சிக்ஸர் கோட்டை தாண்டி நான் அடிக்கும் பந்தை  பிடிக்க தயாராக இருங்கள்! பிரேம்ஜி அமரன் சொல்லும் சீக்ரெட்! 

Thursday, December 8, 2016

'பிளாக் டிக்கெட் கம்பெனி' சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து, இயக்கியுள்ள படம் 'சென்னை 28'. திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அதே அணியினர் தான், இந்த ஆட்டத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தன்னுடைய துள்ளலான இசையால் இசைப் பிரியர்களை தன் வசம் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா, 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸி'லும் வெற்றிக்கு கை கோர்த்துள்ளார்.

இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக, பிரேம்ஜி அமரனுடைய நடிப்பு, ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்கிறது படக்குழு. படத்தில் நடித்துள்ளது குறித்து பிரேம்ஜி கூறும்போது, 

"எங்கள் சென்னை 28 திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எங்கள் அணியினரின் உற்சாகமும், வேகமும் சிறிதளவு கூட குறையவில்லை. துடிப்பான அணியாக நாங்கள் செயல்படுவதற்கு அதுவே முக்கிய காரணம். எங்களின் இரண்டாம் பாகத்தை நாங்கள் கிராமத்து பின்னணியில் படமாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த உற்சாகத்தோடு வைத்துக் கொள்ளும் சுவாரசிய காட்சிகள் பல, எங்களின் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றது. இந்த இரண்டாம் ஆட்டத்தை காண வரும் ஒவ்வொரு இளம் ரசிகர்களும் சிக்ஸர் கோட்டை தாண்டி நான் அடிக்கும் பந்தை பிடிக்க தயாராக இருங்கள். அதுமட்டுமின்றி, நான் தோன்றும் காட்சிகள் அனைத்தும் இளம் பெண்களின் மனதை வெல்ல கூடியதாக இருக்கும்!" என்றார். நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ். செஞ்சுரி அடித்து வெற்றி வாகை சூட படக்குழுவை வாழ்த்துகிறது மனம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles