தமிழ் நல்லா பேசுவேன்!  - நடிகை மனிஷா ஸ்ரீ 

Friday, July 14, 2017

இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் வேகமாகவும் விவேகமாகவும் இருக்கின்றனர். உலகமயத்தால் விளைந்த தொழில்நுட்ப வசதிகளால் அவர்களது உலகம் வழக்கத்தை விட வேகமாக சுழல்கிறது. ஒரு துறை ஒரு வேலை என்றில்லாமல், பலதுறைகளில் கால்பதித்து, வெற்றிவாகையும் சூடுகின்றனர். அப்படியாக துள்ளலான இளமையுடன் பேஷன், ஆல்பம், நடிப்பு, தயாரிப்பு என பன்முகமாக செயல்படுகிறார் நடிகை மனிஷா ஸ்ரீ. ‘புதுமுகம் அறிமுகம்’ பகுதிக்காக அவரிடம் பேசினோம். 

“என்னுடைய தாய் மொழி வடமொழியாக இருந்தாலும், தமிழ் மொழி மீது எனக்கு ஆர்வம் அதிகம். தமிழ் மொழியில, சரளமாக பேசணும், எழுதணும்னு ரொம்பவே ஆசை. எனக்கு தென்னிந்தியாவுலதான் நண்பர்கள் அதிகம். அவர்களோட பழகும்போது இயல்பா எனக்குள்ளேயும் தமிழ் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. இப்போ, நான் தங்கு தடையில்லாமல் தமிழ்ல ரொம்ப நல்லா பேசுறேன். இன்னும் சொல்லப்போனால், ‘நான் நார்த் இந்தியன் கேர்ள்னு சொல்றதை விட, சென்னை பொண்ணு’ன்னு குறிப்பிடுவதைத்தான் விரும்பறேன். 

இதுவரைக்கும் மூன்று தமிழ் படங்களில் நடிச்சிருக்கேன். எந்தப் படத்திலேயும், என்னோட சொந்த குரல்ல பேசல. எனக்கு பின்னணி பேசிய குரலும் பொருத்தமாகவே இல்ல. என்னோட நண்பர்கள், “ நீங்களே டப்பிங் பேசி இருக்கலாமே. நல்லா இருந்திருக்குமே!” ன்னு அட்வைஸ் பண்ணினாங்க. அதை இயக்குநர்களிடம் சொன்னேன். ஆனா, வாய்ப்புதான் சரியாக அமைய மாட்டேங்குது!.

நான் இப்போ ஒரு ஹிந்தி ஆல்பம் தயாரிச்சிருக்கேன். அதுல நானே நடித்து, பாடியிருக்கேன். விரைவில் தமிழிலேயும் ஆல்பம் தயாரிப்பேன். இது மூலமா தமிழ் நல்லா பேசவேன்னு எல்லோருக்கும் தெரியவரும்னு நினைக்கிறேன். திரைப்பட தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் கேட்பது இதைத்தான். நான் நடிக்கும் படங்கள்ல எனக்கு பின்னணி பேச வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்!” வேண்டுகோளோடு முடிக்கிறார். உண்மைதான், தமிழில் பேசி, வெளுத்து வாங்குகிறார் மனிஷா ஸ்ரீ. அவருக்கு வாய்ப்பளிக்க இங்கே யாரேனும் இருக்கிறீர்களா?!  

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles