ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை- மருத்துவர் கௌதமன்(கருப்பை கட்டிகள்)

Thursday, September 28, 2017

இன்றைய தினசரி நாளிதழ்களில் தவறாமல் இடம்பிடிப்பது கருப்பை கட்டிகள் நோய் விளம்பரங்கள்’ தான். இந்த இதழில் இந்நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்.

“போராட்டம் நிறைந்த வாழ்க்கையில், பிரச்னைக்கு தீர்வே காண்கிறேன்  பேர்வழி என்று, வேரோடு கிள்ளி எறிவது என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். உடல் உறுப்பில் ஏதேனும் உபாதை ஏற்பட்டால் சரியான தீர்வு காணாமல், அவ்வுறுப்பை வெட்டி எறிவது என்பது இப்போது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இங்கே உடல் உறுப்பு என்று சொல்வதை விட உள்ளுறுப்பு என்று கூறுவதுதான் மிகவும் சரியாக இருக்கும்.

கைகளிலோ கால்களிலோ அல்லது முகத்திலோ பிரச்னை ஏதேனும், ஏற்பட்டால் நாம் அவற்றை அகற்ற முடியுமா? பின்னர் ஏன் உள்ளுறுப்பு பாதிக்கப் பட்டால் மட்டும் அவ்வுறுப்பை நீக்கலாம் என்றால் யோசிக்காமல் கூட நாம் ஏன் சம்மதிக்கிறோம்?. இதனைப் பற்றி என்றாவது நாம் தீவிரமாக சிந்தித்தது உண்டா?

கருப்பை கட்டிகள் வந்து விட்டது என்றாலே உடனே பெண்கள் பதட்டமடைந்து கருப்பை நீக்கம் செய்து கொள்கின்றனர். அது முற்றிலும் தவறான ஒன்று. பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் பொழுது, கருப்பையில் தோன்றும் திசுக்கள் முழுமையாக வெளியேற வேண்டும். ஆனால், சில நேரம் அவை முழுமையாக வெளியேறாமல் அங்கு தசைகளிலேயே ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுதான் கருப்பை கட்டி என்று நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் கருப்பை கட்டி என்றாலே அது ஏதோ வளர்ச்சி என்று தவறாக புரிந்து கொண்டு கருப்பையை நீக்கவும் சம்மதிக்கின்றனர்.

கருப்பை நீக்கினால் ஏற்படும் விளைவுகள்!

  • உடலில் இயற்கையாக எலும்புச் சத்து சேரும் திறன் குறைகிறது.
  • தைராய்டு சுரப்பி செயல்பாடு நோய் ஏற்படுகிறது.
  • உடல் பாரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.
  • கை, கால்கள் சுருங்குதல், வயிறு உப்பிக் கொண்டே இருத்தல்.
  • மனஉளைச்சலுக்கு உள்ளாக நேரிடுதல்.
  • அறுவை சிகிச்சை இல்லாமல், கருப்பை கட்டிகளை எவ்வாறு நாம் குணப்படுத்த முடியும்
  • ஆயுர்வேதம் மற்றும் சித்த முறைகளில் முதலில் கருப்பையை பலப்படுத்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை  உட்கொள்ள வேண்டும். கஷாயமோ அல்லது மருந்தூட்டப்பட்ட  நெய்யாகவோ இருக்கலாம். இதனை தொடர்ச்சியாக உட்கொண்டால் நாளடைவில், கருப்பை கட்டிகள் படிப்படியாக குறைவதை பார்க்கலாம்.

 

அதோடு மட்டுமில்லாமல் சில உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொண்டால் கருப்பைக்கட்டி நன்றாக கறைந்து விடும்.

  • முருங்கைக்கீரை
  • முளைக்கீரை
  • உளுத்தங்களி

மேற்கூறிய முறைகளினால் கருப்பை கட்டிகள் அகன்றாலும், அது திரும்ப வராமல் இருக்குமா ? என்று கேட்பவர்களுக்கு

முறையான உடற்  பயிற்சி

முறையான மனப்பயிற்சி

தேவைப்படும் ஆயுர்வேத மருந்துகள்

உணவுக் கட்டுப்பாடு

இவற்றை சரியாக பின்பற்றினாலே கருப்பை கட்டியிலிருந்து எளிதாக விடுபடலாம். எனவே கருப்பை கட்டி என்றாலே, கருப்பையையே அகற்றிடலாம் என்கிற எண்ணத்தை தூக்கி எறியுங்கள். பதற்றம் இல்லாமல் நலமான வாழ்க்கையை வாழுங்கள்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles