யாருக்கும் அடங்காத பொண்ணு நான்..! நடிகை பூஜா தேவரியா - மனம் திறந்து

Friday, December 16, 2016

மேடை நாடக நடிகை, இயக்குனர், திரைப்பட நடிகை, பல மொழி வல்லுநர், விளையாட்டு வீரர் இப்படி பன்முகங்கள் இருந்தாலும், தன்னை ஒரு ஆர்டிஸ்ட்டாக அடையாளம் காண்பதையே விரும்புபவர் பூஜா தேவரியா. சினிமா பின்புலம் ஏதும் இல்லாமல், இன்று யதார்த்த நடிப்பால் அசத்திக் கொண்டிருப்பவர்.  அவருடைய கலையுலகப் பயணத்தைப் பற்றிக் கேட்டதும், தன் மனம் திறந்தார் பூஜா.

நேர நிர்வாகம்..!?

“எனக்கு என்ன பிடிக்குதோ, அதை மட்டும்தான் செய்வேன்; அதுக்கான நேரத்தை மட்டும்தான் ஒதுக்குவேன். தேவை இல்லாத வேலைகளை எடுத்துக்கிட்டு, நேரத்தை வீணடிக்க மாட்டேன்.” 

 

சினிமாவில் நடிக்கிறீர்கள் என்றதும், உங்கள் குடும்பத்தின் எதிர்வினை எப்படியிருந்தது?

“நான் வீட்டுல யாருக்கும் அடங்காத பொண்ணுதான். ஏதாவது செய்யாதன்னு சொன்னாங்கன்னா, அதை கட்டாயம் செய்வேன். சினிமாவுல நடிக்குறேன்னு சொன்னதும், அவங்களுக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. ’உன் இஷ்டம், ட்ரை பண்ணு’ன்னு சொல்லிட்டாங்க. நடிச்சேன், அவங்களும் ஒண்ணும்  சொல்லலை. இப்போ அதை தொடர்ந்துகிட்டு இருக்கேன். முக்கியமா, எங்கம்மா எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தாங்க. இந்த பேட்டி மூலமாக நான் எல்லார்கிட்டயும் கேட்டுக்க விரும்புறது என்னன்னா, சினிமாவுல ஜெயிக்கணும்னா குடும்பத்தோட சப்போர்ட் ரொம்ப முக்கியம். உங்களை சேர்ந்தவங்க ஜெயிக்குறதுக்கு, நீங்க கட்டாயம் உதவணும் என்பதுதான்.”

 

சினிமா இயக்கும் ஆசை?

“ இருக்கலாம்!! நேரம் வரும்பொழுது சொல்றேன்.” என்று சஸ்பென்ஸ் வைத்து விடைபெற்றார் பூஜா தேவரியா. அவரது மனம்திறந்த பேச்சு தொடர, அவருக்கு எதிர்காலத்தில் இதுபோன்ற நிறைய நல்ல அனுபவங்கள் வாய்க்கட்டும்!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles