காதலர் தின கவிதைகள்

Wednesday, March 1, 2017

காதலைப் பற்றிய இன்றைய இளசுகளின் எண்ணம் என்னவாக இருக்கிறது. அவர்களது காதல் பல்ஸ் எக்குத்தப்பாக இருக்கிறதா என்பதை அறிய, பிப்ரவரி 14ஐ முன்னிட்டு ஒரு கவிதைப்போட்டியை அறிவித்தது மனம் இதழ். அதற்குத் தகுந்தவாறு, லவ்வாலஜி தொடர்பான ரிப்ளைகளும் குவிந்தன. நெஞ்சை நெகிழவைக்கும் கவிதைகளுக்கு ரெட் கார்டு என்பதால், சிலரது ரசனைகளை அங்கீகரிக்க முடியவில்லை. ஆனாலும், அவை நன்று என்பதைச் சொல்லியாக வேண்டும்.

நம்மை வந்தடைந்த கவிதைகளில் இருந்து, ஆசிரியர் குழு கடினமாக யோசித்து, சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அந்த வகையில், இந்த இதழில் இடம்பெறுகிறது பன்னீர்செல்வம் என்பவரது காதல் கவிதைகள்.. 

i.
கத்தரிக்காவுக்கு
காதல் மொளச்சா!
காம்பை கிரீடமா
நெனச்சுக்கும்!!

ii.
அழகில் மயங்குவது 
காதலாகாது..! 
காதலில் மயங்குவதே 
அழகாகும்..!!

iii.
காதலர் தினத்துக்காக 
காதலனை... 
காதலியை... 
தேடாதீர்கள்! 
அப்படித் தேடினால் 
காதல் 
உங்களைத்தேடாது!!

iv.
காதலர் தினத்தன்று 
இதயத்தை இயல்பாய் வைத்திருந்தால்.. 
இரத்தமும் சித்தமும் 
சுத்தமாக இருக்கும்..!!

v.
காதலர் தினத்தன்று 
கடைத்தெருவில் 
பரிசுப்பொருளொன்று வாங்கினேன்
பெற்றோர்களுக்காக..!

- பன்னீர் செல்வம் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles