கண்ணீர் காய்வதற்குள் அடுத்த துக்கம்!

Wednesday, December 7, 2016

சினிமா, பத்திரிகை, அரசியல் என பன்முகம் கொண்ட ஆளுமை சோ. ராமசாமி. 1952-ல் இருந்து அவரது படைப்புத்திறன் வெளிப்படத் தொடங்கியது.  முதலில் நாடகங்கள் எழுதத் தொடங்கி, அதில் நடிக்க ஆரம்பித்தார். பீம்சிங் இயக்கிய 'பார் மகளே பார்' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து, இருநூறு தமிழ்ப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

14 திரைப்படங்கள், 4 தொலைக்காட்சி தொடர்கள், 23 நாடகங்கள், 8 நாவல்கள் எழுதியுள்ள சோ, நான்கு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது பலர் அறியாதது. கடந்த 1970 ஆம் ஆண்டு "துக்ளக்" இதழைத் தொடங்கினார் சோ. இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக ''ஹால்டி காட்டி'', ''வீரகேசரி'', ''கோயங்கோ'', ''நச்சிகேதஸ்'' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

பத்திரிகை உலகில் அவர் ஒரு முடிசூடா மன்னர். அனைத்துக் கட்சியினரும் மதிக்கும் பத்திரிகையாளராக வலம் வந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர் உயிரிழந்தார். 

தமிழக மக்களின் கண்களில் கண்ணீர் காய்வதற்குள், அவர்களது மனதை வாட்டியிருக்கிறது அடுத்த துக்கம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles