தமிழ்த்தளம் அறிமுகம்: https://ta.wiktionary.org/

Thursday, September 15, 2016

அம்பு என்றால் என்ன பொருள்?

வில்லில் அம்பை வைத்துச் செலுத்துவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், 'அம்பு'க்கு நீர் என்று ஒரு பொருள் இருப்பது தெரியுமா? மூங்கில், திப்பிலி என்ற பொருள்களும் உண்டு, தெரியுமா? சங்க இலக்கியம், கம்ப ராமாயணத்தில் தொடங்கி புதுக்கவிதை, சிறுகதைகள் வரை அது எப்படிப் பயன்பட்டிருக்கிறது என்று அறிவீர்களா?

இப்படி லட்சக்கணக்கான தமிழ்ச்சொற்களின் பொருள், பயன்பாட்டை விரிவாகத் தெரிந்து கொள்வதற்கான ஓர் அருமையான தளம், தமிழ் விக்சனரி. இங்கே நமக்குச் சந்தேகமுள்ள சொல்லைத் தட்டச்சு செய்து தேடலாம் அல்லது தினம் ஒரு சொல் என அவர்கள் சொல்லித்தருவதைக் கற்றுக்கொள்ளலாம், போரடித்தால், 'நீயே ஏதாவது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருள் சொல்' என்று ’க்ளிக்’ செய்து படிக்கலாம்.

 

'விக்கி' என்றால், எல்லாரும் சேர்ந்து உருவாக்கும் இணையதளம் என்று பொருள். 'விக்கிப்பீடியா' என்பது எல்லாரும் சேர்ந்து உருவாக்கும் என்சைக்ளோபீடியா. அதுபோல, 'விக்சனரி' என்பது எல்லாரும் சேர்ந்து உருவாக்கும் டிக்சனரி (அகராதி). இது நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே இருக்கும். நாமும் இதற்குப் பங்களிக்கலாம். அதாவது, நாம் தேடும் சொல் அல்லது பொருள் இங்கே இல்லாவிட்டால், நாமே அதைச் சேர்த்து உதவலாம்.

இனி, தடிமனான அகராதிகளைத் தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை. அகராதிகளும் மேகமயமாகி விட்டன! (தொடரும்)

மேலும் படிக்க:
 ஆடு புலி ஆட்டம் (Game App)
 Free Tamil Ebooks App
 தமிழ் அப்ளிகேஷன் விமர்சனம்- இ-நூல்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles