கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் 21

Friday, January 13, 2017

சினிமாவுக்கு கதை எழுதறதுங்கறது ஒரு காக்கா வடை சுடுற மாதிரி ஈஸியான வேலை கிடையாது. இதை கதை எழுத உட்கார்ந்தப்பதான் கோமல் உணர்ந்தான். பேப்பர் பேனாவ எடுத்து வெச்சு எழுதலாம்னு உட்கார்ந்தா, மைண்ட்ல ஒரு சனிக்கிழமை சாயங்காலம் சரக்கடிச்சுட்டு சன்னி லியோன் படம் பார்த்த ஞாபகம் எல்லாம் வந்து ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு.

“சன்னி ப்ளீஸ் என் மைண்ட்ல இப்ப வராத.. என் மனசுல பவித்ராவ தவிர, இப்ப வேற யாரும் இல்ல”ன்னு கோமல் மானசீகமா சன்னிக்கு ஒரு வேண்டுகோள் வச்சுட்டு மறுபடியும் கதை யோசிக்க ஆரம்பிச்சான். 

 

பசி வந்துச்சு, தாகம் வந்துச்சு, யூரின் வந்துச்சு, டென்ஷன் வந்துச்சு, தூக்கம் வந்துச்சு, வீடு பெருக்கற அக்கா வந்துச்சு.. ஆனா கோமல் மைண்ட்ல கதை மட்டும் வரவே இல்ல. உடனே விக்கிக்கு போன் அடிச்சு விசயத்த சொன்னான் கோமல். “ப்ரோ.. நீங்க முதல்ல என்ன மாதிரி ஜானர்ல படம் பண்ணப் போறீங்கங்கறத பிக்ஸ் பண்ணிக்குங்க.. அப்பதான் உங்களால கதை ஈஸியா யோசிக்க முடியும்”னு விக்கி அட்வைஸ் பண்ணான். கோமலுக்கு கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்தது. முதல்ல நாம என்ன ஜானர்ல படம் பண்ண போறோம்னு யோசிச்சான். லவ், ஆக்‌ஷன், காமெடி, பேண்டசின்னு பல ஜானர்ல இருந்து, கோமல் காமெடியை செலக்ட் பண்ணான். ஏன்னா காமெடிதான் தனக்கு நல்லா வரும்னு அவன் நம்புனான். 

 

காமெடின்னு முடிவு ஆயிடுச்சு. அதுல என்ன மாதிரி கதை பண்ணலாம்னு யோசிச்சப்போ, ஆளாளுக்கு ஒரு கருத்து சொன்னாங்க. அதுல அதிகமான கருத்து பேய்ப்படத்த காமெடியா பண்ணலான்னு வந்தது. தமிழ் சினிமாவுல இப்ப பேய் படந்தான் ட்ரெண்டு. செக்கோஸ்லோவியால செத்துப்போய் பேய் ஆனவன் எல்லாம் இங்க இருக்கற டிமாண்ட் தெரிஞ்சு நடிக்க எதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு வடபழனில பேயா சுத்திட்டு இருக்கற அளவுக்கு, பேய்ப்படங்கள் நம்ம கோலிவுட்ட ரூல் பண்ணிட்டு இருந்தது. 

 

புரொடியூசர்ஸ்கிட்ட போய் அலைபாயுதே மாதிரி ஒரு நல்ல லவ் ஸ்டோரி சொன்னா கூட, உடனே அவங்க “கதை நல்லா இருக்கு… இதுல பேய் வில்லனா வந்தா நல்லா இருக்கும்”ன்னு சொல்ற அளவுக்கு பேய்த்தனமா இருந்துது பேய் சீசன்.  நாய்க்கு பொறை போடற மாதிரி பேய்க்கு எதுனா ஒரு டைட்டில் வெச்சு தினமும் நாலு படத்துக்கு பூஜை போட்டு இருந்ததையும் கோமல் யோசிச்சு பார்த்தான். ட்ரெண்ட்ல இருக்கற ஜானர்ல கதை யோசிக்கறதுதான் நம்மள ட்ரெண்டிங் ஆக்கும்னு முடிவு பண்ணி, கோமலும் பேய்க்கதை பண்றதா முடிவு பண்ணான். அடுத்த செகண்ட் “யூ டூ கோமல்”ன்னு அவன சுத்தி கண்ணுக்கு தெரியாம மறைஞ்சு இருந்த பேய்ங்க எல்லாம் கதறுச்சு. ஆனா அது அவன் காதுல விழல. காய்ஞ்சுபோய் இருந்த தமிழ் சினிமாவுல கான்ஜூரிங் பேய் வந்துதான் சீசன தொடங்கி வெச்சுது. அதனால கோமல் அந்த கான்ஜூரிங் பேயை லெப்ட்ல விட்டு ரைட்ல அடிக்கற மாதிரி, ஒரு டெரர் பேய் படம் பண்ணனும்னு முடிவு பண்ணான். ஆடியன்ஸூம் இப்பல்லாம் பேய் அடிவாங்கறத பார்த்து பெக்க பெக்கன்னு சிரிக்கற மனநிலைக்கு வந்துட்டாங்க அதனால கோமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது சரின்னு, அவனோட இண்டஸ்ட்ரி பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க. பேய்ப்படம் எடுத்தா ரிலீஸ் பண்றதுக்குன்னே  தேனாண்டாள் பிலிம்ஸ்ல இருக்கு. படம் ஈஸியா பிஸினஸ் ஆயிடும்னு கூடுதலா எனர்ஜி குடுத்தாரு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர். 

 

பேய்ப் படம் பண்றதுல சில அட்வாண்டேஜஸ் இருக்கு.. ஒண்ணு பட்ஜெட் ரொம்ப கம்மி. நாலு ஆர்டிஸ்ட், ஒரு வீடு இருந்தா போதும். முப்பது, முப்பத்தஞ்சு நாள்ல படத்த முடிச்சுடலாம். கதையும் ஒண்ணும் பெருசா யோசிக்க தேவையில்ல. செத்துப் போனவங்க ஆவியா ஒரு வீட்டுல இருக்காங்க.. ஹீரோ, ஹீரோயின் அந்த வீட்ல வந்து பேய்கிட்ட மாட்டிக்கறாங்கன்னு ஒரு டெம்பிளேட் கதையில, சில பல கொரியன் பட கான்ஜூரிங் காட்சிகளை சேர்த்தா திகில் கிளப்பற பேய்ப்படங்கள் ரெடி ஆயிடும். மத்த ஜானர் படங்கள் பண்றது பிரியாணி பண்ற மாதிரி பெரிய வேலை.. ஆனா பேய்ப் படம் பண்றது 2 மினிட்ஸ் நூடுல்ஸ் பண்ற மாதிரி சிம்பிளான வேலை. கோமல் நூடுல்ஸ் தான் பண்ண தயார் ஆனான்.

 

பேய்க்கதை யோசிக்கறதுக்கு முன்னாடி ரெபரன்ஸ் படம் எல்லாம் பார்த்துடுன்னு, கோடம்பாக்கத்தின் சம்பிரதாயத்த கோமலுக்கு எடுத்து சொன்னாரு ஒரு கோ-டைரக்டர். தெரிஞ்ச பிரண்ட், டாரண்ட் உதவியோட 3 டி.பி.க்கு ரெண்டு ஹார்ட் டிஸ்க்ல கோமல் பேய்ப்படங்கள லோட் பண்ணிட்டு, ஒரு எமகண்ட மரணயோக நேரத்துல முதல் பேய்ப்படத்த போட்டு உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சான். 

ஒரு வாரத்துல 113 பேய்ப்படம் பார்த்து சத்தமே இல்லாம ஒரு கின்னஸ் ரெக்கார்டை கோமல் உண்டாக்கி இருந்தான். பார்த்ததுல ஒரு படத்துல இருந்து கதைய லைட்டா உருவி பிரண்ட்ஸ்கிட்ட சொன்னா, “பாஸூ.. இதான் போன வாரம் பேயிங் கெஸ்ட்ங்கற டைட்டில்ல ரிலீஸ் ஆச்சே.. உங்களுக்கு முன்னாடியே அந்த டைரக்டர் டோரண்ட்ல டவுன்லோட் போட்டுட்டாரு போல.. வேற படம் பாருங்க பாஸூ”ன்னு சொன்னாங்க. மறுபடியும் உட்கார்ந்து அடுத்த ஒரு வாரத்துல 144 படம் பார்த்து, ரெக்கார்ட பிரேக் பண்ணான் கோமல். அப்படி பார்த்த படத்துல இருந்து ஒரு கதைய பார்ம் பண்ணி மறுபடியும் சொன்னான். உடனே “பாஸூ.. இதான் அந்த படம்.. இதான் இந்த படம்”ன்னு கோமலுக்கு ஓப்பனிங்லயே பல்ப் குடுத்தாங்க. ’உலகத்துல ரிலீஸான எல்லா பேய்ப்படத்தையும் ஏற்கனவே தமிழ் சினிமால கொத்து பரோட்டா போட்டு சால்னா ஊத்தி சாப்பிட்டுட்டாங்க’ன்னு கோமல் அப்பதான் உணர்ந்தான். 

 

’யாரும் சுடாத பழம் வேணும், என்ன பண்ணலாம்’ன்னு யோசிச்சுட்டு இருக்கும்போதுதான், போர்டு கம்பெனில வொர்க் பண்ற கோமலோட பிரண்ட் அருண் போன் பண்ணி “மச்சான்.. இன்னிக்கு நம் கிம் ஜீங் ஜா பர்த்டே.. நைட்டு பார்ட்டி ரூமுக்கு வந்துடு”ன்னு சொல்லிட்டு போனை வச்சான். 

 

கட் பண்ணா.. நைட் எபெக்ட்ல மறைமலர் நகர்ல இருக்கற ஒரு தெருவுல கோமல் நடந்துட்டு இருந்தான். நைட்டு பத்து மணிங்கறதனால ஏரியாவே சைலண்டா இருந்துச்சு. கோமல் மட்டும் அந்த தெருவுல நடந்துட்டு இருந்தான். அருண் ரூம் பக்கமா வரும்போது டக்குன்னு கரண்ட் கட் ஆக, ஏரியாவே இருட்டா மாறுச்சு. தூரத்துல ஒரு நாய் ஊளையிடற சத்தம் ஒரு மாதிரி கேட்க, கோமல் சிரிச்சான். ’ம்ம்ம்.. இதெல்லாம் நான் ஜகன்மோகினிலயே பார்த்துட்டண்டா’ங்கற மாதிரி இருந்தது அவனோட ரியாக்‌ஷன். 

 

கோமல் அந்த இருட்டுல நடந்து அருண் ரூமுக்கு வரும்போது கரண்ட்டும் கரெக்டா வந்துடுச்சு. கோமல் உள்ள போனதும் டிம் கிங் ஜாவுக்கு ஹேப்பி பர்த்டே ஜிங்குச்சான்னு ’விஷ்’ பண்ணான். உடனே அவன் “ஹேய்.. கமால் குமால்.. பர்த்டே எனக்கு இல்ல.. விஷ் கிம் ஜீங் ஜா”ன்னு சொல்ல, கோமல் 1113 தடவையா பல்ப் வாங்குனான். 

 

அவன தவிர எல்லாரும் சொஜூ சரக்கடிச்சாங்க. குடிக்கமாட்டன்னு ஏண்டா சத்தியம் பண்ணோம்னு, கோமல் அவனை அவனே அடிச்சுக்கிட்டான். மூணு ரவுண்ட் போனதும், ஜாலியா கோமலோட சினிமா லைஃப் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. கோமல் தன்னோட பேய்க்கதை அனுபவத்த அவங்ககிட்ட சொல்ல, கிம் ஜூங் ஜா உடனே “டோண்ட் வொர்ரி கமால் குமால்.. கோலிவுட் டைரக்டர்ஸ் காப்பி பண்ணாத கொரியன் ஹோஸ்ட் மூவிஸ் என்க்கு தெரியும். அது நான் கிவ் யூ .. யூஸ் கமால் குமால்”னு சொன்னான். 

 

சொன்ன சொல்ல காப்பாத்தற மாதிரி, அடுத்த நாள் டாரண்ட்ல கிடைக்காத டிவிடில கிடைக்காத கொரியன் பேய்ப் பட கலெக்‌ஷனை கிம் ஜீங் ஜா கோமலுக்கு குடுத்தான். அத கோமல் பய பக்தியோட வாங்கிட்டு வந்து, மீண்டும் தன்னோட ரெக்கார்ட பிரேக் பண்ண தயார் ஆனான். அந்த செகண்ட்ல இருந்து, கொரியன் பேய்களும் கோனேரிப்பட்டி கோமல்குமாரும்ன்னு ஒரு அத்தியாயம் ஸ்டார்ட் ஆச்சு. கோமலின் கலைப்பயணம் தொடரும்… 

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles