இன்குலாப் என்றால் புரட்சி! கவிஞர் வைரமுத்து அஞ்சலி..

Friday, December 2, 2016

கடந்த டிசம்பர் 1ம் தேதியன்று கவிஞர் இன்குலாப் இயற்கை எய்தினார். புரட்சிக்கவிஞராக அறியப்பட்ட அவரது கவிதைகள், தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்பவை. அவரது நினைவைப் போற்றும்விதமாக, 'இன்குலாப் என்றால் புரட்சி' என்ற பெயரில் கடிதம் எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. அதில், தான் பெரிதும் நேசித்த கவிஞனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
 

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் கடிதம் இதோ :

இன்குலாப் என்ற கவிஞனின் பெளதிக உடல் மறைந்துவிட்டது. தான் நம்பிய தத்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளாத கவிஞன், வாழ்வோடு சமரசம் செய்துகொள்ளாமல் சாவைத் தழுவியிருக்கிறான். எந்த மழைக்காலமும் அந்தப் புரட்சித் தீயை அணைத்துவிட முடியாது.

விருதுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத கவிஞன், என் பிறந்தநாளில் வழங்கப்பட்ட கவிஞர்கள் திருநாள் விருதை மட்டும் பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்தினார். அவர் கவிதைகள் மரணத்தின் விரல்களால் தொடமுடியாதவை. இன்குலாப் மரணத்தை வென்ற கவிஞன். மழையோடு சேர்ந்து அழுகின்றன என்னிரண்டு கண்ணீர்த் துளிகளும்..

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles