சிவாவுடன் நடிப்பது சவாலானது -நடிகை கீர்த்தி சுரேஷ்

Saturday, October 15, 2016

"விஜய் சாரோட படங்களைத் திரையில பார்த்திருக்கேன். ஆனா, அவரு கூட சேர்ந்து நடிப்பேன் எல்லாம் நினைச்சுக்கூட பார்த்தது கிடையாது. படப்பிடிப்புல, அவருடன் சேர்ந்து நடிக்கிறோம் என்கிற நினைப்பே இருக்காது. ஒரு ரசிகையா, அவரை வியந்து பார்த்துக்கிட்டே இருப்பேன். விஜய் சாருடன் 'பைரவா' படத்துல நடிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லும்போதும், கீர்த்தி சுரேஷின் கண்களில் வியப்பு பளிச்சிடுகிறது. 

கோலிவுட்டில் மடமடவென முதலிடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் அழகுப் புயலிடம் பேசியபோது...

 

சிவகார்த்திகேயனோடு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறீர்களே?

" 'ரெமோ'வில் நடிக்கறதுக்கான வாய்ப்பை பெற்றுத் தந்தவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சார்தான். 'ரஜினி முருகன்' படத்துல நடிக்கும்போதே தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சாரை தெரியும். என்னுடைய சினிமா கேரியர்ல 'ரெமோ' ஒரு பெரிய பயணமா இருக்கும்!"

 

சிவகார்த்திகேயனின் நர்ஸ் பாத்திரம் பற்றி..?

"முதல் நாள் செட்டுக்குப் போகும்போதே, எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அந்த நர்ஸ் கெட்டப்புல சிவா இருந்தாரு. அந்தப் பாத்திரத்துல சிவாவை பார்க்கும்போது, எனக்கே பொறாமையாக இருந்துச்சு. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்குப் போகும்போது, செட்ல யாராவது ஒருத்தராவது "படத்துல உங்களை விட அழகா தெரியறது நர்ஸ்தான்"னு சொல்வாங்க. ஒரு பொண்ணு கூட ஒப்பிட்டு பார்க்கிற அளவுக்கு அந்தப் பாத்திரம் இருக்குன்னா, நிச்சயம் அதுக்கு ஒரு சல்யூட் வச்சாகணும்! 

உண்மையைச் சொல்லணும்னா, நான் பொறாமையின் உச்சக்கட்டத்துக்கே போய்ட்டேன். நர்ஸ் கெட்டப்புல இருக்கும்போது, அவரை விட அதிகமாக நடிப்புல ஸ்கோர் வாங்கணும்னு நினைப்பேன். அதையேதான் நானும் செஞ்சேன்னு சிவாவும் சொன்னாரு. நிச்சயமா, 'ரெமோ'வில் எனக்கு சவால் விட்டது நர்ஸ் தான்!"

 

படப்பிடிப்பில் கலாட்டா ஏதும் நடந்துச்சா?

"சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து நடிக்கும்போது தினசரி என்டர்டெயின்மெண்ட்தான். இயல்பாகவே, செட்டுக்குள்ளே வந்துட்டா கலகலப்பா காமெடி பண்ணுவாரு. அதுவும் நர்ஸ் வேஷம்னா கேட்கவா வேணும். அவருடைய லூட்டி தாங்கமுடியாது. ஷூட்டிங்கின்போது அவர் பண்ற காமெடியால யூனிட்டே சிரிச்சிக்கிட்டு இருந்துச்சு."

 

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் குறித்து?

"பாக்யராஜ் கண்ணன் சார் எழுதற வசனங்கள் எல்லாம், ஈசியா ஆடியன்ஸோட கனெக்ட் ஆயிடும். ஒரு கதையில ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமோ, அதையே ஹீரோயினுக்கும் தருவாரு. அந்த மாதிரி இயக்குநர்கள் ஒரு நடிகைக்கு அமைஞ்சா, அவங்களோட எதிர்காலம் சிறப்பா இருக்கும். ரெமோ படத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு காட்சியை ஷூட் பண்றதுக்கு முன்னாடி மூணு பேருமே டிஸ்கஸ் பண்ணுவோம். நம்முடைய கருத்துக்களையும் சொல்றதுக்கு பாக்யராஜ் கண்ணன் அனுமதிப்பாரு. அது எனக்கு ரொம்ப சவுகரியமா இருந்துச்சு. அதனாலதான், இந்தப் படத்துல என்னுடைய பாத்திரம் கொஞ்சம் தூக்கலா தெரியும்!"

 

காஸ்ட்யூம் விஷயத்தில் கறாராக இருக்கிறீர்களே?

"பொதுவா சுடிதார், தாவணி அணியவே விரும்பறேன். ஆனா, அதுலயும் வெரைட்டி காட்டுவேன். என்னுடைய முதல் படத்துல இருந்தே, இதை நீங்க பார்க்கலாம்!"

 

நடிகர் சதீஷ் உடனான கிசுகிசு பற்றி?

"பைரவா படத்தோட பூஜையில இருந்த ஸ்டில்ஸை வச்சு, யாரோ சில பேர் காமெடி பண்ணிட்டாங்க. அந்த விஷயத்தை நான் சீரியஸா எடுத்துக்கலை." கீர்த்தி சுரேஷின் ரியாக்‌ஷன்ஸ் போலவே, அவரது பதில்களும் ஷார்ப்பாக இருக்கிறது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles