விஜயசாந்தி பாதையில் நயன்தாரா! 'அறம்' Exclusive!

Friday, November 18, 2016

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. இன்று அவரது பிறந்தநாள். அதனையொட்டி, பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் அவரது ரசிகர்கள் ’லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை அளித்து, தங்களது வாழ்த்துக்களைத் தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தமிழகமெங்குமுள்ள சாலையோரங்களில் ’அறம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இது எல்லோரது புருவத்தையும் உயர்த்தச் செய்திருக்கிறது!

 

நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, ’அறம்’ படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குகிறார் கோபி நயினார். ந.கோபி என்று சொன்னால், சினிமா வட்டாரத்தில் நன்கு தெரியும். யார் இவர் என்று கேட்பவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சொல்லவேண்டுமா? பிரபல இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் மெஹாஹிட்டான ’கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாரே, அவரேதான்! அந்த சர்ச்சைகளை மறந்துவிட்டு, ‘அறம்’ படத்திற்கு வருவோம்.

 

'அறம்' படத்தில் கலெக்டராக நடிக்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தில், விஜயசாந்தி ஸ்டைலில் சண்டைப் பயிற்சியில் தூள் கிளப்பியிருக்கிறாராம் நயன். ’அது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறும்’ என்கின்றனர் படக்குழுவினர். மேலும், முதன்முறையாக விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் சமூகப்பொறுப்புள்ள பாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா என்கின்றனர். ’அறம்’ வெளியானபின்பு, நயன்தாராவின் இமேஜ் பெருமளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ். கலை இயக்குனராகத் தன் பங்களிப்பை அளித்திருக்கிறார் லால்குடி என். இளையராஜா. படத்தொகுப்பு செய்திருக்கிறார் கோபிகிருஷ்ணா. இப்படத்தை கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிக்கிறார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles