நானும் கீர்த்தியும் நல்ல பிரண்ட்ஸ் - சமாளிக்கும்’ சதீஷ்

Saturday, October 15, 2016

"நானும் சிவகார்த்திகேயனும் ப்ரண்ட்ஸா எப்படி வெளியில சுத்திக்கிட்டு இருப்போமோ, அப்படியேதான் ரெமோவுல நடிச்சிருக்கோம்.  உண்மையைச் சொல்லணும்னா, நர்ஸ் கெட்டப் போட்டுக்கிட்டு சிவா வந்தப்போ நிறைய பேரு அவரு பின்னாடி சுத்திகிட்டு இருந்தாங்க. இன்னும் சொல்லப்போனா, நானும்தான் (சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்)

 

ஷூட்டிங்கின் போது மொட்டை ராஜேந்திரன் சாரை வச்சு நிறைய காமெடி பண்ணினோம். படத்துலதான் அவர் டெரர் வில்லன். நிஜத்துல அப்பாவி மனுஷன். எதைச் சொன்னாலும் அவரு நம்பிடுவாரு. ராஜேந்திரன் சாருக்கு நிறைய காபி குடிக்கிற பழக்கம் உண்டு. ஒருநாள் அவரிடம் போய், "அண்ணே, அடிக்கடி காபி குடிக்காதீங்க. தலையிருக்கிற முடியெல்லாம் கொட்டிடும்"னு சீரியஸா சொன்னேன். உடனே அவர் கையில் வைத்திருந்த காபி கப்பை கீழே வச்சிட்டு, "ஸாரிப்பா..." என்றார். பிறகுதான், அவர் சுதாரித்துக்கொண்டு "ஏம்ப்பா... இனிமே இதுல கொட்டுறதுக்கு (தலையைக் காட்டி) என்ன இருக்கு?" என்றார். அவரு தலையில விக் வச்சிருந்தப்பவும் இதே கதைதான். இப்படி அவரையும் ஓட்டிக்கிட்டு, கலகலப்பாக ஷூட்டிங் போச்சு’ என்றவரிடம், ‘அந்த கீர்த்தி சுரேஷ் மேட்டரு’ என்று கிசுகிசுத்தோம். ”அதை யாரோ கிளப்பி விட்டுட்டாங்க. நானும் கீர்த்தியும் நல்ல ப்ரண்ட்ஸ். 'பைரவா' படத்துலயும், நாங்க சேர்ந்து நடிக்கிறோம். எங்க இரண்டு பேரையும் வச்சு வந்த கிசுகிசுவெல்லாம் செம காமெடி!" என்று சிரித்துச் சமாளித்தார் சதீஷ். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles