தமிழகத்தில் நாட்டுப் பால் மிகக் குறைவே! -  சாந்தி (தொழில் முனைவோர்)

Monday, May 15, 2017

சமீபகாலமாக பொதுமக்களிடம் பாரம்பர்ய உணவுகளை நாடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் பல இயற்கை அங்காடிகள் கிளை பரப்பி உள்ளன. சென்னையில் எங்கு திரும்பினாலும் ஆர்கானிக் ஷாப்களே கண்ணில் தட்டுப்படுகின்றன. பலர் இதை குடிசைத் தொழிலாகவே செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஐ.டி. ஊழியர்கள் பலர் இப்போது இதில் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர். சிலர் இயற்கை விவசாயத்திலும் நாட்டம் காட்டுகின்றனர். அப்படியாக ஒருவரைத் தேடிப் பிடித்தோம். 

"ஆர்கானிக் பற்றி ஆய்வுகள் செய்து, பல ஆவணப் படங்களை எடுத்திருக்கேன். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில, நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை சொல்ல விரும்புறேன். தமிழகத்துல, நாட்டுப் பால் ரொம்ப குறைந்த அளவுலதான் இருக்கு. ஜெர்சி கலப்பின மாடுகளோட விகிதம் மிகுதியாக இருக்கு. இப்போ நாம் அன்றாடம் பருகும் பால், பதப்படுத்தப் பட்டதுதான். மாட்டிலிருந்து கறந்து, நம்மை அடைய குறைந்த பட்சம், இரண்டு நாட்களாவது ஆகிறது. 

எங்க கடையில கிடைக்கிறதும் ஜெர்சி மாட்டுப்பால் தான். ஆனால்  அதை நேரடியாக மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து வாங்குகிறோம். அதாவது, ஒரே மாடு வைத்து வளர்க்கும் விவசாயி, அந்த மாட்டிலிருந்து கிடைக்கும் பாலை, தன் வீட்டிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மிச்சத்தை கூட்டுறவில் சென்று சேர்ப்பார்கள். அந்தப் பாலை பெற்று,  விற்கிறோம். அதுவும், தேவையின் அடிப்படையில் மட்டுமே!" என்றவரைத் தொடர்ந்து, ஆர்கானிக் பொருட்கள் குறித்து அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் சிவகுமாரின் புதல்வர் கார்த்தியிடம் பேசினோம். "நம்ம ஊர் சாப்பாடு என்பது சிறு தானியங்கள் தான். அரிசி நம்ம நாட்டு உணவே கிடையாது. இயற்கையாக உற்பத்தி செய்கிற விளைபொருட்களை கொள்முதல் செய்து பலரும் கடைகளில் விற்பனை செய்யுறாங்க. இந்த மாதிரி, ஆர்கானிக் கடைகள் சென்னையில் அதிகமாயிடுச்சு. அப்படியான ஒன்று இப்போது சென்னை வளசரவாக்கத்திலும் வந்திருப்பதில் சந்தோஷம்!” என்றார். பெண்கள் தனியாக சுயதொழில் தொடங்கி, வாழ்க்கையில் முன்னேற நினைப்பது வரவேற்கத்தக்கதே. வாழ்த்திவிட்டு வெளியேறினோம்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles