ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப் பாதை(சோரியாசிஸ்) - மருத்துவர் கௌதமன்

Friday, September 1, 2017

இன்றைய நாளேடுகளிலும், வார, மாத இதழ்களிலும் தவறாமல் இடம்பிடிப்பது ‘சோரியாசிஸ் நோய் விளம்பரங்கள்’ தான். அந்த அளவிற்கு, அந்த நோயின் தாக்கம், இன்று பலரையும் பீடித்திருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் மன அழுத்தம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அவ்வகையில்,  இந்த இதழில் சோரியாசிஸ் நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்.

“நவீன தொழில்நுட்ப உலகில், நாம் மாபெரும் முன்னேற்றமடைந்து உள்ளோம். கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதற்கு, முக்கியக் காரணம் மாறிக் கொண்டிருக்கும் நமது வாழ்க்கைமுறையும் சுற்றுப்புறச் சூழலும் தான்.  இன்று, ஏராளமான புதுவிதமான நோய்கள் ஏற்பட முக்கியமான காரணம் ‘மன அழுத்தம்’. நோய்களினால் இளமையில் பாதிக்கப்படாதவர்கள் கூட, இன்று நடுத்தர வயதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!.

தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் பணிச் சுமையினால் ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் அதிக உடல் பருமன் போன்வற்றால், மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மரணத்தில் கொண்டுபோய் தள்ளி விடுகிறது. ஒரு பக்கம், உளவியல் சார்ந்த தாக்குதல்களும், இன்னொரு பக்கம், நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களில் கலப்படங்களாலும் பாதிக்கப்படுகிறோம்.

சமீபத்தில், நாம் எல்லோரும் ஊடகங்களில் அறிந்த செய்திதான் இது.  நீண்ட காலமாக தொடர்ந்து குறிப்பிட்ட அந்நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்தியதால் ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட புற்று நோய். அதற்கு, நஷ்ட ஈடாக, எவ்வளவு பணம் கொடுத்தாலும் உயிரிழப்பு என்பது மிகக் கொடுமையான ஒன்று. சமீபகாலமாக, ரசாயனக் கலப்புகளால் தோல்நோய் என்ற வார்த்தையை, நாம் அடிக்கடி கேட்கிறோம். அதிலும் ‘சோரியாசிஸ்’ என்ற தோல்நோய் ஏற்பட மன அழுத்தமும் மிக முக்கிய காரணம் என்பது வேதனைக்குரியது!”

சோரியாசிஸ் நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் தோலானது, செதில் செதிலாக இருக்கும்.

சோரியாசிஸ், ஒரு பரம்பரை வியாதி.

எளிதில் அடுத்தவர்களுக்கு பரவும் தோற்று.

இதனை குணப்படுத்தவே முடியாது.

போன்ற சில தவறான கருத்துக்கள் நம் மக்களிடம் நிலவிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், உண்மையில் ‘சோரியாசிஸ்’ வருவதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவைதான்!

தவறான உணவுப் பழக்கம்

அதீத மன அழுத்தம்

பிற நோய் சிகிச்சைகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள்

தொடர்ந்து வெளியிடத்தில் உட்கொள்ளும் அசைவ உணவுகள்

சோரியாசிஸ் நோயினை ஐந்து வகையாக பிரிக்கலாம்;

பொடுகுகளால் ஏற்படக் கூடிய ஸ்கால்ப் சோரியாசிஸ்.

தோல்களில் ஏற்படக் கூடிய ஸ்கின் சோரியாசிஸ்.

மூட்டுகளின் பின்புறம் மட்டும் ஏற்படும் சோரியாசிஸ்.

நகங்களில் வரக் கூடிய நெயில் சோரியாசிஸ்.

குதிங்கால், உள்ளங்கால் மற்றும் கைகளில் மட்டும்

ஏற்படக்கூடிய சோரியாசிஸ்.

இந்நோயை ஆயுர்வேத முறைப்படி நூறு சதவீதம் நாம் குணப்படுத்த முடியும்.

அதாவது,

ஆயுர்வேத பஞ்ச கர்ம சிகிச்சை.

சரியான உணவு கட்டுப்பாடு.

மனப் பயிற்சி.

உடல் பயிற்சி.

ஆண்டுக்கொருமுறை, உடல் கழிவுகளை சுத்திகரிக்கும் சிகிச்சை.

போன்ற விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே, நோயிலிருந்து விடுபட்டு, நலமாக வாழலாம்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles