தமிழோடு விளையாடு - ‘அவலோகிதம்’

Friday, September 30, 2016

கவித்திறனை மெருகேற்றும் ‘அவலோகிதம்’!

தமிழ்த்தளம் அறிமுகம்: அவலோகிதம் http://www.avalokitam.com/

'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்... முதல்ல கண்மணி சொன்னேன்ல? இப்ப பொன்மணி...'

கவிதையெழுதும் பலரும் இந்தச் சிக்கலைச் சந்தித்திருப்பார்கள். எதுகை, மோனை, இயைபு பொருந்தும் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றை ஒழுங்காக அமைக்க வேண்டும், தளை தட்டிவிடக்கூடாது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று வெவ்வேறு பாவகைகளை நினைவில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். அத்தனைக்கும் நடுவே கவித்துவமும் இருக்க வேண்டும்.

இதில் கவித்துவத்தை மட்டும் நீங்கள் கவனியுங்கள், மற்ற அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறது 'அவலோகிதம்' என்ற பிரமாதமான இணையத்தளம்!

இங்கே நீங்கள் நேரடியாக மரபுக்கவிதை எழுதலாம், அதில் இருக்கும் பிழைகளை உடனுக்குடன் அறிந்து திருத்திக் கொள்ளலாம். அதன்மூலம் நம் கவித்திறனை மெருகேற்றலாம்.

ஏற்கெனவே கவிதை எழுதிவிட்டீர்கள் என்றால், அதை இங்கே கொண்டுவந்து ஒட்டலாம். அது என்ன பாவகை என்று கண்டறிந்து, அதில் எல்லாம் சரியாக அமைந்துள்ளனவா என்று யாப்பு நுட்பங்களை மதிப்பிட்டுச் சொல்லும் அவலோகிதம்.

கவிதைக்குச் சரியான சொல் சிக்கவில்லை என்றால், இதிலுள்ள 'சொல் தேடல்' வசதியைப் பயன்படுத்தலாம். 'நம்மை' என்று தட்டச்சு செய்து 'இதற்கு எதுகை என்ன?' என்று கேட்டால், அம்மை, அம்மா, கும்மி, கொம்பு என்று விதவிதமான சொற்கள் குவிகின்றன. பிறகென்ன, நம் கவிதைக்குப் பொருந்துவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்!

(தொடரும்)

- என். சொக்கன்

மேலும் படிக்க:
கூகுள் மேப்ஸ்
விக்சனரி - தமிழ்த்தளம் அறிமுகம்
ஆடு புலி ஆட்டம் விளையாட்டு செயலிக்கு  ஜப்பான் தமிழ்ச் சங்கம் வாழ்த்து!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles