ஆடு புலி ஆட்டம் விளையாட்டு செயலிக்கு  ஜப்பான் தமிழ்ச் சங்கம் வாழ்த்து!

Wednesday, September 21, 2016

தமிழர்களின் விளையாட்டுகளில் ஆடு புலி ஆட்டம் இன்றளவும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் எளிமையும், விளையாடக் கூடிய விதிகளும்தான். பொதுவாக இதனை தமிழர்களின் திண்ணை வியூக விளையாட்டு மற்றும் மதிநுட்ப உத்தி விளையாட்டு என்று குறிப்பிடுவர். வெட்டுப் புலி ஆட்டம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

எந்தவொரு விளையாட்டுக்கும் விதி என்பது மிகவும் அவசியமானது என்பதை நாம் எல்லோருமே அறிந்துதான். ஆனால், ‘ஆடு புலி ஆட்டம்’ மட்டும் இத்தகைய விளையாட்டுகளில் இருந்து ஸ்பெஷலாக தெரிவது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யோசிக்க நேரமில்லை என்றால் தப்பில்லை. இனிவரும் வாக்கியங்களை கவனியுங்கள் போதும்!

 

பொதுவாக தமிழினத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. அத்தகைய வரலாற்றில் தவறாது இடம் பிடிப்பவை போர்கள். எப்படி போரிடுவது? போரின்போது எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்? எப்போது நிறுத்த வேண்டும்? உள்ளிட்ட போர் விதிமுறைகளும் தமிழ் இனத்துக்கு உண்டு. அப்படியாக இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரானது, ஒவ்வொரு நாளும் சூர்ய அஸ்தமனமாகும்போது நின்றுவிடும். இரவுகளில் வீரர்கள் ஓய்வெடுத்துக்கொள்வது உண்டு. சில நேரங்களில் ஓய்வை தவிர்த்து விளையாட்டுகளில் ஈடுபடுவர். அப்படியாக போர் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘ஆடு புலி ஆட்டம்’ என்றொரு தகவலை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

மேலும், பிற விளையாட்டுகளுக்கு விதிகள், வழிமுறைகளைத் தாண்டி அந்த விளையாட்டு எதாவதொரு பொருளைச் சார்ந்திருக்கும். குறிப்பாக ‘கிட்டிபுல்’ என்றொரு விளையாட்டை எடுத்துக்கொள்வோம். அதற்கு இருபக்கமும் கூர்மையாக வெட்டுப்பட்ட சிறிய குச்சியும் (புல்), அதேபோல சற்று நீண்ட கைக்குப் பிடிக்கும் வகையிலான (கிட்டி) குச்சியும் தேவை. (இப்போது அதைத்தான் நமது இளைஞர்கள் ‘கிரிக்கெட்’ என்ற வடிவத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்) ஆனால், ஆடு புலி ஆட்டத்துக்கு இவையெல்லாம் தேவையில்லை. 

 

பெரிய மைதானமோ, விளையாட்டு அரங்கோ அவசியமே இல்லை. மாறாக, நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கேயே உட்கார்ந்து ஆடுபுலி ஆட்டத்தை ஆட முடியும். கரிக்கட்டை இருந்தால் அவற்றைக் கொண்டு ஒரு முக்கோணக் கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியில் இருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்த கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக் கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும். புளியங்கொட்டைகளை ஆடுகளாகவும் கூழாங்கற்களை புலி எனவும் கருதுவர். 18 ஆட்டக் காய்கள் இருக்க வேண்டும். 3 காய்களை புலிகளாகவும் 15 காய்களை ஆடுகளாகவும் எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். இது சுவாரஸ்யம் நிறைந்த ஒரு விளையாட்டு என்றால் அது மிகையில்லை!

 

போரின்போது எதிரிகளை எப்படி வெல்லலாம் என்பதை வியூகம் அமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது ஆடுபுலி ஆட்டம் என்றும் நம்பப்படுகிறது. இதனுடைய அடுத்தக் கட்ட வளர்ச்சிதான் சதுரங்க ஆட்டம் (செஸ்) என்றும் குறிப்பிடப்படுகிறது. எதுவாயினும், ஆடுபுலி ஆட்டம் இன்றளவும் பொதுமக்களால் விருப்பத்தோடு விளையாடப்படுகிறது. அத்தகைய விளையாட்டுதான் தற்போது தொழில்நுட்ப மாற்றங்களால் விளையாட்டு செயலியாக (Game App) உருவாக்கப்பட்டு இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.

 

விளையாட்டு செயலிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜாக்ஸ் மீடியாடெக் நிறுவனம் சமீபத்தில் உருவாக்கியுள்ள செயலி(App)தான் ஆடு புலி ஆட்டம் (Goats or Tigers). பல்வேறு அம்சங்கள் கொண்டதாக இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக சாதா ஆடு, வெள்ளாடு, கருப்பாடு, தங்க ஆடு என நீங்கள் விளையாடும் திறமைக்கு ஏற்ப ஆடுகள் வழங்கப்படும். அதேபோல சாதா புலி, வெள்ளைப் புலி, கரும்புலி, தங்கப் புலியும் உண்டு. மேலும், உங்கள் விருப்பத்துக்கு வெயில், மழை, குளிர், பனி என பருவமாற்றத்தை தேர்வு செய்து விளையாடலாம். இரவு, பகல் என்றும் மாற்றலாம். 

 

ஏற்கனவே ஆடுபுலி ஆட்டத்தை மையமாகக் கொண்டு விளையாட்டு செயலிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனைக் காட்டிலும் அதிகமான அம்சங்களை கொண்டுள்ளது அஜாக்ஸ் மீடியா டெக் உருவாக்கியுள்ள விளையாட்டு செயலி. முழுக்க 3டி உருவாக்கத்தில் நீங்கள் விளையாட முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இந்த செயலியை இந்தியாவில் ரூ.60 ($0.99) கொடுத்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். பிறகு இந்த விளையாட்டு செயலியில் கூடுதல் சிறப்பு அம்சங்கள் இணைக்கப்படும்போது அதனை ஒவ்வொருமுறையும் இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். விரைவில் ஆன்லைனில் விளையாடும் அம்சத்தை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். 

 

சமீபத்தில் இந்த விளையாட்டு செயலி பற்றி அறிந்த ஜப்பான் தமிழ் சங்கம் “தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை கணினி உலகத்திற்கு கொண்டு சேர்க்கும் முயற்சி” என பாராட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, “தமிழர் விளையாட்டான இந்த ஆடு புலி ஆட்டம் (Goats or Tigers) விளையாட்டு செயலியை செப்டம்பர் 24-ந்தேதி ஜப்பான் தமிழ்ச் சங்கம் நடத்தும் “வணக்கம் தமிழகம்” என்னும் “தமிழர் விளையாட்டு மற்றும் உணவுத் திருவிழா”வில் ஜப்பானில் உள்ள தமிழர்களிடம் அறிமுகப்படுத்துகிறோம்” என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தமிழர்களின் பிற விளையாட்டுக்களையும் கணினி உலகுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் குடிபெயர்ந்திருந்தாலும், தங்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை அவர்கள் மறக்கவில்லை என்பதுதான் ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு செயலிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு. இனி விளையாடி பார்க்கலாமா!

 

ஆடு புலி ஆட்டம் (Goats or Tigers) விளையாட்டு செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! 

iOS:
https://itunes.apple.com/in/app/goats-or-tigers/id1110328704?mt=8

Android:​
https://play.google.com/store/apps/details?id=com.ajax.GoatsOrTigers&hl=en

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles