ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப் பாதை -(சர்க்கரை நோய்)மருத்துவர் கௌதமன்

Sunday, October 15, 2017

இன்றைய நெருக்கடியான சமூகச் சூழலால் மனிதர்களின் உணவு நேரம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. விளைவு சர்க்கரை நோயில் கொண்டுபோய் விடுகிறது. இது பற்றி பலவிதமான தகவல்கள் இணையங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

உண்மையில் அவை தரும் ஆலோசனைகள் சரியானவையா என்பதில் பலருக்கும் சந்தேகம் உண்டு. அவை நீங்கவும், ‘சர்க்கரை நோய்’ குறித்த தெளிவையும் தீர்வையும் தந்துள்ளார் மருத்துவர் கௌதமன். இனிப்பான தீபாவளி திருநாளில் இக்கட்டுரை வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்!

“பல்லாயிரக்கணக்கான  வருடங்களுக்கு முன்னரே தோன்றியது ஆயுர்வேதம். இன்று, சில மருத்துவமுறைகள், சர்க்கரை நோயாளிகளுக்கு, மாவுச் சத்து நிறைந்த உணவுகளான அரிசி, கிழங்கு வகைகள் கூடாது என்று தடை விதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சித்த, ஆயுர்வேத முறைகளோ சோற்றை வடித்து உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

வெகுகாலமாக, சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பக்க வாதம், சிறு நீரகக் கோளாறு போன்ற பிரச்னைகள் உருவாகிறது. இதனால், சர்க்கரை நோய் என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோய் என்றும் மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. உண்மையில் சர்க்கரை நோய் என்பது நாம் உட்கொள்ளும் ஊட்டச்சத்து மிக்க உணவானது, உடலில் கொழுப்பாக மாறி, உடலை இயக்கக் கூடிய பேட்டரிகளாக மாறி எனர்ஜி செல்லாக சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த செல்லை சேமிக்க, உடல், இன்சுலினை சுரக்கிறது. இன்சுலின் அளவு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ, நமது உடல் சர்க்கரை நோய்க்கு ஆளாகிறது.

இந்நோய் ஏற்பட்டால் வாழ்க்கை முழுவதும், மருந்து உட்கொள்ள வேண்டி வருமே என்று அஞ்ச வேண்டாம். அதற்கான தீர்வுகளை பின்பற்றி வந்தாலே போதும். அதாவது, நம்முடைய முன்னோர்கள் உணவு உட்கொள்வதை ஆறு வேளை என பிரித்துக் கொண்டனர். அதாவது, மூன்று வேளை குறைவாக சோறுடன் காய்கறி, கீரை, பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டனர். மீதமிருக்கும் மூன்று வேளை, வேக வைத்த பயறு வகைகளை உண்டனர். இதனை  பின்பற்றினாலே நோயின்றி வாழலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றால் பதட்டமாகாமல், அதற்கான எளிய தீர்வுகளை உடனடியாக பின்பற்றலாம்.

 

தீர்வு :

  • சமைக்கும் முறையை மாற்றிக் கொள்வது.
  • தினமும் உணவில் அதிக எண்ணெய் சேர்க்காமல், தவிர்ப்பது.
  • குறைந்தபட்சம் அரை மணி நேரம் நடை பயிற்சி மற்றும் சைக்கிளிங்,
  • குறைந்தது 50 தடவை தோப்புக்கரணம் போடுவது.

பொதுவாக ஆயுர்வேத மருந்துகள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்காது, கணையத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதாகவே இருக்கும். ஏனெனில், சர்க்கரை நோயை விட, இன்சுலின் குறைவதால், ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம்.

முப்பது வயதிலேயே சர்க்கரையா, இனி வாழ்நாள் முழுவதும் நாம் மருந்துகள் உட்கொண்டுதான் ஆக வேண்டுமா? என்கிற தவறான எண்ணத்தை உடைத்தெறியுங்கள். எப்படி நோயை அணுக வேண்டும் என்று உங்கள் அருகில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவரை சந்தித்து, சரியான வழியில் உங்கள் வாழ்வியல் முறையை மாற்றிக் அமைத்துக் கொள்ளுங்கள். பிறகு, சர்க்கரை நோயின் பிடியிலிருந்து விடுபட்டு, இனிப்பான வாழ்க்கையை பல்லாண்டு காலம் வாழலாம்!”

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles