ஸ்னாப் டீலின் ஸ்மார்ட் டீல் 

Friday, December 23, 2016

குறைவான கட்டணமே போதும்; இரண்டாயிரம் பணத்தை எளிதாக பெற்றுக்கொள்ளலாம் - ஸ்னாப் டீல் அதிரடி அறிவிப்பு .

ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் , மக்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. மக்களின் இந்த இக்கட்டான  நிலையை பல்வேறு சமூக ஊடகங்கள் செய்திகளாகவோ  அல்லது மீம்ஸ் மூலமாகவோ வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன. 

இச்சூழலில், இந்தியாவின், மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான ஸ்னாப் டீல், ஸ்மார்ட்டான ஒரு வேலையை மக்களுக்காகச் செய்திருக்கிறது. “வீடு தேடி வருகிறது ரூபாய் நோட்டுகள்”. இந்த  உதவியை ஏற்கனவே குருகிராம் மற்றும்  பெங்களூர் மாநிலத்துக்கு ஸ்னாப் டீல் செய்து கொண்டிருக்கிறது. தற்பொழுது தமிழகத்திலும் அமல் படுத்தப் பட உள்ளது.

ஸ்னாப் டீலின் CoD சேவையின் மூலம், மக்கள் இரண்டாயிரம் ருபாயை மறுநாளே பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சேவைக்காக அவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தை மட்டுமே மக்களிடம் வசூலிக்கின்றனர். இரண்டாயிரம் ருபாய் பணத்தை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்ததும், மறுநாள் ஸ்னாப் டீல் பிரதிநிதி உங்கள் இடத்துக்கு வந்து, அவரிடம் இருக்கும் POS மெஷினில் வேண்டிய தொகையை பதிவு செய்து, உங்களின் ஏ.டி.எம் கார்டை நீங்கள் தேய்த்தால் போதும். 

இச்சேவையை விரைவில் மற்ற மாநிலங்களிலும் விரிவாக்கப் பட உள்ளதாக ஸ்னாப் டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles