மிகினும் குறையினும்! டாக்டர் அருண்

Wednesday, November 1, 2017

“வணக்கம். பருவங்கள் மாறுவது இயல்பான ஒன்றுதான். வெயில் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கிற நாம ரெண்டு நாளு மழைன்னாலே சுருண்டுக்கிறோம். அப்படி இல்லை, மழையை கொண்டாடணும். மழைக்காக விழா எடுத்துக் கொண்டாடின மண் இது. அத மனசுல வைச்சுக்கணும்.

“வணக்கம், டாக்டர். மழைக்காலம் ஆரம்பிச்சிருச்சு. மழைக்கால பாதிப்பிலிருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் பத்தி சொல்லுங்களேன்?”

அதே நேரத்துல உடலை காலத்திற்கேற்ப பாதுகாப்பா வைச்சிருக்கிற விழிப்புணர்வும் அவசியம்தான். பொதுவா இந்த மழைக்காலத்துல சளி, இருமல், சுரம், இரைப்பு (ஆஸ்துமா) காமாலை, பூஞ்சைத் தொற்று, கழிச்சல் போன்ற நோய்கள் உடலைத் தாக்கலாம்.

பொதுவாக குடிநீரைக் காய்ச்சி இளஞ்சூடாக பருகுவது நல்லது. உணவும் சூடாக உண்ணுதல் நல்லது. ஆறிய பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் சளி, கழிச்சல், காமாலை நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மழை நீரில் நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்ததும் ஈரம் முழுமையாகப் போகும் மட்டும் சுத்தமான துணி கொண்டு துவட்டி விட வேண்டும். இதனால் ஒவ்வாமை, சளிப்பித்தல், பூஞ்சைத் தொற்று ஏற்படுதல் போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குழந்தைகள், முதியவர்கள், உடல் வன்மை குறைந்தவர்கள் போன்றோருக்கு சிற்சில இடர்பாடுகள் வரலாம். அதனையும் குணப்படுத்த உதவும் எளிய சித்த மருத்துவ முறைகளையும் கூறுகிறேன்.

சளி இருமல் -  (1) ஆடாதோடைக் குடிநீர்  - இருவேளை உணவிற்கு முன்

பெரியவர்களுக்கு - 60 - 90 மி.லி. அளவு

சிறியவர்களுக்கு - 30 - 60 மி.லி. அளவு

குழந்தைகளுக்கு - 10 - 30 மி.லி. அளவு

(2) திரிகடுகு சூரணம்  - இருவேளை தேனுடன் - உணவிற்கு பின்

பெரியவர்களுக்கு - மூன்று விரல் கொள்ளும் அளவு

குழந்தைகளுக்கு - இரு விரல் கொள்ளும் அளவு

சுரம் -  நிலவேம்பு குடிநீர் (அ) சர்வசுர குடிநீர் சுரம் இருப்பதைப் பொருத்து இருவேளை முதல் நான்கு வேளை வரை

பெரியவர்கள் - 60 - 40 மி.லி.

சிறியவர்கள் - 30 - 60 மி.லி.

குழந்தைகள் - 10 - 30 மி.லி.

இரைப்பு (ஆஸ்துமா) (1) திப்பிலி இரசாயணம் காலை, மாலை உணவிற்கு பின் அளவு சுண்டைக்காய் அளவு

காமாலை

(1) கீழா நெல்லியை அரைத்து உருட்டி எலுமிச்சை அளவு மோருடன் உணவிற்கு முன்

(2) கரிசலாங்கண்ணியை அரைத்து உருட்டி எலுமிச்சை அளவு மோருடன் உணவிற்கு முன்

(3) ஆமணக்கு கொழுந்து, சீரகம், கற்பூரம் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சை அளவு மோருடன் உணவிற்கு முன்

(4) மண்டூராதி அடைக் குடிநீர் உணவிற்கு முன் இருவேளை அளவு 60 90 மி.லி.

காமாலை என்று உறுதி செய்யப்பட்டால் சித்த மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

பூஞ்சைத் தொற்று  சீமை அகத்திக் களிப்பு  வெளிப்பிரயோகமாக

பிரட்தண்டு தைலம் வெளிப்பிரயோகமாக

ஒவ்வாமை சிலருக்கு இருமல், தும்மல் போன்றவை ஏற்படலாம் அதற்கு ஆடாதோடை குடிநீர் முன்னர் கூறியபடி அருந்தலாம்.

சிலருக்கு தோலில் தடிப்புகள், அரிப்பு போன்றவை ஏற்படலாம். அதற்கு அருகம்புல் வேருடன் ஒரு கைப்பிடி, 5 மிளகு, காப்பு நீக்கிய வெற்றிலை இவற்றை 200 மி.லி. நீர்விட்டுக் கொதிக்க வைத்து 50 மி.லி.யாக வற்ற வைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் அருந்தலாம். வெளிப் பிரயோகமாக அருகம்புல் தைலம் பூசலாம்.

கழிச்சல் சுண்டை வற்றல் சூரணம் இருவேளை மூன்று வேளை தேவைக்கேற்ப

பெரியவர்களுக்கு ஐந்துவிரல் கொள்ளும் அளவு மோருடன்

சிறியவர்களுக்கு மூன்று விரல் கொள்ளும் அளவு மோருடன்

ஓமத்தீநீர் தேவைக்கேற்ப இரண்டு மூன்று வேளை

பெரியவர்கள் - 30 மி.லி. வரை நீருடன் கலந்து

குழந்தைகள் - 10 - 15 மி.லி.வரை நீருடன் கலந்து

 

“விரிவான பதிலுக்கு நன்றி டாக்டர். உடலைப் பாதுகாக்கிற மாதிரி வீட்டைப் பாதுகாக்க எதும் வழிமுறைகள்?”

 

“வீடு மட்டுமல்ல, சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை. நீர் தேங்காமல் வைத்திருந்தாலே பல நோய்களைத் தவிர்க்க முடியும். வீட்டில் பூஞ்சை ஏற்படாமல் இருக்க திரைச் சீலைகளை பகலில் கழட்டி வைக்கலாம். சாம்பிராணிப் புகை உள்நொச்சி புகை, உலர் வேப்பிலைப் புகை போடுவதின் மூலம் வீட்டில் உள்ள சுவர்களில பூஞ்சை படியாமலும், ஈரம் தடிக்காமலும் உலர்வாக வைக்க முடியும். பூஞ்சை வாசமே பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி சளி, இருமலை ஏற்படுத்தும். சிலருக்க இரைப்பையும் உருவாக்கும். புகை போடுவதின் மூலம் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். அதேபோன்று தலையணை உறை, போர்வை போன்றவற்றை அடிக்கடி மாற்றுவதும் அவசியம்.”

“மிகவும் நல்லது டாக்டர். மழைக்காலத்துல அருந்துகிற பானம் ஏதாவது சொல்லுங்களேன்.”

“சுக்கு நீர் அருந்துவது எப்பொழுதும் நன்மை பயக்கும். தோல் நீக்கிய சுக்கு 50 கிராம், கொத்துமல்லி 50 கிராம் பொடித்து நன்றாக கலந்து கொண்டு 200 மி.லி. நீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். மதிய நேர பானம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை மாலையில் அருந்தலாம். ‘மழை வருவது மழை வருது கசாயம் கொண்டு வா’ என வேடிக்கையாக நாங்கள் சொல்வதுண்டு. வாரம் ஒருமுறையோ இருமுறையோ நிலவேம்பு குடிநீர் அருந்துதலும் நன்மை பயக்கும்!”

‘மிகினும் குறையினும்’ நிறைவுற்றது!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles