ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை(சிறுநீரகச் செயலிழப்பு) - மருத்துவர் கௌதமன்

Wednesday, November 1, 2017

இன்றைய சூழலில் மனிதர்களிடம் அதிகமாக காணப்படும் நோய்களில் ‘சிறுநீரக செயலிழப்பு’ முன்னணியில் நிற்கிறது. அதன் அறிகுறிகளும், அந்நோயை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்

“விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித இனத்தின் வரமா? சாபமா? என்று எத்தனையோ முறை பட்டிமன்றம் நடத்திவிட்டோம். ஆனால், அதற்கான தீர்வு என்பது  இன்று வரை கொடுக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும், நகலக கடைகளைப் போல் எல்லா மருத்துவமனைகளிலும் சிறுநீரக டயாலிசிஸ் சென்டர் பெருகிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். யாரைக்  கேட்டாலும், “சிறுநீரகக் கோளாறு” என்று கூறுவது மிகவும் சகஜமாகி விட்டது.

சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டால் தன்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணி மன உளைச்சலுக்கு  பலர் ஆளாகிறார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆயுர்வேத முறையிலும், சித்த முறையிலும், சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்தலாம். ஆனால் அதற்கு நோயாளிகள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.

சிறுநீரகக் செயல் குறைபாடுகள் ஏற்படக் காரணம் :

  • அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
  • இரத்த சர்க்கரையின் அளவை கவனிக்காமல் இருப்பது.
  • அதிகமாக பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகள், காய்கறி, பழங்களை உட்கொள்ளுதல்.
  • தொடர்ந்து வாய்வுத் தொல்லைகளுக்கு, மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை நாமே வாங்கி உட்கொள்வது.
  • ஒருவருக்கு இலேசாக கால் வீக்கம் ஏற்பட்டு கவனிக்க தவறிவிட்டால், அவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மார் சளி சேர்ந்து விடும். பின்பு அவர் மருத்துவமனையில் சென்று சோதனை செய்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கும்.

சிறுநீரக செயலிழப்பு என்றாலே டயாலிசிஸ்தான், வேறு சிகிச்சையே கிடையாதா? என்று கேட்டால், நாங்கள் “கட்டாயமாக இருக்கிறது” என்று தான் கூறுவோம்.  சிறுநீரக செயலிழப்பு என்பது சமீபத்தில் தோன்றிய நோயே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. அதற்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் சிறுநீர் செயலிழப்பு ஏற்பட்டதும், அவசர சிகிச்சையாக டயாலிசிஸ் சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர். டயாலிசிஸ்லிருந்து விடுபடுவது எப்படி? என்றால்,

செயல்படாமல் இருக்கும் உறுப்புகளை பலப்படுத்துதல்

பலவீனமாக இருக்கும் உறுப்புகளை பலப்படுத்துதல்

 

உணவு முறைகள் மாற்றம்

  • இஞ்சி ஒத்தடம்
  • உடற்பயிற்சி
  • மனப்பயிற்சி
  • பிராணாயாமம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள்
  • உடலை சுத்திகரிக்கும் மாத்திரைகளை உட்கொள்ளுதல்; பேதி மாத்திரை

 

மேற்கண்டவற்றை தொடர்ந்து செய்து வந்தால், வாரத்திற்கு இருமுறை டயாலிஸ் என்பது குறைந்து வாரம் ஒருமுறை என்றாகி, படிப்படியாக குறைந்து பதினைந்து நாட்களுக்கொருமுறை என்றாகும். பெரும்பாலானோர், டயாலிசிஸ் சிகிசிச்சையை நிறுத்தி வெறும் மருந்து மாத்திரைகளையே உட்கொள்கிறார்கள். அவர்களின் ஆரோக்கியமும் முன்னேறும், அமைதியான வாழ்க்கையையும் பல்லாண்டு காலம் வாழலாம்!”.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles