கோனேரிப்பட்டி டு கோடம்பாக்கம்!

Monday, August 21, 2017

“ஸாரி.. கோமல் .. நான் இந்த படத்த ரிலீஸ் பண்ண போறதில்ல” . சதீஷ் சொல்லி முடிச்ச அடுத்த செகண்ட் அவரோட போன் அடிச்சுது. பாத்தா எதோ புது நம்பர்.. அட்டெண்ட் பண்ணலாமா? வேணாமான்னு யோசிச்சுட்டே சதீஷ் அந்த போன் கால அட்டெண்ட் பண்ணாரு. எதிர்ல பேசுனது பிரபல புரொடியூசர் கல்பாத்தி அகோரம் . சதீஷ்கிட்ட அவர் சொன்ன முதல் வார்த்தையே “சார்.. உங்க படம் நல்லா வந்து இருக்குன்னு கேள்விபட்டன்.. படத்த எப்ப பாக்கலாம்?” இத கேட்டதும் சதீஷ்க்கு கையும் ஓடல.. காலும் ஓடல.. படபடப்புல சதீஷ் “சார்.. நீங்க எப்ப வேணாலும் பாக்கலாமுன்னு சொல்ல.

அடுத்த நாளே படம் பாக்கறதுக்கு ரெடி ஆனாங்க! 

அடுத்த அவங்க படம் பாக்க வர்றப்ப கோமல் வேண்டாத தெய்வம் இல்ல.. சென்னைல போகாத கோயில் இல்ல. வடபழனி முருகன் கோயில்ல ஆரம்பிச்சு எதோ ஒரு முட்டு சந்துல இருந்த முண்டக்கன்னி அம்மன் கோயில் வரைக்கும் கோமல் விசிட் அடிச்சான். கேப்ல ஒரு சர்ச்சுக்குள்ள போய் யேசு நாதர்கிட்டயும். மசூதி வாசல்ல நின்னு அல்லாகிட்டயும் எக்ஸ்ட்ராவா வேண்டிக்கிட்டான். 

ப்ரீவ்யூ ஷோ நுங்கம்பாக்கத்துல இருக்கற 4 ப்ரேம்ஸ் தியேட்டர்ல பாக்கறதா ப்ளான் பண்ணி இருந்தாங்க. பொதுவா ஒரு படத்த வாங்க நினைக்கற வினியோகிஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு படம் ரிலீஸ்க்கு முன்னாடியே படத்த ஒரு ஸ்பெஷல் ஸ்கீரினிங்ல போட்டு காட்டறதுதான் ப்ரீவ்யூ ஷோன்னு சொல்லுவாங்க. கோமல் படத்த 4 ப்ரேம்ஸ்ல மதியம் 3 மணிக்கு பாக்கறாதா சொல்லி இருந்தாங்க. கோமல் காலைல 11 மணிக்கே அங்க வந்துட்டான். வந்ததும் முதல் வேலையா தியேட்டர் சவுண்ட்ல இருந்து புரொஜக்‌ஷன் வரைக்கும் எல்லாத்தையும் செக் பண்ணான். படம் பாக்கும் போது ஆடியோ, வீடியோ ரெண்டுமே துல்லியமா இருக்கணும் அப்பதான் பாக்கறவங்க என்ஜாய் பண்ண முடியும். 

கரெக்டா மதியம் 2.55 மணிக்கு படத்த பாக்க அந்த புரொடியூசரும், அவர்கூட அவரது கம்பெனி ஆட்கள் சில பேரும் வந்தாங்க. சரியா 3 மணிக்கு படம் ஓட ஆரம்பிச்சது. அந்த செகண்ட்ல இருந்து கோமலோட  நல்ல நேரமும் ஸ்டார்ட் ஆச்சு. படம் பாத்து முடிச்சுட்டு வெளில வந்தததும் கல்பாத்தி. அகோரம் சார் படத்த வாங்கி ரிலீஸ் பண்றதா சொன்னாரு. படம் அவருக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு. உடனே ஒரு பெரிய அமௌண்ட அட்வான்ஸா குடுத்து அக்ரிமெண்ட் போட்டாரு. கோமலுக்கு இதெல்லாம் கனவா, நனவான்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. அடிக்கடி கை, கால் எல்லாம் கிள்ளி பாத்து கன்பார்ம் பண்ணிக்கிட்டான். 

படத்த உடனே ரிலீஸ் பண்றதா சொன்ன அகோரம் சார் உடனே அதுக்கான வேலைல இறங்குனாரு. அடுத்த ரெண்டு வாரத்துல படம் ரிலீஸ்க்கு டேட் குறிச்சாங்க. சரியா 10 நாளைக்கு முன்னாடி புரமோஷன் வேலைகள ஸ்டார்ட் பண்ணும் போது ஒரு கெட்ட செய்தி வந்து கோமல் காதுல பெரிய கொடுக்கு இருக்கற குழவி மாதிரி கொட்டுச்சு.  ரெண்டு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றதா இருந்த ரஜினி சார் படம் திடீர்ன்னு ரிலீஸ்க்கு ரெடி ஆகி அனென்வுன்ஸ்மெண்ட் வந்துச்சு. அவரு படத்தோட இந்த படத்த ரிலீஸ் பண்றதா வேணாமான்னு எல்லாருக்கும் ஒரே குழப்பம். 

ரஜினி சார் படம் ஒரு சுனாமி மாதிரி.. அந்த படத்தோட ஓப்பனிங் முன்னாடி கோமல் படம் எல்லாம் அடி பைப்ல வர்ற தண்ணி மாதிரி ரொம்ப சப்பையா இருக்கும். அதனால அவரு கூட போட்டி போட வேணான்னு ரெண்டு வாரம் ரிலீஸ தள்ளி வெச்சாங்க. கோமல் அந்த ரெண்டு வாரமும் ஒரே பட படப்பா இருந்தான். ஹை பிரஷர், லோ பிரஷர், ப்ளட் பிரஷர்ன்னு எல்லா பிரஷரும் அவனுக்கு அப்ப வந்துச்சு. கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு கோமல் இரண்டு வாரங்கள் காத்திருந்தான். 

சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் கழிச்சு கோமல் படம் ரிலீஸ் ஆச்சு. படம் ரிலீஸ் ஆன முதல் நாள் எல்லா தியேட்டர்லயும் 10 பேர் கூட இல்ல. படத்த பாத்த பத்திரிக்கையாளர்களும், பொது ஜனமும் பேஸ்புக், ட்விட்டர்ன்னு எல்லா சோஷியல் மீடியாவுலயும் படத்த பத்தி பாராட்டி தள்ள அடுத்த நாள் தியேட்டர் 40% புல் ஆக ஆரம்பிச்சது. பொதுவா வதந்தி பரவற வேகத்த விட ஒரு நல்ல படத்த பத்தின டாக் வேகமா பரவிடும். கோமல் படத்த பத்தி அப்படி பரவுன பாஸிட்டிவ் விமர்சனங்கள் அதுக்கு அடுத்த நாள் 80% கூட்டத்த தியேட்டருக்கு கூட்டிட்டு வந்துச்சு. வழக்கமா எல்லா படத்தையும் கழுவி ஊத்தற ப்ளூ சட்டை அண்ணாச்சி கூட படத்த பத்தி பாஸிட்டிவா ரிவ்யூ குடுத்து இருந்தாரு. 

முதல் நாள் முதல் ஷோ படத்த பார்த்த பவித்ரா கோமலுக்கு போன் பண்ணி பாராட்டி தள்ள.. அதுக்கு அடுத்த ஷோ திருட்டுத்தனமா படம் பார்த்த பவித்ராவோட அப்பா, படம் முடிஞ்சு வெளில வரும் போது மானசீகமா கோமல தன் மருமகனா ஏத்துக்கிட்டாரு.  உண்மைய சொல்லுனுன்னா படத்துக்கு கோமலே எதிர்பார்க்காத அளவுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைச்சுது, தியேட்டர்ல எல்லாம் ஹவுஸ்புல் போர்டு வெக்கற அளவுக்கு படம் மாஸ் ஹிட் ஆச்சு. படம் ஹிட்டுன்னு இண்டஸ்ட்ரி புல்லா பேச ஆரம்பிச்சாங்க. அந்த செகண்ட்ல இருந்து கோமலுக்கு நிறைய புரொடியூசர்கிட்ட இருந்து போன் கால் வர ஆரம்பிச்சது. 

கொட்டற கலெக்‌ஷன பாத்துட்டு சதீஷ் அடுத்த படத்தையும் கோமல்தான் பண்ணனுன்னு ஒரு பெரிய தொகைய அட்வான்ஸா குடுத்து, கூட ஒரு ஆடி காரையும் பரிசா குடுத்தாரு. கோமல் கோனேரிப்பட்டிக்கு ஆடி கார்ல போய் இறங்க, விளக்கு மாற எடுத்துட்டு துரத்துன அப்பாவும், அம்மாவும் ஆரத்தி எடுத்து அவன வரவேற்றாங்க. கோமல் புகழ் கோனேரிபட்டியோட சந்து பொந்து, ஏரிக்கரை எல்லாம் ஓங்கி ஒலிச்சுது. 

அடுத்த நாள் கோமல் தன் அப்பா, அம்மாவோட பவித்ரா வீட்டுக்கு கெத்தா போய் பொண்ணு கேட்டான். பவித்ராவோட அப்பா அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்த வெச்சுக்கலான்னு பிக்ஸ் பண்ணாரு. 

கட் பண்ணா கோமல் கல்யாணம் இனிதே நடந்து முடிஞ்சுது. அவனோட அடுத்த படமும் அட்டகாசமா ஸ்டார்ட் ஆச்சு. கோனேரிப்பட்டில இருந்து கோமல் எந்த கனவ நோக்கி சென்னை வந்தானோ அது அவன் கண்ணு முன்னாடி நிஜம் ஆகி இருந்துச்சு. கோமல் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவனா மாறினான். அதுக்கப்புறம் என்ன நன்றி, வணக்கம், சுபம்தான்!!! 

(கோமலின் கலைப்பயணம் இனிதே நிறைந்தது!)

- சந்துரு

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles