மிகினும் குறையினும் - சித்த மருத்துவத்தினால்  காணாமல் போகும் காமாலை!

Tuesday, January 31, 2017

மஞ்சல் காமாலை என்றவுடன் அனைவருக்கும் நாட்டு மருத்துவம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சித்த மருத்துவத்தின் பெருமையைத் தாங்கிப் பிடித்திருக்கும் நோய்களில் ஒன்று மஞ்சள் காமாலை. 

நோய் விளக்கம்

பித்த நாடியின் பாதிப்பால் கண், நாக்கு, உடல், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்தை அடையும் நோயை மஞ்சள் காமாலை என்கிறோம். பித்தத்தைப் பெருக்கக்கூடிய உணவினாலும் செயலினாலும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

உணவினால்

 • உப்புச் சுவை, கசுப்புச் சுவை மிகுந்த உணவை தொடர்ச்சியாக உண்ணுதல், கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்தல் 

 

செயலினால்

 • பித்தத்தைப் பெருக்கக்கூடிய செயல்களான இரவில் கண் விழித்தல், வெயிலில் சுற்றுதல் போன்ற செயல்கள்
 • சுகாதாரமற்ற உணவுகளை எடுத்தல்
 • கழிவறைக்குச் சென்றுவந்த பின் கைகளைச் சுத்தம் செய்யாமலிருத்தல்
 • மது அருந்துதல்
 • வீரியமான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளுதல்
 • எண்ணெய்க் குளியலைத் தவிர்த்தல்

அறிகுறிகள்

 • வாய் நீருறல்
 • வாய் குமட்டல்
 • நாக்கு கசத்தல்
 • உணவில் வெறுப்பு
 • உணவு உண்டாலும் சீரணமாகாமை
 • உடல் வறட்சி, அரிப்பு
 • கண், நகக்கண், முகம் போன்றவை மஞ்சள் நிறமாதல்
 • சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாதல்
 • மலம் இலேசாக தக்கை போலகி, வெளுத்துப் போதல்
 • உடல் சோர்வடைதல்
 • தலை கனத்தல்

 

உணவே மருந்து

 • எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்
 • எண்ணெய், நெய், வெண்ணெய் போன்ற கொழுப்புப் பொருட்களை நீக்க வேண்டும்
 • புளிப்பு, உப்பு இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
 • தாளிப்பு இல்லாமல் பிஞ்சுக்காய்களை எடுத்துக் கொள்ளலாம்
 • கஞ்சி சிறந்த உணவாக அமையும்
 • நீர் விட்டுப் பெருக்கிய மோர் எடுத்துக் கொள்ளலாம்
 • சுடுநீரில் சீரகம் இட்டு, அந்த நீர் ஆறிய பிறகு குடிப்பதற்குப் பயன்படுத்தலாம்.

உட்கொள்ள வேண்டிய சித்த மருந்துகள்

 • கீழாநெல்லியின் இலை, வேர் முதலியவற்றை அரைத்து மோரில் கலக்கி உண்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்
 • அளவு - எலுமிச்சை அளவு, காலை, மாலை இருவேளை உணவிற்கு முன்பாக..
 • மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகலை அரைத்து மோரில் கலக்கி உண்டுவர, மஞ்சள் காமாலை குணமாகும் 
 • அளவு - எலுமிச்சை அளவு, காலை, மாலை இருவேளை உணவிற்கு முன்பாக..
 • சீரகத்தை கரிசலாங்கண்ணிச் சாறில் ஊறவைத்து, பின் உலர்த்தி எடுத்த பொடி 4 கிராம் அளவுடன், 2 கிராம் சுக்குப் பொடி, 2 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து, தினமும் இருவேளை உண்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.
 • ஏலாதி சூரணம் - காலை / மாலை உணவிற்கு முன், பெரியவர்கள் ஐந்து விரல் கொள்ளும் அளவும் சிறியவர்கள் மூன்று விரல் கொள்ளும் அளவும் சாப்பிடலாம்.
 • சீரக சூரணம் - காலை / மாலை உணவிற்கு முன், பெரியவர்கள் ஐந்து விரல் கொள்ளும் அளவும் சிறியவர்கள் மூன்று விரல் கொள்ளும் அளவும் சாப்பிடலாம்.
 • மண்டூராதி அடைக் குடிநீர் - காலை / மாலை உணவிற்கு முன், சுமார் 60 -120 மி.லி. அளவு உட்கொள்ளலாம்.

வெளி மருந்துகள்

கீழாநெல்லித் தைலம்

கீழாநெல்லித் தைலத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்கு தேய்த்து ஊறவைத்து, இளவெந்நீரில் வாரம் இருமுறை குளித்துவர காமாலை நீங்கும். தினமும் தேங்காய் எண்ணெய் தலைக்குத் தேய்ப்பதற்குப் பதிலாகவும் கீழாநெல்லித் தைலத்தைப் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட உணவு முறைகள், எண்ணெய்க் குளியல், அடிப்படையான சித்த மருந்துகள் பயன்படுத்தியும் காமாலை நீடித்தால் அருகிலுள்ள சித்த மருத்துவரை அணுகலாம். உயர்வகை சித்த மருந்துகள் எடுக்கையில் காமாலை நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த இயலும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அடுத்த இதழில் "வாய்ப்புண்"

- டாக்டர் அருண் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles