மிகினும் குறையினும் - டாக்டர் அருண்(வாயுத்தொல்லை)

Thursday, September 28, 2017

“டாக்டர் எப்படி சொல்றதுன்னு தெரியல. சொல்லியே ஆகணும். அது வந்து இந்த கேஸ் ட்ரபிள் தான் பெரிய பிரச்னையா இருக்கு. முக்கியமான மீட்டிங்குல இருக்கும்போது சங்கடமா இருக்கு. என்ன செய்றதுன்னே தெரியல”

“உடம்பு முழுக்க ஒரு குத்துற மாதிரியா வலி. வலிக்குற இடத்துல அமுக்கினா ஏப்பம் வருது. இங்க பாருங்க..

முதுகுல இங்க அமுக்கங்க டாக்டர். அப்பத்தான் ஏவ்வ்..”“வயித்துக்குள்ள எப்பவும் கடாமுடா தான் சார். காத்தடைச்ச மாதிரி உப்பிக்கு. இவ்வளவுக்கும் நா ஒண்ணும் அதிகம் சாப்பிடுறது இல்ல..”

“வாயுத்தொல்லைக்கு மருந்து இருக்கா சார். நானும் பாக்காத வைத்தியமில்லை. இஞ்சி, பூண்டு எல்லாம் கிலோ கணக்குல உள்ள தள்ளியாச்சு. ஒரு பிரயோசனமும் இல்ல. படார் படார்ன்னு என்னத்த சொல்ல..”

“ஒரு இடத்துல பத்து நிமிசத்துக்கு மேல இருக்க மாட்டேன் டாக்டர். எவ்வளவு கண்ட்ரோல் பண்ணாலும் கேஸ் கீழே வந்துடுமோன்னு பயம். சீக்கிரம் ஏதாவது கொடுங்க டாக்டர். ஏ.சி. ரூம்ல ரொம்ப நேரம் தாங்காது”

“ஒண்ணு மேலே அல்லது கீழே காத்துப் பிரியலேன்னா மூச்சு விடவே கஷ்டமா இருக்கும் டாக்டர். காத்துப் பிரியாம இருக்க மருந்து வைச்சுருக்கீகளா”

“எனக்குப் பேரே வைச்சுடானுக சார் ஹாஸ்டல்ல.. லீவு முடிஞ்சு போகும்போது என் பெயரை அவங்க சொல்லணும் சார். எவ்வளவு கசப்பா இருந்தாலும் கொடுங்க சார்..”

காற்றை வெளியேற்றுபவர்களின் அவலச் சொற்கள் காற்றில் மிதந்து வருகின்றன கட்டுரை¬யை எழுத நினைக்கும் முன்.

நோய் விளக்கம் :

வாத நாடியும், பித்த நாடியும் பாதிக்கப்படுவதால் வாயுத்தொல்லை ஏற்படும். முறையற்ற உணவுப் பழக்கம், மலச்சிக்கல், செரியாமை, போதிய உறக்கமின்மை போன்றவை பித்தம், வாத நாடிகளைப் பாதிக்கச் செய்து வாயுத்தொல்லையை உருவாக்கும்.

குறி குணங்கள்:

 •           பசியின்மை
  • வயிறு வலித்தல்

  • ஏப்பம்

  • கீழ்வாய் வழியே காற்று வெளியேறுதல்

  • உடம்பில் குத்தல், குடைச்சல்

 

சித்த மருத்துவம் :

உணவே மருந்து :

 • எளிதில் சீரணிக்கக் கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • உணவில் இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம், பூண்டு, மஞ்சள், ஏலக்காய் ஆகிய பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • நண்பகலில் சுக்குநீர் அருந்தி வர வாயுத்தொல்லை நீங்கும்.
 • தினமும் இரசம், மோர் சேர்ந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வாயுத்தொல்லை குறையும்.
 • கீரை வகைகள் சேர்த்து, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை குறையும்.
 • உணவிற்கு பின் சுடுநீர் அருந்துவது வாயுத்தொல்லையைக் குறைக்கும்.
 • பசியறிந்து உண்ணும் முறையைக் கடைப்பிடித்து வர வாயுத்தொல்லை முற்றிலும் அகலும்.
 • எண்ணெய்ப் பலகாரங்களை தவிர்த்தால் வாயுத்தொல்லை குறையும்.

சித்த மருந்துகள் :

பஞ்ச தீபாக்கினி சூரணம் - மூன்று விரல் அளவு - உணவிற்கு முன் காலை, மதியம், இரவு

சீரக சூரணம் - மூன்று விரல் அளவு - உணவிற்கு பின் இருவேளை

ஏலாதி சூரணம் - இரண்டு விரல் அளவு - உ. பின் இருவேளை

அஷ்ட சூரணம் - ஐந்து விரல் அளவு - முதல் வாய் சோற்றில் பிசைந்து & மதியம்

குன்மகுடோரி மெழுகு - பாக்கு அளவு - உணவிற்கு பின் இருவேளை

அடுத்த இதழில் ‘குரற்கம்மல்’  

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles