அடுத்த சூப்பர்ஸ்டார் அஜித்தான்..! - பரபரப்பைக் கிளப்பும் காஜல் அகர்வால்

Thursday, December 1, 2016

தமிழ் சினிமா ரசிகர்களின் பிளாக் அன்ட் ஒயிட் கனவுகளுக்குள் அனுமதியில்லாமல் புகுந்து, கலர்புல் ட்ரீமை உருவாக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். கண்ணாடிப்பேழையில் மூடிவைக்கப்பட்ட வைரம் போல, இவரது ஸ்கீரின் பிரசன்ஸ் ரசிகர்களின் கண்களில் ஜொலிஜொலிப்பை உருவாக்கும். ’மகதீரா’ மூலம் உச்சத்துக்குப் போன இவரது மார்கெட், இன்றுவரை அப்படியே இருக்கிறது. அதே நேரத்தில், ஹிந்திப்படவுலகை நோக்கி தனது எல்லையை விஸ்தரித்து வருகிறார் காஜல்.  

இவர் நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’, சமீபத்தில் திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

கவலை வேண்டாம் படம் குறித்து சொல்லுங்களேன்?

" 'கவலை வேண்டாம்' ஒரு ரொமாண்டிக் காமெடி படம். இதில் சுதந்திரமான, போல்டான பெண்ணா நடித்திருக்கிறேன். இதில் நடித்ததில், எனக்கு மகிழ்ச்சி. கவலை வேண்டாம் திரைப்படம், ஒரேநேரத்தில் உங்களை அழவும் சிரிக்கவும் வைக்கும். படத்தின் கதாபாத்திரங்கள் உங்களுடைய வாழ்க்கையைப்  பிரதிபலிப்பதாக இருக்கும். இந்தப் படத்தோட ஸ்பெஷாலிட்டி அதுதான்!"

 

ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் நடிக்கும் படத்தில் இணைந்து நடிப்பீர்களா?

"என்னுடைய பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறேன். உடன் நிறைய பேர் நடித்தாலும், எனக்குப் பிரச்சினையில்லை!"

 

படத்தின் நாயகன் ஜீவா பற்றி..?

"ஜாலியான, கலகலப்பான, பழகுவதற்கு இனிமையான நண்பர் ஜீவா. அவருடன் நடித்தது மறக்க முடியாதது!"

 

இயக்குநர் டீ.கே. படப்பிடிப்பில் எப்படி இருப்பார்?

"படத்தோட இயக்குநர் டீ.கே., தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொல்லியிருக்கார். அடிப்படையில் அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். டீ.கே. ஒரு கடினமான உழைப்பாளி. முதல் படத்திலேயே அவருடைய திறமை வெளிப்பட்டிருக்கு!"

 

மீண்டும் வரலாற்றுப் படங்களில் நடிப்பீர்களா?

"நல்ல கதையாக இருந்தால், வரலாற்றுப் படங்களில் மீண்டும் நடிப்பேன்!"

 

விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

"வெற்றியையும் தோல்வியையும் சமமாகவே கருதுகிறேன். வெற்றியைத் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. விமர்சனங்களை வரவேற்கிறேன்; தேவைப்பட்டால், என்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்வேன்!"

 

படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

"கதையையும் என்னுடைய கதாபாத்திரத்தையும் வைத்தே, அந்தப் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வேன்!"

 

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் என்ன செய்வீர்கள்?

"படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், என்னுடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்குவேன். எப்போதாவது சமைப்பேன், சில நேரங்களில் பாட்டு கேட்பேன், நல்ல கதைகளை வாசிப்பேன். எனக்கு பயணம் செய்து ரொம்பப் பிடிக்கும்!"

 

மாறாமல் இருக்கிறதே உங்களது பிட்னஸ்?

"உடற்பயிற்சி செய்வது எனக்குப் பிடித்தமானது. என்னுடைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி செய்வேன். எண்ணெயில் பொறித்தது மற்றும் ஐஸ்கிரீம் சார்ந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். போதுமான அளவுக்கு மட்டுமே உண்ணுங்கள்!"

 

விளம்பரம், சினிமா எதில் நடிப்பது?

"சினிமாவில் நடிப்பதுதான் என்னோட குறிக்கோள். ஆனால், சில சமயங்களில் விளம்பரப்படங்களில் நடிப்பதும் ஒரு நட்சத்திரத்துக்கு அவசியமானது!"

 

தல 57..!?

"அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிப்பது எனக்குப் பிடிச்சிருக்கு. அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்தான்!" காஜல் சொல்லிட்டாங்க.. ’தல’ பீவர் ஸ்டார்ட்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles