மூலநோய் - மருத்துவர் கௌதமன்

Monday, September 18, 2017

இன்றைய நவீன உலகில் பலருக்கும் ஏற்படும் பிரச்னை மூலநோய். இதனால் ஏற்படும் வலியும், மனஉளைச்சலும் சொல்லி மாளாது. இதுகுறித்து விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்.

“மலச்சிக்கல் பிரச்னை அதிகமாகும்போதோ அல்லது நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், மருந்துகளால் நேரடியாக மலச்சிக்கல் ஏற்படும்போது மூலநோய் உருவாகிறது.

அப்படி உருவாகும்போது, இரத்தக் குழாய்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீங்கி தொய்வடைய  ஆரம்பிக்கிறது.அப்படி தொய்வடையும் இரத்தக் குழாயைத்தான் ‘மூலம்’ என்று சொல்கிறோம்.

மூலநோய் என்பது இரு வகைப்படும்

 • உள்மூலம் (Internal Piles)
 • வெளிமூலம் (External Piles)

உள்மூலத்தை வெளிப்புறமாக பார்க்கவே முடியாது. சில பரிசோதனைகளின் மூலம், மருத்துவர்கள் உணரத்தான் முடியும். உல் மூலத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, எந்நேரமும் மலம் கழிக்க வேண்டும் போலவே இருக்கும். அப்படியே அவர்கள் மலம் கழிக்கச் சென்றாலும், உடல் உறுப்பு ஏதோ ஒன்று தடுப்பது போலவே இருக்கும். அதையும் மீறி கழித்தால் உள் தசை, ஆசனவாய் மூலம் வெளியே வந்து பின்பு, உள்ளே சென்றுவிடும்.

முதல் நிலையில் இருக்கக் கூடிய உள்மூலத்திற்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றாலோ அல்லது சரியான உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றாலோ இரண்டாம் நிலையான வெளிமூலம் என்கிற நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், ஆசனவாயில் உள் தசை வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். அந்நோயாளிகள் மலம் கழித்துவிட்டு வந்தால், கடுமையான எரிச்சல் ஏற்படும், அதோடு அவர்களால் உடனே உட்காரவும் முடியாது. வெளிமூலத்தினால், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கடுமையான இரத்த வெளியேற்றம் ஏற்படும் அல்லது சீழ் வடிந்து கொண்டிருக்கும்.

யாருக்கெல்லாம் மூலநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்?

 • பெண்களையே அதிகம் தாக்குகிறது. ஏனெனில், கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை வளர்ச்சி அடையும்பொழுது, அது குடலில் தரும் அழுத்தத்தினால் மூலநோய் ஏற்படுகிறது.
 • பேறுகாலத்திற்கு பிறகு ஏற்பட்ட மூலநோய்க்கு முறையான சிகிச்சையின்மை.
 • ஆண்களில், அதிகமாக இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏற்படுகிறது.
 • தேவையான அளவு தண்ணீர், காய்கறி, கீரைகள் உட்கொள்ளாமல் இருத்தல்.
 • இரவுத் தூக்கம் இல்லாதவர்களுக்கு.
 • மது அருந்துதல்
 • புகை பிடித்தல் போன்ற காரணங்களால்தான் மூலநோய் ஏற்படுகிறது.

அறுவை சிகிச்சை இல்லாமல் எவ்வாறு குணமாக்க முடியும் ?

 • மூல நோயைப் பொறுத்தவரை அறுவை சிகிச்சை என்பது தற்காலிக தீர்வுதான். ஆயுர்வேத சித்த  முறைப்படி, இந்நோயினை எளிதாக விரட்டலாம். அதற்கான சில தீர்வுகள்;
 • உணவுப் பழக்கம் மாற்றம்
 • உடற்பயிற்சி
 • மனப் பயிற்சி
 • தூக்கத்தில் இருக்கும் தவறுகளைத் திருத்துதல்.

மேற்கூறியவற்றை சரி செய்தாலே மூல நோயிலிருந்து எளிதில் விடுபடலாம். அதோடு இந்நோயாளிகள் சில உணவு வகைகளை தவிர்த்தல் அவர்களுக்கு சில நன்மைகளை பயக்கும்.

 • கோழிக்கறி
 • அதிகமாக  மிளகாய் சேர்த்துக் கொள்ளுதல்
 • புளி சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தல்

சிகிச்சை முறை

மூச்சுபயிற்சியின் மூலம், குடலின், பெரிஸ்டாலிக் மூவ்மெண்டை சரிசெய்து நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.

உணவு கட்டுப்பாடு 

மேற்கூறிய உணவுகளைத் தவிர்த்து, காரத்துக்கு மிளகையும், புளிப்புக்கு எலுமிச்சை சாற்றையும், பால் மற்றும் மோர் அதிகமாக சேர்த்துக் கொண்டால் மூலநோயின் பாதிப்பு குறையும்.

க்ஷாரசூத்திரம் - கயிறு எடுத்து அதில் மஞ்சள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எருக்கம்பாலை கலந்து, வைத்திருப்பார்கள். மருந்தூட்டப்பட்ட இந்தக் கயிறை மூலத்தின் வேர்ப்பகுதியில், இரண்டு அல்லது மூன்று நாட்களிலும் கட்டி வைத்துவிடுவோம். மூன்றாவது அல்லது நான்காவது நாள், எந்த உதிரப் போக்கும் இல்லாமல் தானாக கீழே விழுந்துவிடும்.

எனவே நீங்கள் மூலநோய் வந்துவிட்டது என்று பயப்படவேண்டாம். அறுவை சிகிச்சை இன்றி இந்நோயினை முற்றிலுமாக அகற்ற முடியும் என்கிற நம்பிக்கை கொள்ளுங்கள். நம் முன்னோர்களின் கூற்றுப்படி உணவே மருந்தாக உட்கொண்டால் போதும்.நோயின்றி நீண்ட நாட்கள் வாழமுடியும்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles