக்கி உணர்ச்சியற்றுப் போகவைக்கும் சில நோய்கள் ஏற்பட, இது காரணமாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும். வயது வித்தியாசமில்லாமல், இது அனைவரையும் பீடிக்கும். 

மிகினும் குறையினும் - இரத்தசோகையை முற்றிலுமாக ஒழிக்கும் பாரம்பரிய உணவுகள்!

உடலில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் வரும் நோய் இரத்தசோகை என பொதுவாக அழைக்கப்படுகிறது. உடலின் நிறம் வெளுத்துக் காணப்படுவதால் வெளுப்பு நோய் என்று சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடும் இந்நோய்க்கு ’பாண்டு’ என்ற வேறு பெயரும் உண்டு. உலகில் உள்ள மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் நாடான இந்தியாவில் இதன் விகிதாச்சாரம் இன்னும் அதிகம் என்றே கூறலாம்.

ஆயுர்வேதம் 16

பித்தவெடிப்பைப் போக்கும் ஆயுர்வேதம்!

முக அழகைப் போன்றே, இன்று பல பெண்கள் தங்கள் பாதங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனாலும், வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் நின்றுகொண்டே பல வேலைகளைச் செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சனையாக இருப்பது பாதத்தில் ஏற்படும் வெடிப்புகள். இந்த வெடிப்புகளின் காரணமாக, அவர்கள் நடக்கும்போது வலியை உணர்கிறார்கள். இதனை பித்த வெடிப்பு என்றும் கூறுவர்.

அடுத்தது