நானும் நிதினும் ஒரே பேமிலி! நடிகை கிருத்திகா

Monday, October 31, 2016

"சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸில் நிதின் சத்யாவுக்கு மனைவியா நடிச்சிருக்கேன். இப்போ நீங்க பார்க்கிற புன்னகை, சிரிப்பு எல்லாம் படத்துல இருக்காது. அப்படியே எதிர்மாறாக புருஷனை கடிந்துகொள்கிற மனைவியா வர்றேன். ரொம்ப எமோஷனலான பொண்டாட்டின்னா பார்த்துக்குங்க!" என்று கலகலப்பாகப் பேசுகிறார் நடிகை கிருத்திகா.

சீரியலில் இருந்து சினிமாவுக்குள் பாய்ந்திருக்கும் இன்னொரு புதுமுகம். வெங்கட்பிரபுவின் இயக்கத்தின் நடிக்கத் தேர்வானது முதல் அந்த மகிழ்ச்சி நிரம்பியிருக்கும் தற்போதைய கணங்கள் வரை, எல்லாவற்றைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

 

இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? 

"செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியபோது ஆடிஷனுக்குப் போயிருந்தேன். அன்றையிலிருந்து படப்பிடிப்பு முடியுற வரைக்கும், தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக்கிட்டே இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு சாருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுறேன். இப்பதான் பெரிய டீமில் சேர்ந்திருக்கிறேன். இந்தப் படம் வெளியானதுக்குப் பிறகு, என்னுடைய சினிமா கேரியர் டாப் கியரில் வேகமெடுக்கும் என நம்புறேன்!" 

 

இயக்குநர் வி.பி. டீமை எப்படி சமாளித்தீர்கள்?

" 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' நாயகிகளில் நான்தான் புதுசு. மற்ற பொண்ணுங்க எல்லாம், ஏற்கனவே இந்த டீமுக்கு அறிமுகமானவங்க. அதனால, படப்பிடிப்புல கலந்துக்கிறதுக்கு முன்னாடி எல்லா நடிகைகளுக்கும் இருக்கிற அடிப்படையான கேள்விகள் எனக்கும் இருந்துச்சு. ஆனால், முதல் நாள் ஷூட்டிங்லயே எல்லாமே மாறியாச்சு. ஏற்கனவே பல வருஷமா பழகின மாதிரி, எல்லோரும் ரொம்ப பிரெண்ட்லியா பேசினாங்க. எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் நடந்துக்கிட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது!"

 

படத்தில் நிதின்சத்யாவை கொடுமைப்படுத்துறீங்களாமே? 

"இந்தப் படத்துல, என்னோட புருஷனை நிறைய கொடுமைப்படுத்தியிருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனா, அதையெல்லாம் ஈஸியாக எடுத்துக்கிட்டு, வாழ்க்கையில ஜெயிச்சிருக்காரு நிதின். எனக்கு ஒரு நல்ல கணவரா நடிச்சாரு. ஸோ, நானும் நிதினும் ஒரே பேமிலி. ஆக, ஒரு மிடில் கிளாஸ் குடும்பம்னா இப்படித்தான் இருக்கும் என்பதற்கு உதாரணமா நாங்க வாழ்ந்திருக்கோம்!"

 

மறக்க முடியாத சம்பவம்?

"உண்மையில், இதை இங்கே நான் சொல்லியே ஆகணும். படப்பிடிப்புக்காக, சென்னையிலிருந்து பக்கத்துல இருக்கிற ஒரு இடத்துக்கு டீமோட போனோம். அப்போ நடந்த ஒரு மூவ்மெண்ட்டை, எல்லோருமே என்ஜாய் பண்ணினோம். பொதுவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போகும்போது, நண்பர்கள் எல்லாம் பாட்டுப் பாடி ஒருத்தரையொருத்தர் கலாய்க்கிறது வழக்கம். ஆனா, அன்றைக்கு என்னாச்சுன்னு தெரியுல. இரண்டு பக்கமும் பயங்கர எனர்ஜியா இருந்தாங்க. ஒரு பக்கத்துல புரியாத பாஷையில பாடிட்டு இருந்தாங்க. மற்றொரு பக்கத்தில் பக்கா தமிழ் பாட்டு. அதுவா, இதுவான்னு பெரிய போட்டியே நடந்துச்சு. அப்போ, ஜெய் விசில் ஒன்றை வாயில் வைத்துக்கொண்டு ஊதினாரு. அதைப் பார்த்துட்டு, எல்லோருமே சிரித்தோம். "ஒன்ஸ்மோர்" கேட்டு, நச்சரித்தோம். அதை நான் ரொம்ப ரசித்தேன்!" 

 

இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து?

"பொதுவாக வெங்கட் சார் படங்கள்னாலே ஆடியன்சுக்கும் சரி; ஆர்ட்டிஸ்டிக்கும் சரி, ரொம்ப குதூகலமாக இருக்கும். அப்படிதான், இந்தப் படத்துல நடிக்கும்போது உணர்ந்தேன். ’நீங்க பாட்டுக்கு நடிங்க, எனக்கு எது தேவையோ அதை நான் எடுத்துக்கிறேன்’ என்று சொல்ற மாதிரிதான், எங்களை எல்லாம் வேலை வாங்கினாரு. அவரோட டிரேட் மார்க் படமா, 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' மிகப்பெரிய வெற்றியடையும் என நம்புறேன்!" சென்னை 28 பார்ட் 1 போலவே, செகண்ட் இன்னிங்ஸும் பலருக்கு நல்ல அறிமுகமாக இருக்கும் என்பது படக்குழுவின் நம்பிக்கை. கிருத்திகாவின் பேச்சிலும், அதுவே நிரம்பியிருக்கிறது.

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles