இந்த வருஷத்தோட பிளாக் பஸ்டர் சென்னை 28 இன்னிங்ஸ் 2  - நடிகர் வைபவ் உறுதி!

Monday, October 31, 2016

"வெங்கட்பிரபு கேங்க்ல ‘சரோஜா’படம் மூலமாகத்தான் அறிமுகமானேன். சென்னை 28 பார்ட் 1ல நடிக்கலியேங்கிற வருத்தம் எனக்கு ரொம்பவே இருக்கு. ஏன்னா, சென்னை 28 மக்கள் மத்தியில அவ்ளோ புகழடைஞ்சுது” என்று  தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் நடிகர் வைபவ். இந்தப்படத்தில் சென்னை ஷார்க்ஸ் டீமை எதிர்த்துக் களமிறங்குகிறார் வைபவ். 

சென்னை 28 இன்னிங்ஸ் 2 அனுபவம்..?

“சென்னை 28 பார்ட் 1 மக்கள் மத்தியில ரொம்ப பாப்புலராச்சு. என் நண்பர்கள் மொத்தப் பேரும் அதுல நடிச்சிருந்தாங்க. அதனால, அந்தப் படம் எனக்கு க்ளோஸ் டு ஹார்ட். அதோட முறையான தொடர்ச்சிதான் சென்னை 28 இன்னிங்ஸ் 2. இதுல நடிக்கிறது எனக்கு ரொம்பப் பெருமை. சென்னை 28 முதல் பாகத்தைப் பார்த்து ரசிச்ச ஆடியன்ஸ், கண்டிப்பா இதையும் பார்த்து ரசிப்பாங்க. ஏன்னா, இது அவங்களோட லைஃப்ல இப்போ நடந்துட்டிருக்கிற விஷயமா இருக்கும். இந்தப் படம், இந்த வருஷத்தோட பிளாக் பஸ்டர் படமா இருக்கும்.”

 

பிளாக் டிக்கெட் கம்பெனி பற்றி..?

“சென்னை 28 பார்ட் 1 படத்தை எஸ்.பி.சரண் தயாரிச்சாரு. பார்ட் டூவை சரணோட சேர்ந்து, வெங்கட் பிரபு பிளாக் டிக்கெட் கம்பெனி மூலமா முதல் முறையா தயாரிக்கிறார். எங்க நண்பர்கள்தான் தயாரிக்குறாங்க, அதனால இது கண்டிப்பா எனக்குப் பெருமைதான். எங்களுக்கும் படப்பிடிப்பு ரொம்ப ஜாலியா போச்சு. இப்போ படம் முடிஞ்சுடுச்சு. நவம்பர் பத்தாம் தேதி ரிலீஸ்னு சொல்லிட்டிருக்காங்க.”

 

சென்னை 28 கேங்க்ல நீங்க புதுவரவாச்சே?

“ஆடியன்ஸை பொறுத்தவரைதான் இது ரீயூனியன். நான் ஏற்கனவே வெங்கட் பிரபு டீம்ல ஒருத்தன்தானே. படப்பிடிப்பு தேனி, குற்றாலம்னு இப்படி நிறைய இடங்கள்ல நடந்தது. நாங்க நண்பர்கள் எல்லோரும் ஜாலியா டூர் போறமாதிரி போனோம். இன்னும் சொல்லணும்னா, சென்னை 28 பார்ட் 2 நண்பர்களுக்குள்ள நடக்குற வெகேஷன் ரீயூனியன்தான்.”

 

மறக்க முடியாத அனுபவம்..?

“நண்பர்கள் எல்லாரும் ஒண்ணு கூடிட்டாலே, ஜாலிதான்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஜெய், சிவா, பிரேம்ஜி எல்லாம் படங்கள் நடிக்குறதுல பிசியா இருக்காங்க. விஜய் வசந்த் பிசினஸ்ல பிசி. இப்படி நாங்க எல்லாரும் ஒண்ணு கூடணும்னு நினைச்சா, மேக்சிமம் 1 மணி நேரம் தான் கிடைக்கும். ஆனால், சென்னை 28 இன்னிங்ஸ் 2 மூலமா, சுளையா 25 நாட்கள் கிடைச்சது. ஈவினிங் ஆனா ஜாலி பண்ண, எங்க ரூமுக்குப் போயிடுவோம். அந்த ரூம் நம்பர் ஏழு. அதனால, க்ளப் செவன்னு ஒண்ணு பார்ம் பண்ணி ஜாலியா இருந்தோம்.”

 

சென்னை 28 பார்ட் 2வுக்குப் பிறகு..?

“அர்ஜுன் நடிக்கிற ‘நிபுணன்’ படத்துல கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கேன். ரெண்டு புராஜெக்ட் கைவசம் இருக்கு. அதுக்காக இப்போ பேசிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரம் அனௌன்ஸ் செய்றேன்.”

 

சென்னை 28 பார்ட் 1.5 ஸ்க்ரிப்ட்லயும் நீங்க நடிப்பீங்களா?

“அப்படியா? 1.5 வரப்போகுதா. நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது. வெங்கட் பிரபு ஸ்க்ரிப்ட் ரெடி செஞ்சு, அந்தக் கதைக்கு நான் தேவைப்பட்டேன்னா கண்டிப்பா நடிப்பேன்.”

 

சென்னை 28 இன்னிங்ஸ் 2 பற்றி ரசிகர்களுக்கு?

“சென்னை 28 பார்ட் ஒண்ணை ஆடியன்ஸ் எந்த அளவுக்கு ரசிச்சாங்களோ, அதைவிட இருபது அல்லது முப்பது மடங்கு அதிகமா இதை ரசிப்பாங்க. படத்தோட கருவே கிரிக்கெட்தான். அந்தக் கரு எந்த இடத்துலயும் மிஸ்ஸாகாம, நட்பையும் விடாம, ரொம்ப அழகா கதை பின்னியிருக்காரு. திரும்பவும் சொல்றேன், இந்த வருஷத்தோட பிளாக் பஸ்டர் சென்னை 28 இன்னிங்ஸ் 2 தான்.”

 

இந்தப் படத்துல ஜோடி உண்டா ?

“எனக்கு இல்லை, இதுல நான் நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் பண்ணியிருக்கேன். வெங்கட் பிரபு எப்போதுமே, எனக்கு வித்தியாசமான ரோல்தான் கொடுப்பாரு. ‘சரோஜா’ படத்துலருந்து, அவரோட எல்லா படத்துலேயும் வித்தியாசமான ரோல்களைத்தான் கொடுத்துட்டு இருக்காரு. அதுக்கேத்த மாதிரி, காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கரும், என்னோட ஸ்டைலுக்காக ரொம்ப மெனக்கெடறாங்க. ஆரம்பத்துலேருந்து அவங்கதான் என்னோட காஸ்ட்யூம் டிசைனர். என்னோட இந்த ஸ்டைலிஷான, வித்தியாசமான லுக்ஸுக்கு காரணமே அவங்கதான்.” பேசும்போது நிறைய இடைவெளிகள் எடுத்துக்கொண்டாலும், வைபவின் வார்த்தைகளில் அழுத்தம் அதிகம். 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles