கல்லூரி மாணவர்களே !

Wednesday, August 16, 2017

தற்போது கல்லூரி அல்லது பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களா நீங்கள்? சோஷியல் மீடியாக்களில் உங்களின் கருத்துக்களுக்கு வரவேற்பு உள்ளதா? புகைப்படங்களை நீங்கள் பதிவிட்டால் அனைவரையும் பற்றிக் கொள்கிறதா, மீம்ஸ்களாகவும், ஃபன்னி வீடியோக்களும், கற்பனை ஆற்றல்களும் சிறகடித்து பறக்கிறதா உங்களுக்குள்? அப்படியானால், உங்களை இந்த உலகமே கொண்டாட அற்புதமான வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது. 

மாணவர்களே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது சின்ன சின்ன வீடியோக்களாகவோ, அடடே என புருவம் உயர்த்த வைக்கும் மீம்ஸ்களாகவோ, ‘வாவ்’ என கொண்டாட வைக்கும் கட்டுரையாகவோ,  உலகையே உலுக்கும் ஒரேயொரு புகைப்படமாக கூட இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் அரசியல் சார்பற்று இருக்க வேண்டும். இதை மட்டும் கவனத்தில் கொள்க. மற்றபடி, உங்களின் கற்பனைக்கு கட்டுப்பாடு இல்லை!

உங்களின் படைப்புகள் ஆசிரியர் குழுவால் ஏற்கப்பட்டால், அவை ‘மனம்’ இணைய இதழ், இணைய பக்கம், யு&ட்யூப் சேனல், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகும். உங்களது சொந்தக் கற்பனையில் உருவான படைப்புகளை மட்டுமே, நீங்கள் அனுப்ப வேண்டும். 

படைப்புகளை அனுப்பும்போது உடன் “இது வேறு எவரிடம் இருந்து பெறப்படவில்லை, என் சொந்தக் கற்பனையே, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நானே பொறுப்பு” என்ற கடிதத்தையும் மின்னஞ்சலில் இணைக்க வேண்டும். உங்களின் படைப்புகளை திருத்தம் செய்யவோ, நிராகரிக்கவோ ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமை உண்டு. மேலும், படைப்புகளுக்கு சன்மானம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட விதிகளுக்குள் நீங்கள் பொருந்திவந்தால், இன்னும் ஏன் யோசனை

உடனே உங்கள் படைப்பாற்றலை திறந்து விடுங்கள்!. உங்களை கொண்டாட இணைய உலகமே காத்திருக்கிறது. 

*conditions apply

வாருங்கள்... வரவேற்கிறோம்!

மனம் ஆசிரியர் குழு

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: ads@ajaxmediatech.com

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles