கோனேரிப்பட்டி டு கோடம்பாக்கம் - 31

Friday, June 30, 2017

கோமல் கிளம்பி வந்தாலும் அவன் மனசு புல்லா எக்மோர் ஏரியாவுலயே டெண்ட் அடிச்சு உட்கார்ந்து இருந்துச்சு. இன்னிக்கு ஏன் இவ்ளோ சீக்கிரம் சூரியன் மறைஞ்சதுன்னு சூரியன் மேல கோபப்பட்டான். சூரியன பாத்து நாய் குரைச்சா நாய்க்குத்தான் நஷ்டம்ன்னு தெரிஞ்சதால அவனோட கோபம் டைம் மேல மாறுச்சு. கையில கட்டி இருந்த வாட்ச முறைச்சு பாத்தான்.

அதே சமயம் பவித்ரா நாத்தனார் வீட்ல சாப்பிட்டுட்டு இருக்க, “என்னம்மா.. பவித்ரா ட்ரெயினிங் எல்லாம் எப்படி போச்சு?”ன்னு நாத்தனார் கேட்டாங்க, “ரொம்ப நல்லா போச்சுக்கா.. நிறைய கத்துக்கிட்டன்”னு பவித்ரா பவ்யமா பதில் சொல்ல, சாப்பிட்டு இருந்த நாத்தனார் புருஷன் “சூப்பர் இனிமே பவித்ரா கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்க போறா பாரு”ன்னு  எதோ பெரிய ஜோக் சொன்ன மாதிரி ஹாஹாஹான்னு அவரே சிரிச்சுக்கிட்டாரு. 
 
சாப்பிட்டு முடிச்சதும் போய் படுத்த பவித்ரா பெட்ஷீட்டுக்குள்ள மறைச்சுக்கிட்டே குசு குசுன்னு கோமல்கிட்ட நைட் ரெண்டு மணி வரைக்கும் போன்ல பேசுனா. இந்த காதுல கேக்கற வாய்ஸ் அந்த காதுல கேக்காதுங்கற அளவுக்கு மெதுவா பேசற கலை இருக்கே அது காதலிக்கறவங்களுக்கு மட்டுமே இருக்கற திறமை. சாதாரணமான ஆட்கள் போன வாங்கி காதுல வெச்சா “என்னப்பா.. சைலண்டா இருக்கு.. யாரும் பேசமாட்டங்கறாங்கன்னு சொல்ற அளவுக்கு மெதுவா பேசறதும், அத புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்றதும் சத்தியமா ஒரு மெடிக்கல் மிராக்கிள்தான். 
 
அடுத்த நாள் காலைல அதே 8 மணிக்கு கோமல் வந்து பவித்ராவ பிக்கப் பண்ணிக்கிட்டான். இரண்டு பேரும் முதல்ல சரவணபவன் போய் இட்லியும், பொங்கலும் சாப்பிட்டாங்க. சாப்பிட்டு முடிச்சதும் “எங்க போலாம்?”ன்னு கோமல் கேட்டான். பவித்ரா யோசிச்சுட்டு “உன் ரூமுக்கு போலாம்”ன்னு சொன்னாள். அதக்கேட்டதும் கோமல் கொஞ்சம் ஷாக்கிங்கா  “என்னது ரூமுக்கா? எதுக்கு?”ன்னு கேட்டான். 
 
பவித்ரா அவன் பதட்டத்த புரிஞ்சுக்கிட்டு “நீ நினைக்கறது எல்லாம் இல்ல .. நீ தங்கி இருக்கற ரூம். நீ டெய்லியும் டிபன் சாப்பிடற இடம், டீ சாப்பிடற இடம், உன் ஆபிஸ் இப்படி எல்லா இடத்தையும் பாக்கணும். போன்ல பேசும் போது நிறைய சொல்லி இருக்க இல்ல.. இப்ப அதெல்லாம் நேர்ல பாக்கணும் போல இருக்கு”ன்னு சொன்னாள். 
 
அடுத்த செகண்ட் மைசூர் மகாராஜா வாழ்ந்த அரண்மனைய சுத்தி காட்டற மாதிரி பெருமையோட கோமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள பவித்ராவுக்கு சுத்திக் காட்ட தயார் ஆனான். 
 
ரெண்டு பேரும் முதல்ல அம்மன் தேநீர் விடுதிக்கு வந்து இறங்குனாங்க. கோமல் கடை ஓனர்கிட்டயும், டீ மாஸ்டர்கிட்டயும் பவித்ராவ அறிமுகபடுத்தி வெச்சான். மாஸ்டர் பவித்ராவுக்காக ஸ்பெஷல் இஞ்சி டீ போட்டு குடுத்தாரு. இதோ இந்த இடத்துல உட்கார்ந்துதான் நான் டீ குடிப்பன். இதோ அங்க நின்னுட்டுதான் நான் பேப்பர் படிப்பன், இங்க இருந்துதான் நான் வடை சாப்பிடுவன்னு கோமல் பவித்ராவுக்கு அந்த இடங்கள சுட்டிக் காட்டிட்டு இருந்தான். பவித்ராவும் “ஓ.. அப்படியா”ன்னு அந்த இடத்த எல்லாம் ஆச்சர்யமா பார்த்துட்டு இருந்தாள். 
 
என்னடா இவன் பாரதியார் வாழ்ந்த இடத்த சுத்தி காட்டற மாதிரி சுவாரஸ்யமா இதெல்லாம் சுத்தி காட்டிட்டு இருக்கானேன்னு டீ மாஸ்டர் கொஞ்சம் குழப்பாமாவே கோமல பாத்தாரு. அப்ப பாத்து டீக்கடைக்கு டீ குடிக்க வந்த நாலைஞ்சு அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் கோமல பாத்ததும் வணக்கம் வெச்சு பவ்யமா நிக்க, பவித்ராவுக்கு கோமல் அப்ப கோஹினூர் டைமண்ட் மாதிரி தெரிஞ்சான். 
 
கட் பண்ணா ரெண்டு பேரும் கோமல் டெய்லியும் டிபன் சாப்பிடற ஜெயந்தி அக்கா மெஸ்ல இருந்தாங்க. கோமல் ஜெயந்தி அக்காவுக்கு பவித்ராவ அறிமுகப்படுத்தி வெச்சான். ஜெயந்தி அக்கா கோமல பத்தி பவித்ராகிட்ட ஒரே புகழ் மாலையா பாடுச்சு. 
 
“அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும் போது இங்கதான் கண்ணு ஷங்கரு, சசிக்குமாரு, முருகதாஸூ எல்லாம் டிபன் சாப்பிடுவாங்க. அவங்க எல்லாம் இன்னிக்கு பெரிய டைரக்டரா வந்துட்டாங்க. எல்லாம் இந்த அக்கா கையால டிபன் சாப்பிட்ட ராசி, அதே ராசியோட கோமலும் பெரிய ஆளா வருவாப்ல பாரு”ன்னு அக்கா கேப்ல தன்னோட புகழ லைட்டா பாடிக்கிட்டாங்க. பவித்ராவுக்கு அங்க பெரிய டைரக்டர் எல்லாம் டிபன் சாப்பிட்டு இருக்காங்கங்கறதே ஆச்சர்ய்மா இருந்துச்சு. ஷங்கர் சார் என்னக்கா சாப்பிடுவாருன்னு? பவித்ரா ஆர்வமா ஒரு கேள்விய கேட்டாள்.
 
“அவரு என்னம்மா எப்ப வந்தாலும் கல் தோசைய விரும்பி சாப்பிடுவாரு”ன்னு அக்கா சொன்னாங்க. ஷங்கர் சார் எவ்ளோ பெரிய ஆள் அவரே கல் தோசையதான் சாப்பிடுவாருன்னு பவித்ரா கோமல்கிட்ட கேட்க,  “அம்பானியே காலைல இட்லிதான் சாப்பிடறாராம்.. இதெல்லாம் ஒரு மேட்டரா வா” அப்படின்னு சொல்லி அடுத்து கோமல் அவன் இருக்கற ஏரியாக்கு பவித்ராவ அழைச்சுட்டு போனான். 
  
ரூமுக்கு மேல போகாம கீழ இருந்தே கோமல் வாழற அந்த மாளிகைய ரெண்டு பேரும் பாத்தாங்க. பவித்ரா பரவசத்தோட அதை பாக்க, “கோமல் மேல போலாமா?”ன்னு கேட்டான். “வேண்டாம்.. மேல உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க”ன்னு பவித்ரா சொன்னாள். “மேல யாரும் இல்ல.. எல்லாம் வெளில போயிட்டாங்க.. வா போலாம்”ன்னு மறுபடியும் கோமல் சொன்னான் . தனி ரூம், ரெண்டே பேர், எதாவது ஏடாகூடமா ஆயிட்டா பிரச்சனைன்னு அவளோட சிறு மூளை அவளுக்கு ரெட் சிக்னல் குடுக்க, 
“மேல யாரும் இல்லையா.. அப்படின்னா கண்டிப்பா வேணாம்.. இப்படியே போயிடலாம் வா”ன்னு பவித்ரா சொன்னாள்.
 
ரெண்டு பேரும் அடுத்து கோமலோட ஆபிஸ் இருக்கற ஏரியாவுக்கு வந்தாங்க. கோமல் அவள ஆபிஸ்க்கு கூட்டிட்டு போய் தன்னோட அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ், மேனேஜர்ஸ் எல்லாம் அறிமுகபடுத்தி வெச்சான். அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் பாசமா பவித்ராவ அண்ணின்னு கூப்பிட பவித்ராவுக்கு கண்ல ஆனந்த கண்ணீர் அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்டு மாதிரி இனிப்பா வழிஞ்சுது. 
 
கோமல் தன்னோட ரூம், அவன் உட்கார்ற சேர், எடிட்டிங் ரூம்ன்னு எல்லாத்தையும் சுத்தி காட்டுனான். எடிட் ரூம்ல உட்கார வெச்சு பவித்ராவுக்காக படத்தோட ஓப்பனிங் பாட்ட எக்ஸ்குளூஸ்ஸிவா போட்டு காட்டுனான். பவித்ரா பாத்துட்டு “சூப்பரா இருக்கு செல்லம்”ன்னு அவனுக்கு கையில ஒரு முத்தம் குடுத்தாள். மதியம் லஞ்ச் அங்கதான் சாப்பிடணுன்னு புரொடக்ஷன் மேனேஜர் ராஜீ ஸ்பெஷல் லஞ்ச் ஆர்டர் பண்ணி இருந்தாரு. 
 
பவித்ரா கோமல் டீம் கூட உட்கார்ந்து சந்தோஷமா சாப்பிட்டாள். கோமலுக்கு கிடைக்கற மரியாதை, கவனிப்பு எல்லாம் பாக்கும் போது பவித்ராவுக்கு கோமல் இப்ப கோஹினூர் டைமண்ட விட ரொம்ப பெருசா தெரிஞ்சான். 
 
வெளிய வந்ததும் பவித்ரா கோமல்கிட்ட “ஸாரி.. செல்லம்.. உன்ன புரிஞ்சுக்காம தேவை இல்லாம உன்கிட்ட சண்டை போட்டுட்டன். உனக்கு மரியாதை இருக்கு, எவ்ளோ ரெஸ்பான்ஸிப்ளிட்டி இருக்குன்னு இப்பதான் தெரியுது. இத்தனை பேர வெச்ச வேலை வாங்கறதுக்கே தனி தைரியம் வேணும். இனிமே உன்ன தேவை இல்லாம டென்ஷன் பண்ண மாட்டன்”னு சொல்லி ஒரு வாக்குறுதி குடுத்தாள். 
 
அடுத்து ரெண்டு பேரும் பாரம் மாலுக்கு வந்தாங்க. கோமல் அவளுக்கு ட்ரஸ் வாங்கி குடுக்க, பவித்ரா அவனுக்கு ட்ரஸ் வாங்கி குடுத்தாள். ரெண்டு பேரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே மால் எல்லாம் சுத்தி பாத்தாங்க. வெளிய வந்ததும் பவித்ரா கோமல்கிட்ட கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாலுக்கு நீ அடிக்கடி ஷாப்பிங் கூட்டிட்டு வரணுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டாள். மணி ஆறு ஆகி இருக்க நாத்தனார் கிட்ட இருந்து போன் வந்துச்சு. 9 மணி ட்ரெயின் புக் பண்ணி இருந்ததால சீக்கிரம் வரச் சொல்லி சொன்னாங்க. 
 
கோமல் அவள கூட்டிக்கிட்டு எக்மோர் வந்தான். “நீ போயிட்டு ரெடி ஆகி கிளம்பும் போது எனக்கு கால் பண்ணு நான் இங்கயே வெயிட் பண்றன்”னு சொல்லி அனுப்புனான். பவித்ரா நாத்தனார் வீட்டுக்கு போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு நாத்தனார் புருஷனோட வெளில வந்தாள். பவித்ராவ ட்ராப் பண்றதுக்காக நாத்தனார் புருஷன் பைக்ல வர, கோமல் அவர பின்னாடியே பாலோ பண்ணான். சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து நாத்தனார் ஹஸ்பண்ட் பவித்ராவ ட்ரெயின்ல உட்கார வெச்சுட்டு கிளம்புனாரு. அவரு கிளம்புனதும் வாட்டர் பாட்டில், சாக்லெட், ஏர் பில்லோன்னு பவித்ராவோட பயணத்துக்கு தேவையான பொருட்கள வாங்கிட்டு கோமல் அவளுக்கு எதிர்ல வந்து உட்கார்ந்தான். 
 
ரெண்டு பேரும் பிரிய போறத நினைச்சு ஒருத்தர் ஒருத்தர் பீலிங்கா பாத்துக்கிட்டாங்க. உன்னோடு இருந்த ஒவ்வொரு மணித்துளியும் அடுத்த ஜென்மத்திலும் அழியாது கண்மணின்னு கோமல் பீல் பன்ணான். 
 
இவங்க பீலிங் பத்தி எல்லாம் கவலைப்படாம ட்ரெயின் மூவ் ஆக ஆரம்பிச்சது. கோமல் இறங்கி வந்து டாட்டா காட்ட பவித்ரா அவன பாத்துட்டே டாட்டா சொன்னாள். அடுத்த செகண்ட் “மிஸ் யூ செல்லம்” அப்படின்னு ரெண்டு பேரோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸூம் மாறுச்சு. அதே சமயம் பவித்ராவோட அப்பா வாட்ஸ் அப்ல கோமலும், பவித்ராவும் பாரம் மால்ல ஒண்ணா சுத்துன போட்டோஸ பாத்துட்டு இருந்தாரு. அவர் முகம் கோபத்துல கேப்டன் விஜயகாந்த் மாதிரி மாறுச்சு!

(கோமலின் கலைப்பயணம் தொடரும்..)

-  சந்துரு

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles