வார்ட்ரோப் பராமரிப்பு 

Friday, November 18, 2016

நாம் உடுத்தும் ஆடைகளே நம்மை அடுத்தவர்க்கு அடையாளம் காட்டும். நேர்த்தியாக நீங்கள் அணியும் உடைதான், மற்றவர்களுக்கு உங்கள் மீது அபிப்பிராயத்தை உருவாக்குகிறது. அழகான ஆடைகளை வாங்கி குவித்தால் மட்டும் போதாது; அதனை சிறப்பாகச் பராமரிப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.

நாம் அணியும் ஆடைகளில் கறை படிந்தாலோ அல்லது சாயம் போனாலோ பதட்டப்பட வேண்டியது இல்லை. அதற்கான எளிதான தீர்வு நம்மிடமே கொட்டிக்கிடக்கிறது. 

அதில் சில துளிகள்; 

  • நாம் உடுத்திய ஆடையில் ஏற்பட்ட வெற்றிலைக் கறையை நீக்க வேண்டுமா? புளித்த மோர் அல்லது எலுமிச்சை பழத்தோலை கறையின் மீது தடவினால் போதும்; கறை இருந்த இடம் தெரியாமல் மாயமாகும்.
  • ஆடைகளில் ஏற்பட்ட கிரீஸ் கறையைப் போக்க, அதன்மீது நீலகிரித் தைலத்தைத் தெளித்து, கழுவினால் போதும்.
  • துணிகளில் தலைச்சாயம் பட்டால், அந்த இடத்தில் நெயில் பாலிஷ் ரிமூவரை வைத்துத் துடைத்தால் போதும்; கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். 
  • பட்டுப்புடவைகளை மடிக்கும் பொழுது, ஜரிகையை உட்புறமாக வைத்து மடிக்க வேண்டும். இதனால், ஜரிகை வெகு சீக்கிரத்தில் கறுத்துப் போகாது.
  • கலர் துணிகளில் சாயம் போகாமல் இருக்க, சிறிது வாஷிங் சோடா போட்டு துவைக்கலாம்.

-பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles