‘கனவு கன்னி’ சன்னி லியோனை இயக்குகிறார் வி.சி.வடிவுடையான்!

Sunday, December 3, 2017

70 நிமிட கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குகிறது பிரபல நிறுவனம்! 

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தூக்கத்தை கெடுக்கும் கனவு கன்னி, நடிகை சன்னி லியோன். இணையத்தில் அதிகமாக தேடப்படும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

தொடர்ச்சியாக பல இந்தி படங்களில் நடித்து வந்த அவர், முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இப்படத்தில் நாசர், நவதீப் ஆகியோருடன் பிரபல நடிகர் ஒருவரும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை, பிரபல கமெர்ஷியல் பட இயக்குநரான வி.சி வடிவுடையான்  இயக்குகிறார். 
‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் தன்னுடைய முதல் படமாக இதை தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் படுவதோடு, தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தியும் உருவாகவுள்ளது.  

படத்தில் நடிப்பது பற்றி சன்னி லியோன் பேசும்போது, 

"இந்தப் படத்துக்கு பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி. வடிவுடையான் இந்த கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்காக தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவில் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்" என்றார்.
 
இந்த சரித்திர படத்தில் நடிக்க கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளர் மும்பைக்கு போய் சன்னி லியோனுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்தப் பிரமாண்ட படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். படத்தில் 70 நிமிட காட்சிகளில் கிராபிக்ஸ் தேவைப்படுகிறது. அதற்காக, மிகப் பெரிய கிராபிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது படத் தயாரிப்பு நிறுவனம். “தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் தலைப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும்!” என்கிறது படக்குழு.

படத்தின் படப்பிடிப்பு 2018 பிப்ரவரியில் துவங்க உள்ளது. தற்போது ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles