ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப் பாதை - மருத்துவர் கௌதமன்(பித்தப்பை கற்கள்)

Wednesday, November 15, 2017

இன்றைய சூழலில் நிறைய பேருக்கு ‘பித்தப்பை கற்கள்’ நோய் ஏற்படுவதை பார்க்கிறோம். இரவு பத்து மணிக்கு மேல் வயிற்றின் மேற்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். அது வழக்கத்துக்கு மாறான வலியாக, கத்தியை வயிற்றில் சொருகினால் போல இருக்கும். அந்த வலி இதயத்துக்கும் பரவுவதை நம்மால் உணர முடியும்.

மருத்துவரை நாடிச் சென்றால், அவர் பரிசோதித்துவிட்டு, “உங்களுக்கு பித்தப்பையில்  கற்கள் இருக்கு.. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்” என்று சொல்வார்.

பித்தப்பை என்பது ஈரலுக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஒரு சிறு பை. இந்தப் பையிலிருந்து ஒரு வகையான திரவம் சுரக்கும். இந்த திரவத்தினுடைய முக்கியமான வேலை உணவை செரிக்க வைப்பதுதான்.  இந்த திரவமானது, நாம் சாப்பிட்ட பிறகு அதிலிருக்கக் கூடிய கொழுப்புகள், நார்சத்துகள்,  உடலுக்கு ஜீரணம் ஆகாத பொருட்களை செரிக்க வைப்பதற்காக உணவுடன் கலந்து நன்றாக செரிமானத்தை ஊட்டி, வயிற்றிலிருந்து உணவை குடலுக்கு அனுப்பி வைக்கும்.  கொழுப்பு சத்து மிக்க உணவுகளையோ, கால்சியம் சார்ந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளும்போதோ அல்லது வழக்கத்துக்கு அதிகமாக கீரைகள், காய்கறிகள் சாப்பிடும்போதோ பித்தப்பையில் கற்கள் உருவாகும்.

இந்த கற்கள் ஒரு மில்லி மீட்டரில் இருந்து நாற்பது மில்லி மீட்டர் வரை இருக்கும். இந்த கற்கள் பித்தப்பையின் துவாரத்தை அடைத்துக்கொள்ளும்போது தான் கடுமையான வலி உண்டாகிறது. இரவு நேரங்களில் பித்தப்பையில் வலி ஏற்படும் போது நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது. மிதமாக சாப்பிட்டு, வயிறு நிறைய தண்ணீர் குடித்தால் பித்தப்பை வலியிலிருந்து லேசான ஆறுதல் நமக்கு கிடைக்கும்.

பித்தப்பையில் கற்கள் இருந்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்வது நலம் பயக்காது.

நூறிலிருந்து எழுபது பேருக்கு பித்தப்பை கற்கள் இருப்பதை பார்க்க முடியும். பொதுவாகவே பித்தப்பை கற்கள் தானாக உடலில் கலந்து, மலம் வழியே வெளியே விடும். எப்போது அதனுடைய அளவு அதிகரிக்கிறதோ, செரிக்க முடியாத அளவுக்கு எப்போதெல்லாம் நாம் சாப்பிடுகிறோமோ அப்போதெல்லாம் நமக்கு பித்தப்பை கற்களால் பாதிப்பு ஏற்படும்!

ஆயுர்வேதத்தில் பித்தப்பை கற்களை அகற்றுவது எப்படி என்றால்,

முதலில் உடலை சுத்தப்படுத்துவது.

உணவுக் கட்டுப்பாடுகள்:

ஒரு டம்பளர் தண்ணீரில் சிறிதளவு சீரகத்தை போட்டு, நன்கு கொதிக்க வைத்து அருந்துவது.

உடலை சுத்திகரிக்கும் பேதி மாத்திரைகள் உட்கொள்ளுதல்.

உடற்பயிற்சி:

இதன் தொடர்ச்சியாக சில ரசாயண மருந்துகளை சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் இருந்து கற்களை அகற்றி விட முடியும்.

மேலும், ஆலிவ் ஆயில் 5 மில்லி எடுத்துக்கொண்டு, பெரிய பூண்டு நான்கு எடுத்து, அதை நன்கு தட்டி பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும். ப்ரஷ் லெமன் எடுத்துக்கொண்டு அதில் அரை மூடியை பிழிந்து, அதிலிருந்து ஒரு ஸ்பூன் சாறு எடுத்து கொள்ள வேண்டும். ஆலிவ் ஆயில், பூண்டுடன் லெமன் சாறை கலந்து, காலையில் வெறும் வயிற்றுடன் சாப்பிட வேண்டும். அடுத்த அரை மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிடக் கூடாது. அதன்பிறகு, சூடான சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதை தொடர்ச்சியாக சுமார் மூன்று மாதங்களுக்கு செய்து வாருங்கள். பின்னர் ஸ்கேன் எடுத்து பார்த்தால், நூற்றில் தொண்ணூறு சதவீதம் பேருக்கு பித்தப்பை கற்கள் இல்லாமல் போயிருப்பதை காண முடியும். மேற்கண்ட விஷயங்களை நாம் கடைபிடித்து வந்தால் பல்லாண்டு காலம் நாம் நோயின்றி வாழவும் முடியும்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles