கவிதைகள் சொல்லவா! - கவிஞர் உமா ஷக்தி

Saturday, October 15, 2016

தமிழ் கவிதைகளில் பெண்களின் உலகத்தைப் படைப்பவர்கள் வெகு சிலர்தான். அவர்களில் முக்கியமானவர் கவிஞர் உமா ஷக்தி. வேட்கையின் நிறம், பனிப்பாலைப் பெண், திரைவழிப் பயணம், ஆட்டுக்குட்டி நனைத்த மழை, பூர்ணா உள்ளிட்ட படைப்புகளின் மூலம் நவீன இலக்கிய உலகில் அடையாளம் காணப்படுபவர் கவிஞர் உமா ஷக்தி. பத்திரிகைத்துறையில் தனிக்கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது திரைப்படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். பெயரிடப்படாத படம் ஒன்றின் மூலம், விரைவில் பாடலாசிரியராகவும் அறிமுகமாக உள்ளார். 

மிகை அன்பு

(கே)யுடனான
வாழ்க்கையை
கைவிடப் போகிறேன்!
முறியும் தருவாயில்
ஒவ்வொரு முறையும்
மண்டியிடத் தவறுவதில்லை அவன்!
மீள் வருகையில் கேள்விகளால்
என் இருப்பை பதட்டமாகி
இதயம் சுருங்கச் செய்வான்!
எங்களுக்கிடையில் வசை ஒன்றுகூட
மிச்சமிருக்காது போன நொடியில்தான்
விவாகரத்து வழக்கும் முடிவுக்கு வந்தது!
என் கொண்டாட்டங்களைப் பார்த்து
காறி உமிழ்ந்த கே,
கண்ணாடிப் பேழையில் சாபங்களைப்
பதித்து கடைசியாய் பரிசளித்தான்
சிறிய அழுகைக்குப் பின்
எந்நேரத்திலும் எவ்வித உதவி தேவைப்பட்டாலும்
தயங்காமல் அழைக்குமாறு சொல்கிறான்
நீண்ட நாள் அலுத்துப் போன
அன்புதான் கேவுடனான
காதலைக் கொன்றுவிட்டது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles