விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல; 'கனவு வாரியம்' ஜனரஞ்சகப் படம்!  இயக்குனர் அருண் சிதம்பரம்

Friday, February 3, 2017

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கனவு வாரியம்'. திரைக்கு வரும் முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது.

உலகப் புகழ்ப் பெற்ற 'ரெமி' விருதுகள் இரண்டு வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்' என்ற புகழையும் அடைந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அருண் சிதம்பரம், இரண்டு ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்திய இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் அருண் சிதம்பரம் பேசும்போது, 

"93 வருட பாரம்பரியம் உள்ள உலகின் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்  'கனவு வாரியம்'  திரைப்படத்தை வெளியிடுவதை எண்ணி ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறோம்.  'கனவு வாரியம்' விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம். பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 

இத்திரைப்படம் காதல், காமெடி, சென்ட்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.  வார்னர் பிரதர்ஸ் படத்தை வெளியிடுவதால்  'கனவு வாரியம்' வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.  அதுவும், வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இது படக்குழுவினருக்கும், என் போன்ற வளரும் இளம் இயக்குனர்களுக்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தருவதாகும்" என்றார்.

'கனவு வாரியம்' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார் அருண் சிதம்பரம். அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ஜியா நடித்துள்ளார். மேலும், இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது குறிப்பிடத்தக்கது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles