ரன்பீர் உடன் நடிக்க வேண்டும்..!  மாடல் பல்லக் ஜெயினின் ஆசை!!

Friday, December 16, 2016

'அரசன் சோப்' விளம்பரத்தில் பேசும் குட்டி தேவதையாக வந்தவர். சில நாட்களுக்கு முன்பு, ‘தெறி’ படத்தில் சமந்தாவின் அழகிய தங்கையாக வந்து நம்மை ஆச்சர்யப்படுத்தினார். மாடலிங், சினிமா என்று இருவேறு திசைகளிலும் பயணிக்கத் துடிக்கிறார் பல்லக் ஜெயின். இந்த தேவதை, தற்போது சென்னை எம்.ஓ.பி கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா படித்து வருகிறார்.

“நான்காம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்பொழுது, எங்க அம்மாவோட ப்ரெண்ட் என்னை சில விளம்பரப் படங்கள்ல நடிக்க கேட்டாங்க. ஆனால், எங்க வீட்ல அப்போ அதுக்கு ஒத்துக்கலை. அதுக்கப்புறம் எனக்கு கேமரா, செட், நடிப்பு மேல ஆசை வந்துச்சு. ஒரு  முயற்சிக்காக ஏர்செல் ஆடிஷனுக்கு போனேன். அதுல என்னை செலக்ட் செஞ்சாங்க. அதுக்கு அப்புறமா, தொடர்ச்சியா பதினைந்து விளம்பரப்படங்கள் நடிச்சிட்டேன்” என்றவரிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.

 

சர்வதேச அளவில் உங்களுக்குப் பிடித்த மாடல்?

‘விக்டோரியா சீக்ரெட் மாடல்ஸ்' எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட இன்ஸ்டாக்ராம்ல, அவங்கள பாலோ பண்ணிட்டு இருக்கேன். அவங்களோட பிட்னஸ், பாடி லாங்குவேஜ் போன்ற விஷயங்களை தெரிஞ்சுக்குவேன். சர்வதேச லெவல்ல எனக்கு ரோல் மாடல் யாரும் இல்ல. ஏன்னா, நம்ம இந்தியாவிலேயே எவ்வளவோ அழகானவங்க இருக்காங்க இல்லியா ?!

 

சினிமாவில் நடிக்க வந்தது எப்படி?

ஒரு கோ-ஆர்டினேட்டர் மூலமா, எனக்கு ‘தெறி’ படத்தோட ஆடிஷன்ல கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அங்க இயக்குனர் அட்லீயை சந்திச்சேன். ரொம்ப நல்ல மனிதர். என்னோட புகைப்படங்களை பார்த்தே, நான் இந்த ரோலுக்கு சரியான தேர்வுன்னு முடிவு செஞ்சுட்டாரு. ஆடிஷன்ல பார்த்ததும், நீங்க இந்தக் கேரக்டர்ல நடிங்கன்னு சொல்லிட்டாரு.

 

சமண சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள், மாடலிங்கில் நுழைந்தது எப்படி?

இதுக்கு முக்கியமான காரணம் என்னோட பெற்றோர்கள் தான். அவங்க தடை சொல்லவே இல்லை, என்னை ரொம்பவே என்கரேஜ் செஞ்சாங்க. எங்க சமுதாயத்தை சேர்ந்தவங்க கொஞ்சம் கன்சர்வேட்டிவ். ஆனால், நான் என்னோட பெற்றோர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறேன். அவங்களே க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்களே.

 

சமூகத்திற்கு நீங்க செய்ய நினைப்பது?

மூணு விஷயம் மனசுல நினைச்சிட்டு இருக்கேன்.

  1. என்னுடைய பெற்றோர்களுக்கு நல்ல பெயர் சம்பாதித்து கொடுக்கணும்.
  2. ஒரு அறக்கட்டளை தொடங்கி, ஏழ்மையை ஒழித்து எல்லோருக்கும் கல்வி கற்றுக் கொடுக்கணும்.
  3. ரன்பீர் கபூரோட ஒரு படத்துலயாவது நடிக்கணும்.

 

உங்களுடைய ஒரு நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்  ?

எந்தச் சூழல்லயும் கடவுளை வணங்குறது, எனக்கு இருக்குற நல்ல பழக்கம். பொறுப்பே இல்லாமல் நடந்துப்பேன், அதுதான் என்னோட ஒரு கெட்ட பழக்கம்.

 

ஸ்டைல் என்றால் என்ன? 

ஸ்டைல்னா ரஜினிகாந்த். அதாவது, ஸ்டைல் அப்படிங்கற விஷயம் ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருக்கும். இன்னொருத்தங்களை பார்த்து நாம செய்யக்கூடாது. அதை சரியா வெளிக் கொண்டுவரணும்.

 

திருமணம் பற்றிய உங்கள் ஐடியா..?

இது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். இவங்களோட நாம வாழ முடியாதுன்னு நினைச்சிட்டீங்கன்னா, அவரை எப்போதுமே திருமணம் செஞ்சுக்காதீங்க.

 

பிறந்த தேதி?

ஆகஸ்ட் 17

 

பிடித்த உணவு?

எல்லா வகையான உணவுகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும், சவுத் இந்தியன் மீல்ஸ், பாஸ்தா, வீட்ல செய்யுற பருப்புசாதம் எல்லாமே பிடிக்கும். எப்போ மூட் ஆப் ஆனாலும், நான் முதல்ல சாப்பிடுவேன். சாக்லேட் வகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

 

பிடித்த லொகேஷன்?

'காங்டாக்' , 'டார்ஜீலிங்'ல இருக்குறஅமைதி எனக்கு ரொம்பப் பிடிக்கும். 

 

பார்ட்டி..!?

நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பார்ட்டி செய்றதுன்னா, எனக்கு ரொம்ப பிடிக்கும். டான்ஸ், நிறைய பன் இருக்கும் அதுல.

 

லைக்ஸ்?

நான் எங்கே இருந்தாலும், பன், ஹ்யூமர் என்னைச் சுற்றி இருக்கணும். டப்மாஸ் செய்யப் பிடிக்கும்.

 

டிஸ்லைக்ஸ்?

வீட்டு வேலைகள் எதுவுமே செய்யப் பிடிக்காது. சில நேரங்கள்ல படிக்க பிடிக்காது.

 

ஹாபீஸ்?

டான்ஸ், காமிக்ஸ் படிப்பேன், நல்லா சாப்பிடுவேன்.

 

பிடித்த நிறம்?

கருப்பு, வெள்ளை, சிகப்பு

 

பிடித்த கடவுள்?

சாய்பாபா

 

அழகு என்பது..?

எளிமை. போலியாக இல்லாமல், நேர்மையாக இருப்பதும் அழகு.

 

உங்களை யாராவது உற்று பார்த்தால்..?

அவங்களோட நேரத்தை வீணாக்கிட்டு இருக்காங்கன்னு நினைப்பேன்.

 

எப்படி பிட்டா இருக்கீங்க?

இதுக்கு நான் என்னோட தந்தைக்குதான்  நன்றி சொல்லணும். பிட்னஸ் பற்றி அவருதான் எனக்கு நிறைய டிப்ஸ்களை கொடுப்பாரு. இன்னிக்கி நிறையா சாப்பிட்டேன்னா, அடுத்த நாள் வாயை கட்டிப்போட்டுடுவேன். ஜிம் போவேன். இதுதான் என்னோட ரகசியம்.

 

பிடித்த டி.வி.ஷோ ?

அதிகமா நான் டி.வி பார்க்குறது இல்லை. ஆனா, ரியாலிட்டி ஷோ ரொம்ப பிடிக்கும்.

 

உயரம்? 

5’3’’

 

எடை?

55 கிலோ

 

பயம்?

நாய்கள்

 

பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், பேட்மிட்டன்.

 

பல்லக் ஜெயின்..?

எல்லோராலும் விரும்பப்படும் ஒரு பெண். மீடியாவில் ஒரு நல்ல இடத்தை தொடணும்கிற குறிக்கோளுடன் செயல்படும் அழகான பெண்.

 

எதிர்காலத் திட்டம்?

"ராம்ப் ஷோ" செய்யணும்னு ஆசை.

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles