கோனேரிப்பட்டி டு கோடம்பாக்கம் - 32

Friday, July 14, 2017

“தென்னை மரத்துல தேள் கொட்டனதுக்கு பனை மரத்துல நெறி ஏறுச்சாம்” இந்த பழமொழி யாருக்கு பொருந்துச்சோ இல்லையோ இந்த சிச்சுவேஷன்ல பவித்ராவுக்கு கரெக்டா பொருந்துச்சு. கோமலும் பவித்ராவும் வடபழனி பாரம் விஜயா மால்ல ஜாலியா சுத்திட்டு இருக்கும் யாரோ எடுத்த ஒரு செல்பில பின்னாடி போகஸ் ஆக. அத எடுத்தவன் அந்த போட்டோவ பேஸ்புக்ல போட, அந்த போட்டோவ பாத்து அவனோட பிரண்ட் அத லைக் பண்ண, அவன் லைக் பண்ணது அவனோட இன்னொரு பிரண்டான பவித்ரா சித்தப்பா பையன் டைம்லைன்ல தெரிய, அத பாத்து ஷாக் ஆகி அவன் போட்டோவ அப்படியே பவித்ரா அப்பாகிட்ட காட்ட, அந்த மொமண்ட்லதான் அவரு கொலை  வெறி ஆனாரு. 
 

அடுத்த செகண்ட் போன எடுத்து கோமலுக்கு போன் அடிச்சாரு. அப்பதான் பவித்ராவ விட்டுட்டு ரூமுக்கு வந்து லவ் பீல்ல கோமல் படுத்து இருந்தான். போன் ரிங் ஆகற சத்தம் கேட்டு போன எடுத்து பாத்தா பவித்ரா டாடி காலிங் அப்படின்னு டிஸ்ப்ளே காட்டுச்சு. கோமலுக்கு ஒரு செகண்ட் கொலை நடுங்குனாலும் வேற வழியில்லாம கால அட்டெண்ட் பண்ணான். போன எடுத்ததும் பவித்ராவோட அப்பா “ஏண்டா .. பொய் சொல்லி என் பொண்ண மெட்ராஸ்க்கு வர வெச்சு ஊர் சுத்தி இருக்கன்னு ஆரம்பிச்சு பிரகாஷ்ராஜ், ரகுவரன், கோட்டா சீனிவாசராவா மாறி கோமல போன்லயே கொன்னு எடுத்தாரு. கடைசியா “தக்காளி .. காலைல பவித்ரா இங்க வர்றதுக்குள்ள நீ இங்க வந்து நிக்கணும். இல்ல.. அவள வெட்டி போட்டுடுவன்னு ஒரு கடுமையான வார்னிங்க குடுத்துட்டு போன வெச்சாரு. லவ் பீல்ல இருந்த கோமல ஒரே ஒரு போன் கால் அலறி அடிச்சு ஓட வெச்சுச்சு. கோமல் அவசரமா இந்த விஷயத்த சொல்ல பவித்ராவுக்கு போன் அடிச்சான். பவித்ரா ட்ரெயின்ல தூங்கிட்டே கோமல் கூட மெரினா பீச்ல சுண்டல் சாப்பிடற மாதிரி கனவு கண்டுட்டு இருந்ததால அவளுக்கு போன் அடிச்ச சத்தமே கேக்கல. பவித்ராவுக்கு திரும்பியும் கோமல் போன் அடிச்சான். அப்பவும் அவ போன எடுக்கல. கோமல் வேற வழி இல்லாம அவசரமா மூஞ்சிய கழுவிட்டு, அவசரமா ஒரு பேண்ட மாட்டிட்டு ரூம்ல இருந்து கிளம்புனான். 
 
அதே அவசரத்தோட ஒரு ஆட்டோவ புடிச்சு கோயம்பேடு வந்து இறங்கும் போது பார்த்தா மணி 11.30. கரெக்டா ஒரு கோயம்புத்தூர் பஸ் கிளம்பறதுக்கு தயாரா இருந்துச்சு. கோமல் ஏறி உட்கார்ந்தான். பஸ் கிளம்பறதுக்கு முன்னாடியே கண்டக்டர்கிட்ட “அண்ணே.. வழில 10 இடத்துல நிறுத்தி டீ சாப்பிடாதீங்க.. லவ் மேட்டர்.. காலைல நான் 7  மணிக்குள்ள நான் தாராபுரத்துல இருக்கணுன்னு சொன்னான். உடனே கண்டக்டரும் “கவலப்படாதப்பா .. நானே லவ் மேரேஜ்தான்.. பஸ்ஸ எங்கயும் நிறுத்தாம ஓட்ட சொல்றன்னு நம்பிக்கை குடுத்துட்டு போனாரு. பஸ் கோயம்பேட்ல இருந்து கிளம்புச்சு. பஸ் போற ஸ்பீட விட கோமலோட ஹார்ட் துடிக்கற ஸ்பீட் படு வேகமா இருந்துச்சு. காலைல போனா என்ன நடக்கும்? எப்படி மேட்டர் தெரிஞ்சுது? பவித்ராவ அந்தாள் எதாவது பண்ணிடுவானா? இப்படி ஒரு 1000 கொஸ்டின் அடுத்தடுத்து வந்து கோமல் மனசுல அட்டெணன்ஸ் போட்டுட்டே இருந்துச்சு. குழப்பத்துல கோமலுக்கு பதிலும் வரல.. தூக்கமும் வரல. பஸ் உளுந்தூர்பேட்டை தாண்டும் போது மணி 2 ஆகி இருந்துச்சு. கோமல் அப்பதான் லேசா கண்ண மூடி தூங்க ஆரம்பிச்சான். 
 
அடுத்த ஷாட்ல கோமல் பவித்ராவோட அப்பா முன்னாடி நின்னுட்டு இருந்தான். அவரு கையில ஒரு பெரிய வீச்சரிவாள் இருந்துச்சு. அவருக்கு பின்னாடி ஒரு பத்து ரவுடி பசங்க கையில் கிரிக்கெட் பேட், சைக்கிள் செயின், இரும்பு கோடாரின்னு விதவிதமான ஆயுதங்களோட நின்னுட்டு இருந்தாங்க. கோமல் அவர பாத்து “அங்கிள்.. என்ன மன்னிச்சுடுங்க அங்கிள்” அப்படின்னு சொல்லி முடிக்க .. அடுத்த செகண்ட் பவித்ராவோட அப்பா அடியாட்களை பாத்து “அட்டாக்ன்னு” கத்த.. ரவுடிகள் ஆயுதங்களோட கோமல் மேல பாய்ஞ்சாங்க. முதல் அடியா கிரிக்கெட் பேட் மண்டைல வந்து நங்குன்னு இறங்குச்சு. கோமல் அதுக்கு ரியாக்ஷன் குடுக்கறதுக்குள்ள சைக்கிள் செயின் கால்ல சுளீர்ன்னு வந்து இறங்குச்சு. கோமல் அந்த ரியாக்ஷன்ன மறந்து இந்த ரியாக்ஷன் குடுக்க போறதுக்குள்ள, கோடாரி வந்து கோமலோட கையில இறங்கி கை துண்டா போய் கோமல் முன்னாடி விழுந்துச்சு. கோமல் “ஆஆஆன்னு” கத்தும் போது கண்ணு முழிச்சான். பாத்தா பக்கத்துல இருந்தவங்க அலறி அடிச்சு எந்திரிச்சு கோமல பாத்தாங்க . என்னப்பா கெட்ட கனவான்னு  ஒருத்தர் கேட்டாரு. கோமல் ஆமாம்ன்னு தலை அசைச்சான். உடனே அந்தாள் “எப்பவுமே கெட்டதையே நினைச்சுட்டு இருந்தா.. கெட்ட கனவு வராம, நல்ல கனவா வரும்ன்னு ஒரு கவுண்டர் குடுத்துட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சாரு. கோமலுக்கு அதுக்கு அப்புறம் தூக்கமே வரல. முழிச்சுக்கிட்டே வந்தான். காலைல 5.30 மணிக்கு வந்து பெருமாநல்லூர்ல இறங்குனான்.
 
கட் பண்ணா அடுத்த ஷாட்ல பவித்ரா அப்பா முன்னால நின்னுட்டு இருந்தான். அவரு எதுவும் பேசாம கோமலையே பாத்துட்டு இருந்தாரு. அப்பதான் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து இறங்கி பஸ் புடிச்சு பவித்ரா வீட்டுக்குள்ள வந்து சேர்ந்தாள். உள்ள நுழைஞ்சதும் பவித்ராவுக்கு கோமல் நிக்கறத பாத்து படு பயங்கர ஷாக்கா இருந்துச்சு. அரண்டு போய் கையில இருந்த பேக்க அப்படியே கீழ போட்டுட்டு அப்பாவ பார்க்க, அப்பா அவள கொலைவெறியோட பாத்தாரு. அடுத்த ஷாட்ல பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆச்சு. 
 
பவித்ராவோட அப்பா கோமல பாத்து “ நான் எவ்வளவு டீசண்டா உனக்கு டெட் லைன் குடுத்து என் பொண்ண கல்யாணம் பண்ணி வெக்கறன்னு சொன்னன். ஆனா நீ குடுத்த வாக்க காப்பாத்தாம திருட்டுத்தனமா என் பொண்ண மெட்ராஸ் வர வெச்சு ஊர் சுத்தி இருக்க.. எப்ப என் வார்த்தைய ரெண்டு பேரும் மீறிட்டீங்களோ அப்பவே நான் குடுத்த வாக்கும் முடிஞ்சு போச்சு. இப்ப சொல்றன்.. இனிமே என் பொண்ண நீ நினைச்சு கூட பாக்க கூடாது. என் பொண்ணு நான் பாக்கற மாப்பிள்ளையதான் கல்யாணம் பண்ணிப்பான்னு மூச்சு விடாம பேசி, இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்ன்னு விறைப்பா நின்னாரு. “தெரியாம பண்ணிட்டோம்..என்ன மன்னிச்சுடுங்க சார்”ன்னு கோமல் கண்ணீர் விட்டான். பவித்ரா தன் பங்குக்கு அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு பார்த்தாள். பவித்ரா அப்பாகூட இருந்த சில அல்லக்கைங்க அந்த சமயம் பாத்து “ஏப்பா..மன்னிப்பு கேக்கறாங்கன்னு மன்னிச்சு விட்டா நாளைக்கு உன்ன கால்ல விழ வெச்சுடுவாங்க.. இனி அந்த பையன் நம்ம பொண்ணு பத்தி நினைக்க கூடாதுன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசி அனுப்புப்பா.. அப்படி மீறி பையன் தகராறு பண்ணா நாம அவன வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா ஆக்கிடலாம்”ன்னு சொல்லி அந்த சூழ்நிலைய மேலும் ரணகளமா மாத்துனாங்க . 
 
கோமல் மறுபடியும் அவருகிட்ட ஒரு கருணை மனு போட்டு பாத்தான். “இனி உங்களுக்குள்ள எதுவும் இல்ல .. நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டன்”னு பவித்ராவோட அப்பா ஒரு போக்கிரியா மாறுனாரு. கோமலோட காதல் மறுபடியும் பெரும் பேராபத்துல வந்து நின்னுச்சு. 
 
(கோமலின் கலைப்பயணம் தொடரும்)

- சந்துரு

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles